official-poster

முன்னோட்டம்

‘எதிர்ப்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை, தோல்வியை சந்திக்க மறந்து இறுதியில் சிந்திக்கவே செய்கிறது. வெற்றி மட்டுமே வாழ்க்கை இல்லை என அப்போதுதான் புரிந்துக்கொள்கிறது. இந்த எதிர்ப்பார்ப்பு என்பது மனதுக்கு தானே தவிர, உடலுக்கு ஒருபோதும் அல்ல. ஒருவேளை உடல் எதிர்ப்பார்க்கும் எனில் அது தான் எங்களை போன்ற விபச்சாரியின் வாழ்க்கை என்பது உங்களுக்கு தெரியுமா?

முகத்தில் காண வேண்டிய வெட்கமது அகத்தில் காணும் வாழ்க்கை தான் எங்களின் வாழ்க்கை. ஒரு சாதாரண மனிதன், இரவில் காணும் கனவை நாங்கள் தினந்தினம் நிஜத்தில் காண்கிறோம். இருப்பினும், மனிதன் வாழும் சராசரி வாழ்க்கை என்பது எங்களை போன்றவர்களுக்கு இன்று வரை கனவாகவே இருக்கிறது.

கர்ப்பிணியின் பிறப்புறுப்பை கிழித்துக்கொண்டு பிறக்கும் குழந்தை கூட அவர்கள் வேதனையை புரிந்துக்கொண்டு சில மணி நேரம் அழுகிறான். ஆனால், அந்த அழுகையை எங்கள் வாழ்க்கையில் நாங்கள் ஒருமுறை கூட இதுவரை கண்டதில்லை. எங்கள் பிறப்புறுப்பு தினந்தினம் வேதனை அனுபவித்த போதும்., யாராவது கவலைக்கொண்டு அழ மாட்டார்களா என நான் ஏங்குகிறேன். என் வாழ்வில் அப்படி ஒரு ஆண் மகனை எப்போது நான் காணப்போகிறேன்? எனக்கு தெரியவில்லை.

அப்படி கண்டாலும் அவன் என்னை ஏற்றுக்கொள்வானா? அய்யோ! என் மனம் ஏன் இப்படி பேதலித்து அலைகிறது. இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது. என்னை தேடி எவனோ ஒருவன் வருவான். நான் ஆசையாக வாங்கி கட்டிய இந்த சேலையை அவிழ்த்து அவன் ஆசையை நிறைவேற்றி கொள்வான்.

ஆணுறையை தவிர எங்கள் மீது அக்கறை காட்ட இவ்வுலகில் யார் இருக்கிறார்கள். எனக்கு தெரியவில்லை. என் வாழ்வின் இரவில் நான் சுகத்தை அனுபவிக்கிறேனாம். என்னை கட்டிலில் தள்ளி கிள்ளி விளையாடும் ஆண் மகன் கூறுகிறான். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாதே என என் இதயம் என்னிடம் கூறுகிறது. காரணம், இதயத்தில் நான் வரைந்து வைத்த எண்ணற்ற கற்பனை ஓவியம் இன்றும் என்னை பார்த்து சிரிக்கிறது.

யார் நான்?

என் பெயர் வசிஷ்டா என்பதை தவிர, வேறு எந்த அடையாளத்தையும் என் வாழ்வில் நான் பெறவில்லை. என் பெயருக்கு பின்னால் இருந்த அடையாளத்தையும் அலைகள் அடித்து சென்று அழித்து சென்றது.

கடல் அலைகள் கூட ஒவ்வொரு முறை வித்தியாசமான மன அமைதியை மனிதனுக்கு தருகிறது. ஆனால், என் வாழ்க்கையில் கரை ஒதுங்கிய நான், இன்று வரை எட்டிப்பார்த்தபடி இருக்கிறேன். புதிய அலைகள் மனதை நனைக்காதா என் வாழ்வில் என…

இன்று வரை கரை ஒதுங்கிய படகாய் நானிருக்க, நாலு பேர் நாலு விதமாக பேசிவிடக்கூடாது என்றும் என்னை பற்றிய ரகசியத்தை மறைத்து வருகிறேன். என் அந்தரங்க வாழ்வு அந்தரத்தில் தொங்க, நான் எதை மறைக்கிறேன் என எனக்கே தெரியவில்லை. மறைத்த நினைவுகள் துன்பத்தில் என் முகத்தை மலர செய்கிறது தினந்தினம்.’

இவ்வாறு யோசித்துக்கொண்டிருந்தவளை “வசி…!” என ஒரு குரல் அழைத்தது. “இதோ வந்துட்டேன்மா” என அவளும் புறப்பட தயாராக, தன்னை அவள் கண்ணாடியில் பார்த்து சரி செய்துக்கொண்டாள்.

“வசி! நீ எப்போதுமே அழகு தாண்டி. உன்னை அடிச்சிக்க ஆளே இல்ல…” என சொல்லி புறப்பட்டு கொஞ்ச தூரம் சென்ற அவள், மீண்டும் கண்ணாடியின் அருகில் வந்து நிற்க, அவள் கண்களில் கண்ணீர் ததும்பியது. அவள் கைகள் மெல்ல இடையை நோக்கி செல்ல சேலையை விலக்கி தன் உடலை வெளிச்சம் போட்டு காட்டினாள். உதட்டில் லிப்ஸ் ஸ்டிக் கறை படிந்திருக்க, அவள் மார்பகம் தெரியுமாறு தன் சேலையை சரி செய்துக்கொண்டாள். மனம் பார்க்கும் ஒருவன் மணவாளனாக வரமாட்டானா? எனும் எதிர்பார்ப்பில்…

பதினெட்டு வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே இக்கதை…

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 1

வசிஷ்டா அந்த வரிசையில் நான்காவது ஆளாக நிற்க, அங்கே வந்த அந்த ஆண் மகன் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய தொடங்கி,வசிஷ்டாவிடம் வந்து நின்றது.

ஆம்,

அங்கிருந்த பெண்கள் எல்லோரும் அவளை விட தன் மேனியை ஒரு மடங்கு காட்டியபடி நிற்க, அவர்கள் ஆடையை இறுக்கி அணைத்து மயக்கும் பார்வையை வீசியபடி இருந்தனர். ஆனால், வசிஷ்டா மட்டும் கீழே குனிந்தபடி நின்றாள்.

அவள் ஆடையோ எப்போது அவளை மூட போகிறோம் எனும் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்க, வந்தவன் விலைபேசி அவள் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

“வசி! நீ போய் ரெடி ஆகு…” என பெண் ஒருத்தி குரல் கொடுக்க, அங்கே இருந்த மற்ற விலை மாதுக்கள் வசிஷ்டாவை பொறாமையுடன் பார்த்தனர். என்ன தான் அவர்கள் அனைவரும் சகோதரிகளாக பழகினாலும், இது போன்ற போட்டி என்பது இயல்பாய் இருந்து வந்தது. காரணம், எங்களிடம் இல்லாதது அவளிடம் அப்படி என்ன தான் இருக்கிறது எனும் ஏக்கம் தான்.

அங்கு வந்தவனுக்கு அட்வைஸ் மழையை அந்த முதலாளி பெண் வழங்கி கொண்டிருக்க, சென்ற வசிஷ்டா கண்ணாடி முன்னே நின்று தன் ஆடையை இப்போது மற்ற பெண்கள் போல் விலக்கினாள்.

ஏன் அவள் இப்படி செய்கிறாள்? காரணம் இல்லாமல் அல்ல.

அதாவது வரும் வாடிக்கையாளரை திருப்தி படுத்த வேண்டியது அவசியம். இல்லையேல், அவளுக்கு வருடந்தோரும் சம்பள உயர்வு என்பது கிடைக்காது. ஆம், எத்தனை வாடிக்கையாளர்களை ஒருவர் ஈர்த்து கட்டிலில் தள்ளி சுகத்தை தருகின்றனரோ அவர்களுக்கே அவ்விடத்தில் முன்னுரிமை.

அதுவும் வசிஷ்டா மேல் மற்றவர்களுக்கு பொறாமை ஏற்பட காரணமாக அமைந்தது.

ஆம்,

வசி எப்போதுமே வரும் வாடிக்கையாளரை ஒரு படி மேலாக தெரிந்து வைத்திருந்தாள். அவர்கள் மனம் எப்படி யோசிக்கும் என்பதை நன்கு அறிந்தவள் வசிஷ்டா. ஆனால், மற்றவர்களோ பல படி கீழிறங்கி ஒரு ஆணின் காமத்தை மட்டுமே தூண்ட எண்ணினர்.

இதன் விளைவு, வரும் ஆண் மகன்கள் வசிஷ்டாவை தன் விருப்ப வலையில் விழ வைத்தனர். ஆனால்,அவளோ தன்னை ஒருவன் தேர்வு செய்யும் வரையே சகஜமான முக பாவனையுடன் இருப்பாள். அதன்பின்னர் அவளாகவே முன் சென்று தன்னை அலங்கோலப்படுத்திக்கொள்ள, அவள் மனம் கவர்ந்த ஒருவன் இப்போது வரும் நபராக இருக்க மாட்டானோ என ஏங்கவும் செய்வாள்.

அதனால் தான் இப்போதுகூட அவள் முன்னே அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

ஆனால் மற்றவர்கள் கையோடு வாடிக்கையாளரை அழைத்து செல்வதையே வழக்கமாக வைத்திருந்தனர்.

அவன் அறிவுரைகளை கேட்டுக்கொண்டு உள்ளே நுழைய கடும் அதிர்ச்சி அடைந்தான். ‘கூட்டத்தில் நின்ற பெண்ணா இவள்!’ என மயங்கி விழும் நிலையில் அவன் நிற்க, இவன் நாம் தேடிய ஒருவன் அல்ல என்பதை அவன் பார்வையே அவளுக்கு காட்டிக்கொடுத்தது.

விளைவு, விருந்துக்கு அழைத்த அவள் விருப்பமின்றி தன் உடலை பரிமாறினாள். இதுவரை எத்தனையோ பேர் வந்திருக்கிறார்கள். அத்துணை பேரிடமும் அவள் விருப்பமற்று வேறு வழியற்று சேவை செய்து வர, அதுவே அவளுக்கு நாளடைவில் பழகியும் போனது.

அடுத்த நாள் காலை,

வசிஷ்டா அவசர அவசரமாக குளித்துவிட்டு அழகாக நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற, பார்ப்பவர்களுக்கே ஒரு சந்தேகம் வரும். இவள் விலைமாது தானா? என…

அவ்வளவு அழகாக ஆதவன் ஒளியில் மலர்ந்த தேவதை போல் இருந்தாள் வசிஷ்டா. ஆனால், ஆதவன் எங்கிருந்து வந்தான்? அந்த அதிகாலை பொழுதில்… நிலா மட்டுமே போட்டி போட்டுக்கொண்டு மாடியிலிருந்து மங்கை அவளை பார்க்க,அவள் வெள்ளை சுடிதாரில் நிலவுக்கு போட்டியாக உடை அணிந்திருந்தாள்.

ஆம்,

அவள் ஒரு விலைமாது என்பது அவர்களிடம் வந்து செல்லும் வாடிக்கையாளரை தவிர யாருக்குமே தெரியாது. காரணம், பகல் பொழுதில் விருப்பமான வாழ்க்கையை அவள் வாழ ஆசைப்பட்டதாலே.

வசிஷ்டா தோளில் ஒரு ஹேண்ட் பேக்கை மாட்டிக்கொண்டு மெல்ல அன்ன நடை நடந்தாள். கீழ் போர்சனில் பெண்கள் எல்லோரும் கூடி, அரட்டை அடித்து கொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் தொழிலதிபர் வனஜா அமர்ந்திருந்தாள்.

ஆம், அவள் தான் நிர்வாகமே…

வசிஷ்டா ஏதோ யோசனையுடன் கீழிறங்கி வர, அப்போது ஒருத்தி அவளை வழி மறைத்து, “என்ன வசி! இன்னைக்கு ரொம்ப பிரெஷ்ஷா இருக்க… என்ன! நைட்டு வந்தவன் வேஸ்ட்டா…” என கேட்டபடி கெக்கபெக்க வென சிரித்தாள்.

ஆனால், வசிஷ்டாவோ பதிலுக்கு அவளை பார்த்து முறைத்தாள்.

காரணம், இரவில் மட்டுமே அவள் மற்றவர் விருப்பத்திற்கு இணங்குவாள். பகலில் அவள் விருப்பத்திற்கு மாறாக எதையுமே செய்ய மாட்டாள்.

அந்த விலைமாதுவின் கேள்வியை கேட்டு அனைவரும் சிரிக்க, “ஹேய்! நீ கேட்குற கேள்விக்கு என்னைக்கு அவ பகல்ல பதில் சொல்லிருக்கா. அவளுக்கு வழிய விடுங்கடி…” என கத்தினாள் வனஜா. அப்போதுகூட வசிஷ்டாவுக்கு வனஜா தரும் ஆதரவை கண்டு அங்கிருந்தவர்களின் அடிவயிறு எரிந்தபடி இருந்தது.

வசிஷ்டா மெல்ல வாசல் அருகே சென்று சுற்றும் முற்றும் பார்த்தாள். இதுவும் அவள் வழக்கமாக செய்யும் ஒன்றுதான். ஆம், அவள் ஒரு விலைமாதுவென தெரியாமலிருக்க இதுவும் ஒரு காரணம்.

அவள் விருப்பத்திற்கு கருணை காட்டாத கடவுள், அவள் கேட்காமலே இன்று வரை அவளுக்கு உதவி செய்து வந்தார். அது என்னவென்றால், அவளை கட்டிலில் தள்ளி ருசி பார்த்த எவரும், பகல் வாழ்க்கையில் அவளை கண்டதில்லை. இருப்பினும், அவள் மனதில் ஒரு பயம் என்றுமே இருந்து வந்தது.

காலை 6 மணி,

வசிஷ்டா மற்றவர்களை போல் சாலையில் நடந்து அவர்களுடன் ஐக்கியம் ஆனாள். அவர்கள் சாலையில் பேசிக்கொள்வதை வேடிக்கை பார்த்தபடி அவள் செல்ல, அவளை பின்தொடர்ந்து ஒரு விடலை பருவ கூட்டம் வந்தபடி இருப்பது வழக்கம்.

இவர்கள் பின்தொடர்வது தெரிந்தாலும், அதில் ஒருவன் கூட மனதை பார்ப்பதாக வசிஷ்டாவுக்கு தெரியவில்லை. அதனால் அவள் குனிந்தபடியே சென்றாள். அவள் வழக்கமாக செல்லும் பேருந்தில் ஏறி, அமர்ந்தாள். ஆனால், அப்போதுதான் லேசாக கண்களில் அயர்வு தெரிவதை அவள் உணர, அப்படியே ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி தூங்கினாள்.

அவள் இறங்க வேண்டிய இடத்தின் அறைக்கூவல் ஒலி, அவள் இரவு வாழ்க்கையை கலைத்து நிதானத்தை கொடுக்க, அவசர அவசரமாக அவள் இறங்கினாள்.

“குமிழி குழந்தைகள் காப்பகம்” எனும் பலகை வழக்கம் போல் அவளை வரவேற்றது.

வசிஷ்டா அந்த காப்பகத்தின் உள்ளே நுழைந்தாள். அங்கே குழந்தைகள் பலரும் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருக்க, அதை ரசித்தபடி அவள் முன்னோக்கி நடந்தாள்.

அப்போது ஒரு குரல்…

“வாம்மா வசிஷ்டா!” என அழைக்க, அவள் மெல்ல திரும்பி ஒரு புன்னகை பூத்தாள். “எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியதா இருக்கு இங்க… சம்பளம் இல்லனதும் இஷ்டத்துக்கு வராங்க. இஷ்டத்துக்கு போறாங்க..” என திட்டியபடி ஒரு மூதாட்டி பாத்திரத்தை அள்ளிப்போட்டு துலக்கி கொண்டிருந்தாள்.

அவள் வேகமாக ஓடிச்சென்று, “இங்க கொடுங்கம்மா! நான் பார்த்துக்குறேன்…” என ஒட்டு மொத்த பாத்திரத்தையும் மொத்தமாக குத்தகைக்கு எடுக்க, “வா வசி! நீயாச்சும் இந்த கிழவிக்கு உதவி பண்ணலாம்ல. இருட்டி போச்சுன்னா எங்க போற, எப்போ வர… எதுவுமே உன்ன பத்தி தெரியமாட்டுது..” என சலித்துக்கொண்டு நகர்ந்தாள்.

வசிஷ்டா அமைதியாக வேலையில் மூழ்க, அப்போது அங்கே வந்த பெண் ஒருத்தி, “அம்மா! வினையன் சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கிறான். நீங்க கொஞ்சம் வாங்கம்மா…” என கூப்பிட, “ஹும்…” என அப்படியே பாத்திரத்தை போட்டுவிட்டு ஓடினாள் வசிஷ்டா.

ஒரு அறையில் பேச்சு குளறியபடி குரல் ஒன்று கேட்க, அந்த பிள்ளை பேசுவது வசிஷ்டாவுக்கு மட்டுமே புரிந்தது.

“ஹேய் வினய்! நான் வந்துட்டேன். நீ ஏன் சாப்பிட மாட்டுறன்னு தெரியுமே. இதோ உனக்காக நான் சாக்லேட் வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு…” என ஒரு சாக்லேட்டை எடுத்து, லேசாக கிள்ளி அவன் உதடு ஓரத்தில் வைத்தாள். அதன்பிறகே அவன் பக்கத்தில் நின்ற பெண் வைத்திருந்த உணவை ஊட்டிவிட அனுமதித்தான்.

வசிஷ்டாவோ அந்த பெண் கையிலிருந்து தட்டை வாங்கி அவனுக்கு ஊட்டிவிட, அவள் கண்களிலிருந்து நீர் வழிந்தபடி இருந்தது.

காரணம், வினையன் வேறு யாருமல்ல.

வசிஷ்டாவின் மகன் தான். அவன் ஒரு மன நோயாளி.

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 2

வினய் சாப்பிட்டு முடித்தவுடன் அவனுக்கு வழித்து முத்தம் கொடுத்து வசிஷ்டா தன் பணியை பார்க்க கிளம்பினாள். அவள் மனதில் ஒரு ஏக்கம். அது என்னவென்றால், தன் மனதில் இருக்கும் கவலைகளை யாரிடமாவது கொட்டி தீர்த்துவிடலாம் என நினைத்தாலும், அவள் வாழ்க்கையில் முதன்முறையாக நடந்த தவறு போல் மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என அவள் மிகவும் பயந்தாள்.

அவள் வாழ்க்கையில் நடந்தவற்றை கெட்ட கனவாக நினைத்தாலும், ஏதோ ஒன்றால் எந்நேரமும் அச்சம்பவம் அவளுக்கு நினைவுப்படுத்தியபடியே அவ்வப்போது இருந்து வந்தது.

அப்படி என்ன தான் நடந்தது?

அவள் வாழ்வில் நடந்த சில துளிகளை பாத்திரத்தின் மேல் கைவைத்தபடி யோசிக்க தொடங்கினாள் வசிஷ்டா.

அவள் கல்லூரி வாழ்க்கை அது…

எல்லோரும் அன்று தன்னை வகுப்புக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள, வசிஷ்டாவும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.

“ஹாய் பிரண்ட்ஸ்,

என் பெயர் வசிஷ்டா…” என சொல்ல தொடங்க, அங்கிருந்தவர்கள் அவள் பேசுவதை கேளி செய்தபடி இருந்தனர். காரணம், அவளுடைய ஆசையை உரக்க சொன்னதன் விளைவே ஆகும். அப்படி என்ன சொன்னாள் வசிஷ்டா?

“என் இலட்சியம் சமூகத்துக்கு சேவை செய்வது…” என சொல்ல, அப்போது கடைசியிலிருந்து ஒரு குரல் மட்டும் வந்தது. “அப்புறம் ஏன்மா எஞ்சினியரிங்க் படிக்க வந்த சமூக சேவைக்கும் இன்ஜினியரிங்கும் என்ன சம்பந்தம்…” என சொல்ல அனைவரும் வாய்விட்டு சிரிக்க தொடங்கினர். வசிஷ்டாவுக்கோ அப்போதே வெட்கத்தை பழகிக்கொள்ள ஒரு எச்சரிக்கை மணி அடித்த போதும் அவள் அழுதாள்.

காரணம், அவள் அழகுக்கும் அவள் சொன்ன பதிலுக்கும் சுத்தமாக சம்பந்தமே இல்லை. அந்த வகுப்பிலே மிகவும் அழகாக இருந்ததும் வசிஷ்டாவே என்பதில் ஆச்சரியமில்லை.

முதல் முறையாக வசிஷ்டாவின் மனம், வந்த குரல் நோக்கி சலனப்பட்டது. ஆம், ஒரு பெண் அழகாக இருந்தால் அவள் என்ன கூறினாலும் தலையை ஆட்டிக்கொள்ளும் உலகம் மத்தியில் முதன்முறையாக அவள் வசம் வெறுப்பு சொற்கள் வந்து விழ, அந்த முகம் யாரென பார்க்க எண்ணி சைகை பார்வையை அவன் மேல் வீச, அவன் பார்வையோ எங்கோ சென்றது. அதன்பிறகே அவள் சுடிதாருடன் ஒட்டிய உள்ளாடையை வசிஷ்டா கண்டாள்.

“வசி…….” என ஒரு குரல் கேட்க, நினைவலைகளிலிருந்து அவள் மீண்டாள். ஆனாலும், அவளால் தன் கற்பனை உலகை விட்டு உடனே வெளிவர இயலவில்லை. அதற்கு காரணம், அவள் வாழ்க்கையில் இன்று நடந்து வரும் சம்பவங்கள் தான்.

நீங்களே யோசித்து பாருங்கள். ஒரு பெண் ஆடையை ஒருவன் ரசித்து அதன்பின்னால் என்ன ஆனது என சொல்லாமல் அவள் சென்றால், இந்த உலகம் அவளை முற்றிலும் முடிவு செய்துவிடும். எப்பேற்பட்ட பெண் அவள் என… அதனால், அவளை அழைத்த குரலை நோக்கி என்ன என கேட்டபடி நிஜத்தில் போனாலும், அவள் நினைவுகள் முழுவதும் கல்லூரியில் நடந்த சம்பவத்தின் மேலே இருந்தது.

கல்லூரியில்…

அவன் வீசிய பார்வையில் அக்கறை என்பது துளி அளவுகூட இல்லை என்பதை தெரிந்துக்கொண்ட வசிஷ்டாவின் தேடல் கல்லூரியிலே தொடங்கியது.

விளைவு,

அவள் அவமானம் தாங்காமல் வகுப்பைவிட்டு வெளியேறினாள். ஆனால், உண்மையில் சொல்லப்போனால் அவள் கண்ட அவமானம் என்பது அந்த ஆண்மகன் வீசிய சொற்களிலிருந்து எழவில்லை. அவன் விழுந்து எழுந்த அவள் முதுகுப்பகுதியில் புதைந்து போனது.

யாரோ அவள் பின்புறத்தில் மயிர்கூச்சலை ஏற்படுத்தியது போல் நடக்கும் போதே நெளிந்தபடி செல்ல,அப்போது அவளை நோக்கி யாரோ ஓடிவருவதை வசிஷ்டா கண்டாள்.

அவள் திரும்பி பார்க்க, “ஹேய் வசி! நான் கூப்பிட்டுட்டே இருக்கேன். நீ என்னடான்னா காதுல வாங்காம போயிட்டு இருக்க…” என குரல் கேட்க, வசிஷ்டா நிஜ உலகிற்கு மீண்டும் வந்தாள்.

ஆம், அவள் காப்பகத்தில் குரல் வந்த திசை நோக்கி நடந்தாலும், கல்லூரி அலைகளில் நனைந்த படி இருந்ததால் அழைத்தவரை தாண்டி நடந்து சென்றதை அப்புறம் தான் அவள் உணர்ந்தாள்.

“வசி! இன்னைக்கு நைட் நம்ம காப்பகத்துல கொஞ்சம் வேலை இருக்குமா. உன்னால இருக்க முடியுமா?” என ருக்மணி அம்மாள் கெஞ்ச, வசிஷ்டாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

ருக்மணி அம்மாள் யார்?

ருக்மணி அம்மாள் தான் குமிழி குழந்தைகள் காப்பகத்தின் உரிமையாளர். இன்று வரை சேவையாக அந்த காப்பகத்தை நடத்தி வந்தாலும், அவள் ஒன்றும் அவ்வளவு வசதி கொண்டவள் அல்ல. அவளுக்கு உதவவும் யாரும் முன்வரவில்லை.

வசிஷ்டா – ருக்மணி அம்மாள் முதல் சந்திப்பு

ஒரு நாள்,

சமூக சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள் இங்கே அணுகவும் என ருக்மணி வெள்ளை காகிதத்தை அட்டையாக தயார் செய்து ஆங்காங்கே கொடுக்க, யாருமே விருப்பத்தை பதிவு செய்யவில்லை.

ருக்மணி அம்மாள் செயல்களை உற்றுநோக்கிய வசிஷ்டா அவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அட்டையை வாங்கி விநியோகம் செய்ய தொடங்கினாள். அவள் அழகுக்கு மயங்கி ஆங்காங்கே அட்டைகளை வாங்கி கொண்டு வழியவும் செய்தனர்.

விளைவு,

இரவில் விருப்பமற்று செய்த ஒரு வேலையை ருக்மணி அம்மாளுக்காக பகலிலே வசிஷ்டா செய்ய தொடங்கினாள். ஆம், அவள் ஆடையை விலக்கி கவர்ச்சிக்காட்ட, அவள் கையில் இருந்த அட்டைகள் அனைத்தும் அங்கும் இங்குமாக சென்று சேர்ந்தது.

வசிஷ்டா மீண்டும் தன் ஆடையை சரிசெய்துக்கொண்டு ருக்மணி அம்மாளிடம் போனாள். அவள் வெறுங்கையை வீசிக்கொண்டு வர, ருக்மணி அம்மாளுக்கு அளவுக்கடந்த ஆனந்தம்.

“எப்படிம்மா!இந்த கிழவியால முடியாதத நீ செஞ்ச…” என கேட்க, “அம்மா, நீங்க உங்கள கிழவின்னு நினைக்கிறதுனால தான் இந்த பிரச்சனை. குமரியா நினைங்க. மேக் அப் போட்டா, நீங்க என்னவிட அழகா இருப்பீங்க…” என வசிஷ்டா சொல்ல, ருக்மணிக்கு அவள் எதார்த்த பேச்சு பிடித்திருந்தது.

“வேண்டாம்மா! நான் கிழவியாவே இருக்கேன்…” என அவளும் பதிலுரைக்க, “அதுவும் சரி தான்மா. கிழவிக்கு கூட இந்த உலகத்துல பாதுகாப்பு இல்ல..” என வசிஷ்டா கூறினாள்.

சமூக சேவை விருப்பம் கொண்டவள் வசிஷ்டா என்பது அவள் பேச்சிலே தெள்ள தெளிவாய் ருக்மணிக்கு புரிந்தது.அதனால், “என்னம்மா பண்ணுற? எங்க காப்பகத்துல உன்ன மாதிரி ஒரு பொண்ணு இருந்தா எனக்கு உதவியா இருக்கும்…” என ருக்மணி சொல்ல, “அம்மா, நான் எப்போவோ உங்க காப்பகத்துல நுழைஞ்சிட்டேன். என்னோட முதல் வேலைய நீங்க கொடுத்திங்க. நான் முடிச்சிட்டேன்…” என சிரித்தாள். ருக்மணி அம்மாளுக்கு அவள் சொல்வதன் அர்த்தம் நன்றாகவே புரிய (பேப்பர் விநியோகம் செய்தது), அவளும் பதிலுக்கு சிரித்தாள்.

“உன்னோட அழக பார்த்து எல்லோரும் அட்டையை வாங்கிட்டு போனாலும் போற வழியில, போட்டு போயிடுவாங்க…என்னோட அனுபவத்துல சொல்றேன்.” என்றாள் ருக்மணி அம்மாள். அதற்கு வசிஷ்டா, “அம்மா, கவலைப்படாம போங்க… நாளைக்கு காலைல நான் அங்க இருப்பேன்..” என புதிராய் பேசி புறப்பட்டாள்.

அன்று இரவு,

வசிஷ்டா வழக்கம்போல் விருந்துக்காக இலை போட்டு காத்திருக்க, வந்தவன் அவளை கட்டிலில் தள்ளி விளையாடினான். ஆம்,அவளின் அழகு அவனை மயக்க, அன்று என்னமோ வசிஷ்டாவின் இதழில் புன்னகை வடிந்தபடி இருந்தது. அதனை அவளின் சம்மதமாக எடுத்துக்கொண்ட அவன், அவள் விருப்பமின்றி இதழ் குடித்து ருசித்தான்.

ஆனால், வசிஷ்டா முகத்தில் சிரிப்பு தோன்ற முக்கிய காரணம், குமிழி குழந்தைகள் காப்பகத்துக்கு நாளை அவள் செல்ல போவதை நினைத்தே ஆகும்.

மறுநாள் காலை,

வசிஷ்டா முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவள் சந்தோஷத்தை அவ்வளவு எளிதில் வார்த்தைகளால் வருணிக்க முடியாது. பெண் பார்க்க வந்த ஒருவன், அவள் விருப்பம் போல் அமைந்தால் எப்படி ஒரு சந்தோசம் கிடைக்குமோ…அப்படி ஒரு சந்தோசம் அவள் முகத்தில்…

வனஜா விசிறியால் விசிறியபடி அமர்ந்திருக்க, அவளிடம் வந்தாள் வசிஷ்டா.

“என்ன வசி! எங்க கிளம்பிட்ட? கஸ்டமர் வர நேரமாச்சே… நீ ரெடி ஆகல” என கேட்க, அவள் பாஷையில் ரெடி ஆவது என்பது அரைகுறை ஆடை அணிந்து வாடிக்கையாளருக்காக காத்திருப்பதே ஆகும். அப்போது வசிஷ்டா, முழு நேர பணியை உடல் ரீதியாக அனுபவித்தாள். காரணம், மனதில் இருந்த ஆசை அதன் முன்பு முதல் கனவாகவே இருந்து வந்தது.

வசிஷ்டா சொல்லை மெல்ல இழுத்தாள். “அது வந்து அம்மா…” என அவள் இழுக்க, “என்ன வசி! உடம்பு ஏதும் சரியில்லையா?” என அவள் மார்பு அருகில் கையை கொண்டு செல்ல, “இல்லம்மா. நல்லா தான் இருக்கேன். எனக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு. எனக்கு பிடித்த வேலை…” என சொல்ல, வனஜாவுக்கு தூக்கி வாரி போட்டது.

ஆம், வசிஷ்டா அழகால் தான் அவளுடைய வியாபாரமே பாதி ஓடிக்கொண்டிருக்கிறது. வசிஷ்டாவுக்காக வீட்டிலிருந்து ஏங்கி வரும் ஆண் மகன்கள், அவள் அன்றைய நாளில் தனக்கு இல்லை என்றவுடன் அப்படி ஒரு ஏமாற்றம் நிரம்ப செல்வார்கள். லாட்டரி டிக்கெட் அடிக்காமல் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான். அடுத்த நாள் மறுமுறையும் அவளுக்காகவே வந்தவர்களும் எத்தனையோ பேர்.

அதனால் வனஜா யோசித்தாள்.

“என்ன வசி இப்படி சொல்லுற…எங்கள விட்டு போக போறியா?” என அதிர்ச்சியுடன் கேட்க, “இல்லம்மா, இது எனக்கு புடிச்ச ஒரு வேலை. ஆனால், சம்பளம் தரமாட்டாங்க.” என சொன்ன போதும் அவள் கண்களே வனஜாவுக்கு வசிஷ்டா தீர்மானத்தை தெளிவுபடுத்தியது.

“ஆனால், பரவாயில்லம்மா. நான் பார்த்துக்குறேன். நைட் ஆனா! நானே வந்துடுறேன்… ப்ளீஸ்மா. அதோட, எவ்வளவு நாளைக்கு தான் என் பையன இங்க வச்சிட்டு இருக்க முடியும். காப்பகத்துல சேர்த்துடுறேன்மா. அம்மாவோட குரல்ல பிள்ளைங்க எப்படியெல்லாமோ கேட்க ஆசைப்படும். ஆனால், வினய் நைட்டுல என் குரல தப்பா கேட்டு வளர்ந்துடுவானோனு பயமா இருக்கு. அவன ஹாஸ்டல்ல விடுறதுதான் சரிம்மா.” என சொல்ல, வனஜா கண்கள் கலங்கியது. இறுதியில் வசி வேண்டுகோளுக்கு இணங்க செவி சாய்த்தாள் வனஜா.

இவற்றை எல்லாம் நிமிட பொழுதில் வசிஷ்டா யோசித்து முடிக்க, இன்று இரவு காப்பகத்தில் தங்குவது குறித்து என்ன பதில் சொல்ல போகிறாள் வசி என காத்துக்கொண்டிருந்தாள் ருக்மணி அம்மாள்.

என்ன சொல்ல போகிறாள் வசி?

வசி வாழ்க்கையில் நடந்தது என்ன? கல்லூரி வாழ்க்கை என்ன ஆனது?

பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 03

ருக்மணி அம்மாளிடம் தான் சொன்ன பதிலையும் அதற்கு அவள் கூறியதையும் நினைத்தபடி ஏக்கத்துடன் நடந்து சென்றாள் வசிஷ்டா.

ஆம்,

காப்பகத்தில் நடந்தது என்னவென்றால்…

ருக்மணி, வசிஷ்டாவின் பதிலுக்காக காத்திருக்க வசிஷ்டாவோ கண்களில் வழிந்த நீரை ருக்மணிக்கு தெரியாததுபோல் மனதளவில் மறைத்துக்கொண்டு பதிலளித்தாள்.

“இல்லம்மா… நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். நான் வேலை பார்க்குற இடம் ரொம்ப வித்தியாசமானதும்மா. நான் ஒருநாள் போகலன்னாலும் என்ன வேலைய விட்டு நிறுத்திடுவாங்க. நான் போயிதான் சமையல் செஞ்சி பரிமாறனும். அதுவும் அவங்க ரொம்ப பெரிய இடம் வேற… நிறையா புதுசு புதுசா ஆள் வருவாங்க. அவங்களுக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சிக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி விருந்து வைக்கனும்…” என வசிஷ்டா சொல்ல, ருக்மணி அவள் சொல்லுக்கு தலையை மட்டும் ஆட்டியபடி நின்றாள்.

ஆனால், வசிஷ்டா ருக்மணியிடம் சொன்ன அனைத்துமே உண்மை தான். ஆம், இரவில் முந்தானை விரித்து காத்திருக்க, வருபவர்களுக்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக்கொண்டு அழையா விருந்தாளிகளுக்கு அவள் விருந்து வைக்க வேண்டியதாக இருக்கிறது. அதைத்தான் வீட்டு வேலையாக மாற்றி வசிஷ்டா கூறினாள்.

அவள் சொன்னது வேண்டுமென்றால் பொய் காரணமாக இருக்கலாம். ஆனால், அவள் சொன்ன அனைத்தும் உண்மையே. ருக்மணியை பொறுத்தவரை அவள் ஏதோ ஒரு பணக்கார வீட்டில் பணிவிடை செய்யும் இரவு பெண். சமையல் செய்வது, துணி துவைப்பது இது தான் அவள் இரவு உலகம் என ருக்மணி அம்மாள் நினைத்துக்கொண்டாள்.

ஆனால், எல்லோருடைய வாழ்க்கையிலும் அணிந்திருக்கும் ஆடை மடிப்பு கலையாமல் வாழவே மகிழ்வர். இவள் வாழ்விலோ மடிப்பு கலைந்து இருக்க, அவள் உடலுடன் மல்யுத்தம் புரிய வரும் ஒருவன் கடைசியில் மனதார வனஜாவை தாண்டி சென்றால் மட்டுமே வசிஷ்டா மகிழ்வாள்.

“சரிம்மா!இதுக்கு மேல உன்ன நான் கட்டாயப்படுத்தல வசி…நீ எப்போதும் போல காலைலயே வந்துடு. அப்படி என்ன தான் அந்த வீட்டுக்காரம்மா உன்ன அதிசயமா வேலை வாங்குறாளோ…” என சலித்து கொண்டாள் ருக்மணி அம்மாள்.

ஒருவேளையாக அவளை சமாளித்து வினையனை பார்த்துக்கொள்ளுமாறு கூறி வசிஷ்டா புறப்பட, “வசி!” என வேகமாக கத்தினாள் ருக்மணி. அவள் மெல்ல திரும்ப, “பார்த்தும்மா! பணக்கார வீட்டுல வேலை பார்க்குற… அங்க வர்றவங்க அப்படி இப்படி இருப்பாங்க. நம்மள மாதிரி ஏழை தான் அவங்களுக்கு தொக்கு. எப்போதுமே ஜாக்கிரதையா இரு..” என சொல்ல, தலையை ஆட்டிவிட்டு வேகமாக திரும்பியபடி அழுதுக்கொண்டே சென்றாள்.

வசிஷ்டா மனதில் இருப்பதை புரிந்துக்கொண்டது போல் இருந்தது ருக்மணியின் அந்த கடைசி வார்த்தை.எங்கே வசிஷ்டாவின் அழகால் அந்த பணக்கார வீட்டிற்கு வந்து செல்லும் ஆண்கள் பாலியல் தொல்லை கொடுக்கக்கூடுமோ என பயந்து ருக்மணி அம்மாள் கூறினாள். பாவம், இவள் விதியால் விழுந்த பாலியல் தொழிலாளி என்பது அவளுக்கு தெரியாதல்லவா.

அந்தி சாயும் மாலை நேரம்,

வசிஷ்டா பேருந்துக்காக காத்திருக்க,அவள் மீது தான் அங்கே நின்ற அனைத்து ஆண் மகன்கள் பார்வையும் இருந்தது. இது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். ஆனால், அவள் மனதில் அப்போது இருக்கும் அவமான சிதறலை வருணிக்க வார்த்தையே இவ்வுலகில் இல்லை.

ஆம்,

அவள் அழகை யாரோ பலர் ரசிக்க, இவர்களுள் யாரேனும் தன்னை விருப்ப வலையில் விழ வைத்து இரவில் விருந்துண்டு சென்றவராக இருக்குமோ? என அவள் மனம் எந்நேரமும் பதட்டம் நிரம்ப காணப்படும். எங்கே தான் ஒரு விபச்சாரி என்பது தெரிந்துவிடுமோ என மிகவும் பயந்தபடி இருப்பாள் வசிஷ்டா.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால்,

இதுவரை எத்தனையோ ஆண்கள் இரவில் அவளை தொட்ட போதும் ஒருமுறைகூட அவள் மனம் கற்பு பற்றி கேள்வி எழுப்பியதில்லை. ஆனால், அவள் வாழ நினைத்த வாழ்வை வாழும் பகல் பொழுதில் அவள் அழகை பலர் ரசிக்க, அப்போது ஆயிரம் பேர் பார்வையால் தன்னை கற்பழிப்பதை போன்று மனதில் அழுது புழுங்கி தவிப்பாள்.

அவள் நின்ற பேருந்து நிழற்குடை மட்டுமே அவளுக்கு நிழலை தர, அங்கே நின்றவர்கள் உடல் சூட்டின் உஷ்ணம் தாங்காமல் எட்டி பார்த்தபடி நின்றாள் வசிஷ்டா.

உயிருள்ள மனிதன் தான் அவள்மேல் மனித நேயமற்ற பார்வை வீசுகிறான் என்றால், உயிரில்லா பொருளுக்கும் மோகமா. ஆம், அவள் அழகில் மயங்கிய பேருந்து வழிந்துக்கொண்டு சற்று நேரத்தில் அவளை உரசியபடி வந்து நின்றது.

வசிஷ்டா பேருந்தில் ஏறி அமர, அவளை பார்த்தபடியே விசில் பறக்க பேருந்தும் புறப்பட்டது.

அந்த பேருந்தில் இருந்தவர்களுள் பாதி பேர் வயதில் பெரியவர்கள் என்பதால், அவள் நிம்மதியாக பயணம் செய்தாள். வசிஷ்டாவுக்கு சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்தபடி செல்ல ஆசை என்றாலும், எங்கே தன்னை வேறு யாரும் பார்த்துவிடக்கூடுமோ என்பதால் பொதுவாக பயணத்தில் வேடிக்கை பார்ப்பதை தவிர்ப்பாள்.

ஆனால், அன்று என்னமோ அவள் மனது இயற்கை சலனம் நிரம்ப காணப்பட, வேடிக்கை பார்க்கவும் ஆசை கொண்டது.

விளைவு,

முதன் முறையாக அவள் பார்வை ஜன்னல் ஓரத்தின் வழியே வழிந்துக்கொண்டிருந்தது. ‘இன்று என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் பயணம் முழுவதும் பார்ப்பவற்றை எல்லாம் ரசித்தபடி செல்ல வேண்டுமென…’ அவள் முடிவு எடுத்தபடி செல்ல, ஏதோ ஒரு மாற்றம் அவள் உடலில் தெரிந்தது.

இதுவரை ஆடை அவிழ்த்து அவளை சுதந்திர பறவையாக மாற்றிய பலர் மத்தியில், முதன்முறையாக மனதை அவிழ்த்து சிறகடித்து பறக்க உதவி செய்தாள் இயற்கை அன்னை.

அப்போது,

பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்க, இவள் வேடிக்கை பார்ப்பதை ஒருவன் பார்த்துவிட்டான். வசிஷ்டாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்த அவள் மனம், ‘ஏன் பார்த்தோம்? நாம் ஒரு விபச்சாரி என்பதை வெளிச்சம் போட்டுக்காட்ட நாமே முயன்றது ஏனோ?’ என ஏங்க தொடங்கியது. அவனோ பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக இருந்தான்.அவன் தோளில் ஒரு பேக் மாட்டி இருந்தான். அவனை நேரடியாக பார்க்க திராணி அற்ற வசிஷ்டா, ஜாடையாக அவனை பார்க்க, அப்போதும் தன்னையே அவன் வைத்த கண் எடுக்காமல் பார்ப்பதை அவள் ஓரளவுக்கு தெரிந்துக்கொண்டாள். ‘எப்போது பேருந்து எடுப்பார்கள். எல்லோரும் எப்போது இறங்கி முடிப்பார்கள்?’ என அவள் காத்திருக்க, அவள் நினைத்ததை புரிந்துகொண்டதுபோல் பேருந்து புறப்பட்டது.

ஒருவேளை, பேருந்து வழுக்கி விழுந்த அவள் அழகின் மேல் அவன் விழுந்துவிடுவானோ எனும் பொறாமையில் தான் அவன் மூஞ்சில் கரியை (புகையை) பூசி அப்பேருந்து கிளம்பியதோ? அது அந்த பேருந்து மனதுக்கே வெளிச்சம்.

வசிஷ்டா ஒரு பெருமூச்சி விட்டு அமைதியாக உட்கார, ‘அவன் ஏன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். நான் விபச்சாரி என்பதை அவன் அறிந்தவனோ…’ என அவள் யோசித்துக்கொண்டிருக்க, கொஞ்ச தூரம் சென்ற பேருந்து திடீரென பிரேக் அடித்து நின்றது.

ஒருவன் வேகமாக மூச்சிறைக்க ஓடி வந்து வசிஷ்டாவின் அருகில் குனிந்தபடி நிற்க, அவள் தன் உடை சரியாகத்தான் இருக்கிறதா? என்பதை அவசரமாக தெரிந்துக்கொண்டாள்.

அவனோ அவள் பின் சீட்டில் ஹாயாக அமர்ந்து அவளை பார்த்தபடியே இருந்தான். வசிஷ்டாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ‘ஏன் என் மனம் இன்று என் பேச்சை கேட்காமல் வேடிக்கை பார்த்தது? நான் வேடிக்கை பார்க்காமல் வந்திருந்தால் இவன் என் பக்கத்தில் இவ்வளவு நெருக்கமாக பின் அமர்ந்து என் மூச்சுக்காற்றை சுவாசிப்பானா?’ என அவள் மனதில் குழப்ப அலைகள் அடித்துக்கொண்டிருக்க, “உன்ன எங்கயோ பார்த்து இருக்கேனே…” என்றான் அவன்.

தான் தினமும் விரிக்கும் முந்தானை விருந்தை பற்றி தான் இவன் பேசுகிறான் என அவளோ முடிவே செய்துவிட்டாள். ‘என்ன செய்வது? இவனை நாம் எப்படி சமாளிக்க போகிறோம்? இனிமேல்,நான் பேருந்தில் நிம்மதியாக எப்படி செல்ல முடியும்? இதுவரை என் கண்களை பார்த்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் ஒரு படி கீழிறங்கி இடையை கிள்ள நினைப்பாரே! ஒருசிலர் அதையும் தாண்டி எனக்கு இரக்கமின்றி இரவில் இம்சை கொடுக்க நினைப்பாரே. இதற்கு தான் நான் இன்று வந்தேனோ? இதற்கு பேசாமல் காப்பகத்திலேயே இருந்திருக்கலாமே…’ என அவள் யோசிக்க, அவனோ அவள் நினைவலைகளை கலைப்பது போல், கையை அவள் முகம் நோக்கி அசைத்தான்.

“ஹேய்,உன்ன எங்க பார்த்தன்னு ஞாபகம் வந்துட்டு…” என வேகமாக கத்த, பேருந்தில் இருந்த எல்லோருடைய பார்வையும் அவர்கள் இருவர் மீதே சென்றது. வசிஷ்டாவுக்கோ இவன் என்ன சொல்ல போகிறான் என தெரியாமல் பயத்துடன் பரிதவித்தாள்.

அவள் மெல்ல வார்த்தைகளை விழுங்கியபடி, “எங்கககக….என்ன பார்த்திங்க?” என கேட்க, “ஹும் சொல்றேன். என்ன அவசரம்?” என பேருந்து முன்னோக்கி செல்வதையே பார்த்து கொண்டிருந்தான்.

அவளோ அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

திடீரென்று,

“ஏய், என்னோட வீடு வரைக்கும் வந்துட்டு போறீயா?” என அவன் கேட்க, வசிஷ்டா முடிவே செய்துவிட்டாள். ‘இவனுக்கு நான் ஒரு விபச்சாரி என்பது தெரிந்துவிட்டது. அதனால் தான் இரவு அழைக்கிறான். நான் இவ்வளவு நாட்கள் பயந்த விஷயம் இன்று நடந்துவிட்டது.’ என மனதில் நினைத்துக்கொண்டே வார்த்தையற்று அமர்ந்திருந்தாள்.

அவன் பார்வை எதையோ சிந்தித்தபடி இருக்க, வசிஷ்டா ஒரு முடிவெடுத்தாள்.

“இவன் என்னை கூப்பிடுகிறான். அதை நான் மறுத்து அழுவதைவிட, இன்று இரவு இவன் சொல்லும்படி கேட்டு, என்னை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என கெஞ்சி கேட்டு பார்க்கலாம். நான் இவன் விருப்பத்தை நிறைவேற்றினால், என் விருப்பத்தை இவன் கண்டிப்பாக நிறைவேற்றுவான்…” என நினைக்க, அவன் கைகளை தட்டினான். “என்ன யோசனை? அடுத்த ஸ்டாப் தான். இறங்கு சரியா?” என்றான்.

அவன் பேசுவதில் பணிவு என்பது சுத்தமாக காணப்படவில்லை. அதற்கு மாறாக அதிகாரமே தெரிய, வேறு வழியற்று அவள் அவனுடன் இறங்கினாள்.

அவன் முன்னே அவசர அவசரமாக செல்ல, பின்னோக்கி நடந்து வந்தபடி வசிஷ்டாவும் இருந்தாள். “ஒரு நிமிசம், நீ இந்த மரத்து மறைவுல நில்லு. நான் போய் வீட்டு கதவை திறந்துட்டு கூப்பிடுறேன்.” என சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி வீட்டு கதவை திறந்தான்.

அவன் மெல்ல சைகை காட்ட, வசிஷ்டாவும் அந்த வீட்டுக்குள் தயக்கத்துடன் நுழைந்தாள். அவளுக்கு எதிராக இருந்த கடிகாரத்தில் மணி சரியாக 6 ஆனது. ‘இவன் என்ன சொன்னாலும் கேட்டுவிட்டு சீக்கிரம் கிளம்பி விட வேண்டும்…’ என அவள் மனதில் நினைத்துக்கொண்டாள்.

அவள் தயக்கத்தை உணர்ந்த அவன், “பயப்படாத… வீட்டுல யாருமில்ல. 8.30 க்கு வந்துடுவாங்க. நான் மெடிக்கல்
வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்…” என புறப்பட்டான். வசிஷ்டா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். அது ஒன்றும் அவ்வளவு வசதியான வீடாகவும் தெரியவில்லை. ஆனாலும், அந்த இடம் ஏதோ ஒரு பாதுகாப்பை அவளுக்கு தந்தது.

அவன் தோலில் மாட்டியிருந்த பையை திறந்து பார்க்கலாம் என அவள் நினைத்தாள். ஆம், எப்படியும் இன்னும் 2 மணி நேரம் அவன் நம்மை என்ன வேண்டுமென்றாலும் செய்வான். அதனால், அதற்கு பலனாக இவன் யாரென்பதை நாம் ஏன் தெரிந்துக்கொள்ளக்கூடாது என அவள் மனம் நினைக்க, சட்டென அந்த பேக் ஷிப்பை இழுத்து பார்க்க, வெறும் புகைப்படமாக விழுந்தது.

எல்லாமே அந்தரங்க புகைப்படங்கள். வெவ்வேறு கோணத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு புகைப்படங்கள். வசிஷ்டா 100 சதவிகிதம் உறுதியான மன நிலையை கொள்ள, அவன் மெடிக்கல் சென்றதற்கான அர்த்தத்தை புரிந்துக்கொண்டாள். அதனால் சுடிதார் ஷாலை களைந்து மெல்ல சுடிதார் பொத்தானில் கையை வைக்க, அப்போது அவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. என்ன நினைத்தாலோ வசிஷ்டா. சட்டென அவள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தன் ஆடையை சரி செய்துக்கொண்டாள்.

அவன் கையில் ஒரு பையுடன் நுழைய, சிதறிய புகைப்படங்களை கண்டுவிட்டான். அவனுக்கு தூக்கி வாரி போட, அவசர அவசரமாக அவற்றை கொத்தாக அள்ளி வைத்து, என்ன செய்வதென தெரியாது நின்றான்.

வசிஷ்டாவும் அமைதியாக நிற்க, இவன் என்ன செய்ய போகிறான் என தெரியாமல் தவித்தாள். அவனோ, “ஸாரி! நீங்க என்னோட பேக்க, திறப்பீங்கன்னு நான் சுத்தமா எதிர்பார்க்கல. நீங்க கிளம்புங்க! நான் இன்னொரு நாள் உங்கள மீட் பண்றேன்…” என சொல்ல, வசிஷ்டாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவன் செயல்கள் எல்லாமே விசித்திரமாக இருந்தது. பொதுவாக அந்தரங்க புகைப்படத்தை பார்த்த ஒருவன் இப்படி நடந்துகொள்வது எப்படி? அதுவும் ஒரு விபச்சாரியிடம் என ஒன்றும் புரியாமல் அவள் தவிக்க, ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. தான் விபச்சாரி என்பதால் இவன் நம்மை வீட்டுக்கு அழைக்கவில்லை என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது. ஆனால், அவன் யாரென தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டாள் வசிஷ்டா. ‘என் அழகை மட்டுமே பார்த்து அணைத்த உலகத்தின் மத்தியில், இப்படி ஒருவனா?’ என அவன் மீது தான் வைத்திருந்த தவறான எண்ணத்தை நினைத்து தலைகுனிந்தாள் வசிஷ்டா.

“ஸாரிங்க! நான் வேணும்னா உங்கள டிராப் (Drop) பண்ணவா?” என கேட்க, அவன் என்ன சொன்னாலும் அதற்கு தலை ஆட்டினாள் வசிஷ்டா. அதாவது நாம் வைக்கும் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்போது அதைவிட பெரிதாக எதுவும் நடக்காத வரை நம் மனம் ஒருவித மாற்றத்தையும் சந்திப்பதில்லை. ஒருவன் வீட்டுக்கு ஒரு பெண்ணை சட்டென அழைத்து, சுற்றும் முற்றும் பார்த்து மெடிக்கல் சென்று என எல்லாமே அவளை ஒரு விபச்சாரியாக பாவித்த கோணத்தில் நடந்து முடிக்க, ஒரு வார்த்தையில் ஒட்டு மொத்த உலகத்தில் இதுவரை அவளுக்கு கிடைக்காத ஒரு உணர்வை அவன் தந்திட்டான் என்றதும், இவன் இதற்கு மேல் என்னிடம் அப்படி என்ன தான் எதிர்பார்த்திட முடியும்?’ என அவள் முதன்முறையாக ஒரு ஆண் அருகாமையில் இருந்து தெளிவான முகத்துடன் இருந்தாள்.

அவனோ, “சரி இருங்க! நான் என் பிரெண்டு கிட்ட பைக் வாங்கிட்டு வரேன்.” என புறப்பட, “இல்ல, வேண்டாம்ங்க… நானே போயிடுவேன். ஒரு முகம் தெரியாத ஒருத்தங்க கூப்பிட்டதும் அவங்க யாருன்னு தெரிஞ்சிக்க தான் உங்க பேக்க ஓபன் பண்ணி பார்த்தேன். ஸாரி! நான் செஞ்சதும் தப்பு தான்…” என அவள் கூறினாள்.

அவன் தலைக்குனிந்தபடி, “எப்படியும் போட்டோஸ் பார்த்துட்டு என்ன தப்பாவே முடிவு பண்ணியிருப்பீங்க. நான் இப்போ எதுவும் விளக்கம் கொடுத்தா, அதுவும் தப்பா ஆகிடும். அதனால, நீங்க எப்போ ப்ரீனு சொல்லுங்க. நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம்…” என அவன் சொல்ல, “இல்லங்க… உங்கள நான் தப்பா நினைக்கல. நாம சந்திப்பு சீக்கிரம் அமையனும்னு நான் ஆசைப்படுறேன். இது நடக்குமா?” என கேட்க, அவன் மெல்ல சிரித்தான்.

“கண்டிப்பா! மீட் பண்ணுவோம். அதுக்காக நீங்க போன் நம்பர்லாம் தர வேண்டாம்.” என சொல்ல, அவன் செயல்கள் எல்லாமே ஏதோ ஒன்றின் பிரதிபலிப்பாக இருந்தது. இவ்வளவு நாட்களாக கண்ணாடியை பார்த்து தன் ஆடையை அவள் விலக்கிவிடும்போது அவள் தன் வாழ்வில் வர விரும்பிய மணவாளனை நினைப்பது வழக்கம்.

அந்த ஆசைகளுக்கு முகம் கிடையாது. மனம் மட்டுமே இருந்து வந்தது.

அவளுடைய ஒட்டு மொத்த ஆசையின் உருவமாக அவன் இருந்தான்.

அதன் விளைவு,

“உங்க பேரு” என அவள் கேட்க, அவனும் சிரித்துக்கொண்டே…”கருண்”, என்றான். “என் பேரு வசிஷ்டா. ஓகே கருண். லேட்டா ஆச்சு. நான் கிளம்புறேன்.” என சொல்லி அவள் புறப்பட, கொஞ்ச தூரம் சென்ற அவளை பார்த்து, “நைஸ் நேம்…” என கத்தினான். இந்த முறை அவள் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே பயந்தபடி சென்றாள்.

முதன்முறையாக ஒருவன் மனதால் அவள் வெட்கம்
அலங்கரிக்கப்பட அதையே தன்னை காக்கும் ஆடையாக உடுத்திக்கொண்டு அவள் புறப்பட்டாள்.

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 04

கருணின் நினைவுகளுடன் நிஜத்தில் அவள் நிற்க, வழக்கம் போல் வந்தவர்களால் தேர்வு செய்யும் பணி இனிதே தொடங்கியது. வசிஷ்டாவுக்கு இன்று ஒரு எதிர்ப்பார்ப்பு என்பது மனதில் நிரம்ப காணப்பட, அது என்னவென்றால் வந்தவர்கள் யாரும் தன்னை விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடாது என வேண்டிக்கொண்டாள்.

காரணம்,

கருண், அவள் உடலை ஸ்பரிசிக்க மறந்த போதிலும் மனதளவில் ஊடுருவி உள்ளத்தை கொள்ளை கொண்டான். அவன் நினைவுகள் ஒருபக்கம் அவள் மனதில் நீரோடையாய் ஓடிக்கொண்டிருக்க, வந்தவர்கள் வசிஷ்டாவை விட்டு வேறு சிலரை தேர்வு செய்தனர்.

அவளுக்கோ அளவுக்கடந்த மகிழ்ச்சி. ஆம், அவள் விரும்பியதும் அதுதான் அல்லவா! வசிஷ்டாவை எல்லோருமே இன்று விகாரமாக பார்த்தனர். ஏனென்றால், எப்போதும் அரை நிலையில் தன்னை அலங்கரித்து அவள் வர, அதனால் அவள் வசம் யாரேனும் ஈர்க்கப்படுவர். ஆனால், இன்று கதவை தாளிட்டு அவள் காட்டும் மொத்த உடலை வெளிப்படையாக காட்டியபடி மற்றவர்களை போல் நின்றாள் வசிஷ்டா.

வனஜாவுக்கோ இவள் செயல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம், வருபவர்கள் விருப்பத்தை ஒருவரிடம் பதிவு செய்தால் மட்டுமே அந்த இடத்தில் அவர்களுக்கு மரியாதை அதிகமிருக்கும். இன்று வசிஷ்டா அதை செய்ய தவறி இருந்தாள்.

காரணம், அவள் உடலை இன்று முழுவதும் தீண்ட துடித்தவனென நினைத்து அவள் மனதை ஒட்டுமொத்தமாக பறிக்கொடுத்த கருண் தான் அவள் நினைவில் வந்து சென்றான்.

“என்னாச்சு வசி? உன் முகத்துல ஏதோ மாற்றம் தெரியுதே?” என வனஜா கேட்க, அவள் வனஜாவின் கைகளை பிடித்து தன் கழுத்தை நோக்கி கொண்டு சென்றாள். வசிஷ்டா மார்பின் அருகாமையில் அவள் கைகள் தீண்ட, ஏதோ ஒரு காய்ச்சலால் அவள் உடல் கொதிப்பதை வனஜா உணர்ந்தாள்.

“அய்யோ! என்ன இப்படி கொதிக்குது…நம்ம டாக்டர வர சொல்லவா?” என வனஜா கேட்க, “அதெல்லாம் வேண்டாம்! இது தானா சரி ஆகிடும். நான் ரெஸ்ட் எடுக்குறேன்.நாளைக்கு கண்டிப்பா இந்த மாதிரி பண்ண மாட்டேன்மா…” என அவள் சொல்ல, வனஜாவும் அதற்கு சம்மதித்து அறைக்கு அவளை அனுப்பினாள்.

வசிஷ்டா மனதில்…

‘ஆம், எனக்கு காய்ச்சல் அடிப்பது உண்மை தான். அதற்கு காரணம், இதுவரை என் உடம்பை சூடுப்படுத்தி குளிர்காய்ந்த பலர் மத்தியில், ஒருவன் இன்று குளிரூட்டும் வார்த்தை கூறி,எதிர்பார்ப்பற்ற என் உடலை சூடுப்படுத்தி சென்றுவிட்டான். அவன் தான் கருண். ஆனால், எனக்கு அடிக்கும் காய்ச்சலுக்கு இதுவரை மருத்துவரை தேடாமல் என் உடல் இருந்ததில்லை. நான் நலம் தேட, வந்த மருத்துவரோ ஆடையை அவிழ்த்து என்னை தேடுவான். இதற்காகவா நான் இவ்வளவு சிரமப்பட்டு என் உடலை காட்ட இன்று துணிந்தேன்.’ என யோசித்தபடி, கதவை தாளிட்டு உள் கட்டிலில் விழுந்தாள் வசிஷ்டா.

அவள் கருண் நினைவுகளுடன் தூங்க முயல, “நான் இருக்கும்போது உனக்கு என்னடி இன்னொருத்தன் கூட பேச்சு!” என ஒரு அசரீரி கேட்டது, அவள் திடுக்கிட்டு விழித்து உட்கார்ந்தாள்.

அவள் விலக்கிய ஆடை அவளையும் மீறி போர்த்த, அட்ரினலின் அதிகம் சுரக்க மகிழ்ச்சி மறந்த கவலையால் அவள் உடலை அலங்கரித்தது. அப்போது ஒரு ஆண் சிரிக்கும் குரல் எங்கும் கேட்க, வசிஷ்டா காதுகளை பொத்திக்கொண்டு அழ தொடங்கினாள்.

அவள் கண்கள் மெல்ல சுணங்க, மயங்கி கீழே விழுந்தாள் வசிஷ்டா. இப்போது வினையன் அவள் கனவில் வர, அவனுக்கு அளிக்க துடித்த வாழ்க்கையை மனதில் பதித்தபடி மீண்டும் உறங்கினாள்.

மறுநாள் காலை,

வசிஷ்டா வழக்கமாக செல்லும் பேருந்தில் பயணம் செய்ய, அன்றும் கருண் அதே பேருந்தில் ஏறி அவளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தான். “ஹேய், வசிஷ்டா! வாட் ஏ சர்ப்ரைஸ் (Hey Vashista! What ah Surprise!)” என கூச்சல் போட,அவனை எப்போது பார்ப்போம் எனும் அவளுடைய ஏக்கம் ஓர் இரவுக்குள் ஒழிந்து போக, மெல்ல வராத புன்னகையை வரவைத்து கொண்டு சிரித்தாள்.

அவன் அமைதியாக வர, நேற்று போலவே திடீரென, “ஏங்க, அடுத்த ஸ்டாப்ல ஒரு பார்க் இருக்கு. போகலாமா?” என்றான். அவளும் மெல்ல மறுப்பு தெரிவிக்காமல் தலையை ஆட்டினாள்.

பேருந்து நிற்க, முதல் ஆளாக கருண் இறங்கினான். அவன் பின்னே நேற்று போல் இவளும் இறங்க, இருப்பினும் பேருந்து அசையாமல் அப்படியே நின்றது. என்ன இருந்தாலும் ஒருதலை காதல் கொண்ட 4 கால்களுக்கு (பேருந்து சக்கரம்) பொறாமை இல்லாமலா இருக்கும். ஒருவேளையாக அந்த ஸ்டாப்பில் இறங்க வேண்டியவர்களெல்லாம் இறங்க, பிரியா விடைக்கொடுத்து அந்த பேருந்தும் புறப்பட்டது.

கருண் இயற்கையை ரசித்தபடி நடக்க, அவளும் இவனை காட்டிய இயற்கைக்கு நன்றி தெரிவித்த வண்ணம் பின் நடந்து சென்றாள்.

அவர்கள் இருவரும் ஒரு மரம் மறைவில் அமர, வசிஷ்டா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். “என்னங்க, எதுவுமே பேச மாட்டுறீங்க! எதாச்சும் சாப்பிடுறீங்களா?” என கேட்க, வசிஷ்டாவிற்கு அவன் செயல்கள் எல்லாமே இறந்த தன் அன்னையை நினைவுப்படுத்தியது. ஆம், வசிஷ்டாவுக்கு அப்பா மட்டுமே…

“நேத்து நைட்டு என்ன நல்லா திட்டிருப்பீங்களே.” என அவள் விழி பார்த்து அவன் பேச, அவளோ தன்னை யாரும் பார்த்துவிடுவார்களோ எனும் பயத்தில் வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள்.

“நான் உங்கள எங்க தெரியுமா பார்த்தேன்…” என கூறிக்கொண்டே தான் நேற்று வைத்திருந்த அதே பையை அவன் திறக்க, அவள் சட்டென வேறுபக்கம் திரும்பி கொண்டாள். ஆம், அவன் பையை நேற்று திறந்து விளைந்த விளைவை தான் அவள் நன்கு அறிவாள் அல்லவா? அதனால் அந்தரங்கத்தை கைகளால் மறைக்க முற்பட, “ஏங்க, பயப்படாதீங்க! அந்த போட்டோஸ்லாம் நான் வேற இடத்துல மாத்தி வச்சிருக்கேன்…” என சொல்லியபடி கைகளில் ஒரு ஓவியத்தை எடுத்தான்.

அந்த ஓவியத்தை சற்றும் எதிர்ப்பார்க்காத அவள், “இது எப்படி உங்ககிட்ட…” என்பது போல் அவனை பார்த்தாள். ஆம், வசிஷ்டாவின் இடையை ஒரு ஆண் மகன் இறுக்கி அணைத்திருக்க, அவள் கைகளில் ஒரு கைக்குழந்தையை தாங்கி இருப்பதுபோல் அந்த ஓவியம் இருந்தது.

கருண் தொடர்ந்தான். “இது நீங்க தான…” என அவன் கேட்க, வசிஷ்டாவின் தேடலோ அன்று நடந்த நேர்காணல் நோக்கி மீண்டும் சென்றது.

ஆம்,

அன்று ருக்மணி அம்மாளுக்கு உதவியாக வசிஷ்டா கவர்ச்சி விளம்பரத்தில் இறங்க, அதன் விளைவு பல ஆண் மகன்கள் வரிசைகட்டிக்கொண்டு அவளை பார்ப்பதற்காகவே வந்திருந்தனர். ஆனால், காப்பகத்தை விட்டு வெளிவராத வசிஷ்டா வந்தவர்களை வித்தியாசமாக கையாண்டாள். அவளுக்காக வந்தவர்கள் கண்டிப்பாக ஒருபோதும் சேவை மனப்பான்மையுடன் இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்துக்கொண்ட அவள், விளம்பரப்படுத்த மட்டுமே ருக்மணி அம்மாளுடன் அன்று இருந்ததாகவும், அவள் இந்த காப்பகத்தை சேர்ந்தவள் அல்ல என்னும் மாயை ஒன்றை மறைமுகமாக உருவாக்க, அவளுக்காக வந்தவர்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஆனால், சேவை மனப்பான்மையுடன் ஒரு சிலர் மட்டுமே அங்கு இருக்க, அவர்களை அன்புடன் அழைத்தாள் வசிஷ்டா. அவர்களுள் 3 பெண்களும், 1 ஆண் மகனும் அடங்குவர்.

இப்போது கருண் அந்த ஓவியத்தை அவளிடம் காட்ட, அவள் மனம் அன்று வந்தவர்களை மீண்டும் ஆராய்ந்தது. ஆனால், அதில் கருண் இல்லை. நீங்க குமிழி காப்பகத்துல சேர வந்திங்களா?” என அவள் சட்டென கேட்க, “ஹும் ஆமாம். பட், காப்பகம் உள்ள வரல…” என்றான் அவன்.

“ஏன்?” என ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்புடன் அவள் கேட்க, “என் ப்ரெண்ட்ஸ் கூட வந்தேன். அவனுங்க ஒரு சூப்பர் பிகர பார்த்துட்டுதான் என்னையும் அழைச்சுக்கிட்டு போனானுங்க. எனக்கு உண்மையிலேயே இந்த மாதிரி சேவை செய்யனும் ஆசை தான். அப்புறம் அந்த பொண்ணு காப்பகத்துல இல்லனு தெரிஞ்சதும், வந்த என்ன உள்ள விடாம தள்ளிட்டு போயிட்டானுங்க…அப்போ தான் இந்த பேப்பர் எனக்கு கிடைச்சுது. அப்புறம் பஸ்ல உங்கள பார்த்ததும் அத உங்ககிட்ட காட்டத்தான் வீட்டுக்கு அழைச்சிட்டு போனேன். ஆனால், நீங்க என்னோட பேக்க திறந்ததும் என்ன பண்றதுனு தெரியல…” என்றான் கருண்.

அவன் சொல்வதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை என்பதை வசிஷ்டா புரிந்துக்கொண்டாள். அவள் சட்டென, “நீங்களும் என்ன பார்க்க தான் வந்திங்களா?” என வாயை விட, பின்னர் சமாளித்துக்கொண்டு “நான் வரைந்த ஓவியத்தை பார்க்கவே வந்தீர்களா?” என பேச்சை மாற்றினாள்.

கருண் அசந்து போனான். “இது நீங்க வரைஞ்சதா!” என அவன் ஆச்சரியத்துடன் கேட்க, ஆமாம் என்பது போல் தன்னடக்கத்துடன் தலையை மட்டும் ஆட்டினாள். அவன் பார்த்த விதமே பல கதையை அவளிடம் பேச, அதற்கு எதிர்வினை ஆற்றிய அவள் வாழ்க்கை அவ்வப்போது நினைவில் வந்து போனது. அதனால் மீண்டும் அவனை திசை திருப்ப எண்ணிய அவள், “நான் பார்த்த போட்டோஸ் எதுக்குனு சொல்லவே இல்லையே…” என்றாள்.

கருண் தொடர்ந்தான்.

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 05

“நான் ஒரு சயின்ஸ் டீச்சர் வசிஷ்டா. எனக்கு சின்ன பிள்ளையிலிருந்தே அறிவியல்னா ரொம்ப பிடிக்கும்…” என சொல்ல, வசிஷ்டாவோ அவன் கண்களை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள். ஆம், இரண்டாவது முறையாக ஒரு ஆண் மகனின் கண்களை விருப்பத்துடன் பார்க்கிறாள். அவள் முதல் காதலன் அவன் மகன் வினையன் தான்.

கருண் தொடர்ந்தான்.

“பிஞ்சிலேயே பழுத்த பழம்னு சொல்வாங்களே. அது தான் நான். இல்லன்னா என்ன யாராச்சும் பழம்னு சொல்லிடுவாங்களே…” என சிரித்தான். அவளோ அமைதியாக அவன் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தாள். ஏனென்றால், அவனை அவ்வளவு பிடித்திருந்தது அவளுக்கு.

“நான் +1 படிக்கும்போது ரீ-புரொடக்டிவ் ஆர்கன்ஸ் கிளாஸ் போயிட்டு இருந்துச்சு.பட் (But)எனக்கு பாடம் எடுத்தவங்க ஸ்கிப் பண்ணி நடத்துனாங்க. நாங்க லாஸ்ட் பெஞ்சில உட்கார்ந்து சிரிச்சிட்டு இருந்தோம்…” என சொல்ல, “ஏன்?” என முதல் முறையாக ஏக்கத்துடன் கேட்டாள் வசிஷ்டா.

“அது ஒன்னுமில்லைங்க. அவங்கள விட எங்களுக்கு நிறையாவே தெரியும்னு நினைச்சு சிரிச்சோம். அதுக்கப்புறம் காலேஜ் சேர்ந்தேன். என்னோட அப்பா, அம்மாவுக்கு நான் டாக்டர் படிக்கனும்னு ஆசை. அதனால மெடிக்கல் காலேஜ்ல படிச்சேன். பட், எனக்கு டாக்டர் ஆகுறதுல நோ இன்டிரெஸ்ட்…” என அவன் சொல்ல, ஏதோ அவளுடைய உள்மனம் அவன் கண்களை மட்டுமே பார் என்று சொல்லியபடி இருந்தது.

“காலேஜ்ல அதே கிளாஸ் ஒருநாள். ரீ-புரொடக்டிவ் ஆர்கன் பத்தி. அவரு பாடம் நடத்திட்டு இருக்கும்போது அப்படி ஒரு அமைதி. அப்போ திடீர்னு ஒரு சிரிப்பு சத்தம்.அது நான் தான்…” என அவன் சொல்ல ஏனோ அவள் உடம்பு லேசாக சிலிர்த்தது.

அவன் தொடர்ந்தான்.

“நான் எழுந்திரிச்சு நின்னேன். எல்லோரும் என்னையே பார்க்க, எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. உண்மைய சொல்ல போனா, அன்னைக்கு என்னோட ஸ்கூல் வாத்தியார் எப்படி வெட்கப்பட்டு போனாரோ அதே வெட்கத்தோட நான் மட்டும் நின்னேன்.அப்புறம் கிளாஸ் முடிஞ்சதும் என்ன லெக்சரர் அவரோட ரூம்க்கு கூட்டிட்டு போனாரு. எதுக்காக என்ன கூட்டிட்டு போறாருன்னு ஒன்னுமே புரியல. நான் மட்டும் தனியா அவருக்கூட போனேன். ரூம்க்குள்ள போன அவரு லேப்டாப்ப எடுத்தாரு. ஒருவேளை இவரு நம்மகூட அந்த படம் பார்க்க போறாரு போல,அடப்பாவி இதுக்குதான் கூட்டிக்கிட்டு வந்தியான்னு மனசுல நினைச்சுக்கிட்டேன்…” என அவன் சொல்ல,வசிஷ்டா அவள் கூறியதை கேட்டு சிரித்தாள். ஆம், காமம் என்ற வார்த்தையை காலையில் கண்டால் கொதித்தெழும் வசிஷ்டா, இன்று ஏனோ தெரியவில்லை அவனை அப்படி தான் ரசித்தாள்.

“நான் நினைத்தது போல் ஒரு வீடியோ என் கண் முன்னால் ஓட, என்னையும் மீறிய ஒரு எழுச்சி தான் மனதில். ஒரு பெண் கால்களை அகன்று விரித்திருக்க,அவன் அருகில் ஒரு ஆண் நின்றான். ஆனால், ஆர்வத்துடன் பார்த்த எனக்கு, இறுதியில் அதிர்ச்சியே ஆறுதல் பரிசாக கிடைத்தது.” என சொல்ல வசிஷ்டா திரைப்படத்தின் இறுதி காட்சியை காண்பதுபோல் கண்களை அகன்று விரித்து அவன் அடுத்து என்ன சொல்ல போகிறான் என தெரியாமல் காத்திருந்தாள்.

“அப்போது திடீரென்று குழந்தை அழும் சத்தம் கேட்க, தாய் மெல்ல அரை மயக்கத்தில் கண்களை திறந்து பார்த்தாள்.” என சொன்னவுடன் வசிஷ்டா கண்களிலிருந்து அவளையும் மீறி கண்ணீர் எட்டி பார்த்தது.

“முதல்முறையாக சுகப்பிரசவத்தை கண்களால் கண்டேன். ஒரு பெண் தன் உடம்பில் ஆடை இருக்கிறதா? இல்லையா? என்பதுக்கூட தெரியாமல் அந்த வலியில் துடிக்க, அவள் கண்களில் ஒரு எதிர்ப்பார்ப்பு. அந்த குழந்தையை எப்போது தூக்கி கொஞ்ச போகிறோம் எனும் எதிர்ப்பார்ப்பு. அந்த தாய் ஆடையின்றி இருந்தபோதும் காணொளியில் எந்த ஒரு ஆபாசத்தையும் நான் பார்க்கவில்லை. உண்மையில் சொல்ல போனால் விடலை பருவத்தில் பார்த்ததெல்லாம் ஆபாச படமே இல்லை என மனம் என்னிடம் கூறியது. அது ஒரு மாய உலகம் என மனம் என்னிடம் கூறியது. அதன்பிறகு ஒரு ஆண் – பெண் நெருக்கமான எத்தனையோ திரைப்படங்கள் கண்டேன். ஆனால், ஒரு ஆண் கொடுக்கும் தெரியா முத்தத்தின் போது பெண் மனதில் என்ன இருக்கும் என தான் என் மனதில் தோன்றும்.” என அவன் சொல்ல, அவனை அள்ளி அணைத்து முத்தம் தந்துவிட்டாள் என்ன என்பது போல் அவளுக்கு தோன்றியது.

அப்போது திடீரென வசிஷ்டா குறுக்கிட்டாள்.

“நேற்று உங்கள் பேக்கில் இருந்த புகைப்படத்தை நான் காணலாமா?” என அவள் கேட்க,கருணுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருப்பினும், சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே பயத்துடன் அந்த புகைப்படங்களை அவளுடன் பகிர்ந்து கொண்டான்.

அவள் ஒவ்வொரு புகைப்படமாக அவ்வளவு ஆழமாக உற்று நோக்கினாள்.

வசிஷ்டா ஒவ்வொரு புகைப்படத்தையும் அவ்வளவு நேரம் பார்க்க, இவனோ சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தபடியே நின்றான்.

அதன்பிறகு சுமார் 15 நிமிடங்கள் கழித்து அந்த புகைப்படங்களை அவனிடம் கொடுத்து, “இதில் ஒரு பெண்ணின் கண்களில் கூட, காம போதை தெரியவில்லையே கருண்.அப்படி என்றால்,இவர்களும் விருப்பமின்றி எடுத்துக்கொள்ளும் புகைப்படம் தானா? இவர்கள் என்ன விபச்சாரியா?” என அவள் கேட்க, “ஏங்க, விபச்சாரியான்னு இவ்வளவு கேவலமா கேட்குறீங்க. அவங்களுக்கு மனசு இல்லையா என்ன? அவங்க வாழ்க்கைய நம்மால ஒருநாள் வாழ முடியுமா” என்றான் கருண்.

பாவம், இவள் வாழ்க்கையே அதுதான் என்பதை அவன் அறிந்திடாதவன் அல்லவா?

இந்த பதிலை கேட்ட அவள், அப்படியே அழுது அவன் மடியில் சாய்ந்துவிடலாம் போல நினைத்தாள்.

அவன் தொடர்ந்தான்.

“நீங்க சொன்னது சரி தான் வசிஷ்டா. இவர்களோட யாரு கண்ணுலயும் காமம் தெரியல. எல்லோருடைய கண்ணுலயும் காதல் தான் தெரியுது.” என சொல்ல, “எப்படி சொல்றீங்க?” என கேட்டாள் அவள்.

“இவங்க எல்லோரும் சூழ்நிலையால வெளிநாட்டுல விபச்சாரியா இருக்கவங்க தான்.இவங்க எல்லோருமே தன்னோட கனவை தொலைச்சு, குடும்பத்தை தொலைச்சு உடல தேடி போறாங்க. இத பத்தி தான் நான் இப்போ ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்…” என சொல்ல, “ஆராய்ச்சியா?” என்பதுபோல் ஆச்சரியமாக பார்த்தாள்.

“ஆமாங்க, ஒரு ஆணும், பெண்ணும் விருப்பமில்லாம நெருக்கமா இருக்குறதுனால என்ன குழந்தை பிறக்கும்? குறை பிரசவமா பிறக்க இதுக்கூட காரணமா? அப்டிங்கிறது தான் என்னோட ஆராய்ச்சி.” என அவன் சொல்ல, அவளுக்கு குழப்பமாக இருந்தது.

அவன் விவரித்தான்.

“ஒரு குழந்தை பிறக்க ஆண் – பெண் தேவை. அப்படி என்றால் அவர்கள் இருவரது குணத்திலும் தான் அந்த குழந்தை உருவாக்கப்படுகிறது. ஒருவேளை, தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லாத ஒரு பெண் அல்லது ஆண் இருக்க,அவர்களுக்கு குழந்தை எப்படி பிறக்கும் என்பது தான் எங்களுடைய யோசனை. ஒரு பெண் விருப்பமற்று தாம்பத்யம் வைத்துக்கொள்வதால் அது குழந்தையை பாதிக்குமா? இதை தான் நாங்கள் இப்போது ஆராய்ந்து வருகிறோம்.” என சொல்ல, வசிஷ்டாவுக்கு கருண் கூறுவது புதிராகவும் புதிதாகவும் இருந்தது.

இதுவரை அவளிடம் எத்தனையோ பேர் இரவில் இரகசிய கதைகளை கூறி இருக்கின்றனர்.ஆனால், அவன் ஒவ்வொரு செயல்களும் அவளுக்கு புதுவித அனுபவத்தை தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 06

கருணின் நினைவுகளில் நனைந்த வசிஷ்டா வீடு வந்து சேர்ந்தாள். அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவள் காதுகளில் ரீங்காரமாய் கேட்க, மணியோ அவளை அரவணைக்க வரப்போகும் ஒருவனுக்காக தயார்படுத்த காத்திருந்தது. என்ன நினைத்தாளோ இந்த பைத்தியக்காரி, அவசரமாக கண்ணாடியை நோக்கி ஓடி சென்று பார்த்தாள்.

“இந்த தொழிலுக்கு வரும் யாரும் விருப்பப்பட்டு வருவதில்லை வசிஷ்டா. காலத்தின் கட்டாயம். இவர்கள் வாழ்க்கையை இந்த கோணம் நோக்கி பார்க்க வைத்துவிட்டது.” என அவன் கூறிய ஒருசில வார்த்தையை நினைத்து பார்த்த அவள், அந்த அறையிலிருந்த கண்ணாடியை கழற்றி தன் படுக்கை அறைக்கு நேராக வைத்தாள்.

ஆம்,

இன்று அவள் கண்களில் என்ன தெரிகிறது என்பதை தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டாள் வசிஷ்டா. அத்துடன் ஒரு சில விஷயங்களை ஆழமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

அது என்னவென்றால்,

ஒருவன் அவளை கட்டிலில் தள்ளி காமப் பாடம் நடத்த, அவள் கண்களில் தன் மகன் வருவான் எனில், அப்போது கருண் விட்டு விலகி தன் மகனுக்காக இந்த தொழிலில் தொடர்ந்து இருக்க அவள் எண்ணினாள்.

‘ஒருவேளை கருண் என் கண்களில் தோன்றிவிட்டால்…’ என யோசித்த அவள், அதற்கும் மாற்று வழியை யோசித்தாள். ‘ கருண் என் கண்களில் தோன்றினால், நாளையே நான் ஒரு விபச்சாரி…’ என்பதை அவனிடம் சொல்லிவிட வேண்டும். அவனுடன் நாம் நெருங்கி பழகுவது ஏமாற்றுவதற்கு சமம்…’ என அவள் நினைத்துக்கொண்டிருக்க, கீழே வனஜாவின் குரல் கேட்டது.

வசிஷ்டா இன்று வழக்கம் போல் அவள் இடையழகையும், மாரழகையும் ஓரளவு வெளிக்காட்டி வந்தவனை தன் விருப்ப வலையில் விழ வைக்க வனஜாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

இன்னும் சில நொடிகளில் தன் வாழ்வு எவ்வாறு திரும்ப போகிறது எனும் ஆவலில் காத்திருந்த அவள் மெல்ல கட்டிலில் விழுந்தாள். அவனும் வந்த வேலையை ஆரம்பிக்க, அவன் உடல் புணர்வுக்கு ஈடுக்கொடுத்த வசிஷ்டா கண்ணாடியை பார்த்தபடி இருந்தாள். அப்போது அவள் கண்ணாடியில் கண்ட அந்த நினைவு முகம் அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆம்,

அது வேறு யாருமல்ல.

அவள் கணவன் நிதுன்.

அந்த கட்டிலின் குலுங்களை ரசித்த வண்ணம் அவன் நின்றுக்கொண்டிருக்க, அவன் கண்களில் ஒருவித ஏக்க பார்வையும் தெரிந்தது. வசிஷ்டாவின் கண்களோ அந்த கண்ணாடியையே பார்த்துக்கொண்டிருக்க, நிதுன் அவமான பார்வையை அவள் மீது வீசினான்.

திடீரென்று,

வசிஷ்டாவின் கைகள் கண்ணாடி நோக்கி ஓங்கி அறைய, சுக்குநூறாக தெறித்து வந்திருந்த ஆண் மகன் உடலை சில்லுகள் சீண்டியது. அவள் சட்டென எழுந்து கட்டிலில் நேராக நிமிர்ந்து அமர, அவள் கைகள் முழுவதும் இரத்தம்.

அவன், “வாட் ஹேப்பென்ஸ் பார் யூ?” என கேட்க, சுதாரித்து கொண்ட அவள், “நத்திங்க். ப்ளீஸ் டோன்ட் ஸே திஸ் டூ ஆன்ட்டி…’ என கெஞ்ச, “ஓகே! கம் ஆன் பேபி” என அவளை மீண்டும் கட்டிலில் கிடத்தினான். அவள் கைகளில் இரத்தம் வழிய, முதன்முறையாக பருவம் எய்தி அவள் அடைந்த மாதவிடாய் வேதனையை இன்று அடைந்து அவனிடம் சிக்கி தவித்தாள்.

மறுநாள் காலை,

வசிஷ்டா உடைந்த கண்ணாடியை ஓரமாக வைத்துவிட்டு வழக்கம் போல் குமிழி குழந்தைகள் காப்பகத்துக்கு புறப்பட்டாள். ஆனால், அவள் மனதில் இன்று இருந்ததெல்லாம் நிதுனின் உருவம் மட்டும் தான்.

விளைவு,

கருண் இன்று அந்த பேருந்தில் வரக்கூடாது என கடவுளை வேண்டியபடி இருந்தாள். காரணம், அவள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை நோக்கி மீண்டும் பயணிக்க, பேருந்தோ முன்னோக்கி அவளை குமிழி குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தது.

வசிஷ்டா வாழ்க்கையில்…

ஒரு கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் தனக்கு தரப்பட்ட அந்த கட்டிலில் படுத்திருக்க, அவள் வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் செலுத்தப்பட்டது. இந்த அல்ட்ரா சவுண்ட் தான் கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை தெரிந்துக்கொள்ள உதவ, அப்போது டாக்டர், “பேபி நல்ல ஆரோக்கியமா இருக்கு. மொமெண்ட்ஸ் ரொம்பவே அதிகமா இருக்கு. அநேகமா பிறக்கபோவது பெண் குழந்தையாய் இருக்கலாம்..” என சொல்ல, அங்கிருந்த ஒருவர் முகம் லேசாக வாடி போனது.

காரணம், பங்கஜத்துக்கு ஏற்கனவே 5 பெண் பிள்ளைகள். டாக்டர் இப்போது ஆறாவதும் பெண் குழந்தையாக இருக்குமென கூற, முகுந்தனுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. அவர் தான் பங்கஜத்தின் கணவன். “டாக்டர்! வயித்துல சுருக்குனு குத்துறதா அடிக்கடி சொல்லுறா… இதனால பொறக்க போற குழந்தைக்கு ஆபத்து வருமா டாக்டர்…?” என கேட்க, “என்ன முகுந்தன்? நீங்கள் குழந்தை நன்றாக பிறக்க ஆசைப்படுவது போல் தெரியவில்லையே. ஏன் இப்படி நெகட்டிவா யோசிக்கிறீங்க?” என கேட்டவுடன், டாக்டரின் சொல் நறுக்கென முகுந்தன் மூளையில் இறங்கியது.

பங்கஜம் என்ன சொல்வதென்று தெரியாமல் படுத்திருந்தாள்.

“இல்ல டாக்டர். ஏற்கனவே 5 பொட்ட புள்ளைங்க. ஆறாவதும்…” என அவர் சொல்லை இழுக்க, “ஸ்டாப் இட் முகுந்தன். பொட்ட பிள்ளைங்கன்னு சொல்றத நிறுத்துங்க முதல்ல. ஒரு ஆம்பள பையன திட்டுறனாலும் நீ என்ன பொட்டையானு கேட்குறீங்க. ஏன் பொண்ணுங்கன்னா அவ்வளவு சாதாரணமா போச்சா. அவங்க அனுபவிக்கிற வலிய நீங்க தினமும் பார்த்துட்டு தான இருக்கிங்க…” என டாக்டர் திருமாறன் கேட்க, முகுந்தன் பதிலற்று அமைதியானார்.

ஆனாலும் அவர் மனம் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

“அப்படி இல்ல டாக்டர்… நாளைக்கு ஆண் வாரிசுன்னு ஒன்னு இருந்தால் தான தலைமுறைக்கு உதவும்…” என முகுந்தன் சொல்ல, “என்ன பேசுறீங்க! ஆண் குழந்தையோ! பெண் குழந்தையோ! அது நம்ம கையில இல்ல முகுந்தன். கடவுள் கையில் இருக்கிறது. உங்களுக்கு ஆண் குழந்தை தான் வேண்டும்னா பொறக்க போற பெண் குழந்தைய ஆண் மாதிரி வீரமா வளருங்க.” என சொல்ல முகுந்தன் தலையில் அது ஏறவேயில்லை.

“குழந்தை நல்ல ஆரோக்கியமா இருக்கு. நீங்க போயிட்டு வாங்க…” என அனுப்பி வைத்தார் டாக்டர். அவர் மனதில், ‘எல்லோரும் ஆண் குழந்தை தான் வேண்டும்னு ஆசைப்பட்டா, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு ஆண்கள் மட்டும் தான் இருப்பாங்க. இங்க பொறக்குற ஒவ்வொரு உயிருக்கு பின்னாடியும் ஒரு கதை இருக்கு. காட் ப்ளஸ் யூ மை சைல்ட்…” என கருவிலிருந்த வசிஷ்டாவை கடவுளாக மாறியே அந்த டாக்டர் ஆசிர்வதித்தார்.

பத்தாவது மாதத்தில்,

டாக்டர் கூறியது போல் பெண் குழந்தை பிறந்தது. அவரே அந்த குழந்தைக்கு பெயரையும் வைத்தார். “இந்த உலகமே உன் திறமைக்கு அடிமை. இந்த உலகையே வசியம் செய்ய பிறந்தவள் நீ… அதனால் உன் பெயர் வசிஷ்டா…” என அவர் சொல்ல, இந்த சம்பவங்களை நினைத்து பார்த்து பேருந்தில் அமர்ந்தபடியே வெம்பிய மூஞ்சுடன் அவள் இருக்க, கண்களிலிருந்து மெல்ல ஒரு சொட்டு கண்ணீர் இறங்கி இதழை வந்து சேர்ந்தது.

இவை அனைத்தும் வசிஷ்டாவுக்கு எப்படி தெரியும். இந்த வார்த்தை அவளுக்கு புளித்து போன ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். ஆம், பங்கஜத்துக்கும், முகுந்தனுக்கும் அவள் மேல் ஏதாவது கோபம் என்றால், “ஆறாவதும் பொண்ணா பொறந்து என் உயிர வாங்குது..” என அவர்கள் திட்ட, ‘நாம் ஏன் பிறந்தோம்?’ என எத்தனையோ தடவை வசிஷ்டா மனதில் கேள்வி பிறந்ததுண்டு.

விளைவு,

கருவில் அவள் கால்களால் கீறி வரைந்த ஓவியங்கள் கருவறையில் புதைக்கப்பட, அவள் ஓவிய திறமையை பங்கஜமோ அல்லது முகுந்தனோ கண்டுக்கொள்ளவே இல்லை.

காரணம்,

அந்த ஓவியத்தால் ஒன்றும் அவர்கள் குடும்ப வயிறு நிறையப்போவதில்லை எனும் எண்ணத்தினாலே. அந்த வீட்டில் அவள் ஒரு அகதியாகவே வாழ்ந்து வந்தாள். அதனால், அவள் எப்போது வருகிறாள்? எப்போது போகிறாள்? என எதையுமே அவர்கள் இருவரும் கேட்டுக்கொள்வதில்லை.

ஆனால், அது அவள் பூப்பெய்தாத காலம். பருவத்தை எட்டாத வசிஷ்டா வாழ்க்கை அவளுக்கு பிடித்த வகையில் அவள் மனதிற்கு தனிமையில் அலங்கரிக்கப்பட்ட நிம்மதியை தந்தது.

ஒரு நாள்,

பள்ளியிலிருந்து புறப்பட்ட அவள் வயிற்றை பிடித்துக்கொண்டு, “அம்மா!” என கத்த, அவள் பள்ளி தோழிகள் அவசர அவசரமாக அவளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

ஆம்,

வசிஷ்டா வயதுக்கு வந்தாள்.

முகுந்தன் மற்றும் பங்கஜம் தலைமையில் கடமைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்து முடிக்க, யார் கையில் பிடித்து கொடுக்க போகிறோம் என அடுத்து முகுந்தன் யோசிக்க தொடங்கினார்.

ஆனால்,அவள் பள்ளிக்கு செல்வதை அவர்கள் குடும்பத்தினர் நிறுத்தவில்லை. அதற்கான முக்கிய காரணம், வசிஷ்டாவை எப்படியாவது இஞ்சினியரிங்க் படிக்க வைக்க முகுந்தன் ஆசைப்பட்டார். வசிஷ்டாவுக்கோ எஞ்சினியரிங்க் படிப்பதில் சுத்தமாக ஆர்வமில்லை.

“என்ன எதுக்கு இப்போ இஞ்சினியரிங்க் படிக்க சொல்றீங்க. ஐ வாண்ட் டூ பிகம் ஏ ஆர்ட்டிஸ்ட்…” என சொல்ல, உடனே பங்கஜம்., “வாயை மூடு. நம்ம குடும்பம் இருக்க நிலைமையில படம் வரையுறதெல்லாம் உனக்கு அவசியம் தானா? நீ ஒழுங்கா பிளஸ் டூ முடிச்சு இன்ஜினியரிங்க் படிக்கிற… கடன உடன வாங்கினாலும் உன்ன படிக்க வைக்கிறோம்.” என சொல்ல எதற்காக இவ்வளவு கட்டாயப்படுத்துறாங்க என்ன…” என வசிஷ்டா யோசிக்க, “நீ ஒழுங்கா படிச்சா தான் நல்ல மாப்பிள்ளை கிடைப்பாரு. ஆறாவதும் பொண்ணா பெத்ததுக்கு இந்த கைமாறனாலும் செய்…” என சென்றார் முகுந்தன்.

அப்போது, “காப்பகம் போறவங்க எல்லாம் இறங்குங்க…” என ஒரு குரல் கேட்க, திடுக்கென விழித்தாள் வசிஷ்டா. அவள் நினைவலைகளை விட்டு மெல்ல நகர்ந்தபடி காப்பகம் நோக்கி நடந்து சென்றாள்.

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 07

குமிழி குழந்தைகள் காப்பகத்தில் நுழைந்த வசிஷ்டா அங்கிருந்த குழந்தைகளுக்கு தேவையான பணிவிடைகளை செய்யும்முன் வினையனை முதலில் சென்று பார்த்தாள்.

அதன்பின்னர் வழக்கம்போல் குழந்தைகள் சாப்பிட்ட தட்டுகளை ஒட்டுமொத்தமாக அள்ளிப்போட்டுக்கொண்டு அவள் வேலையை தொடர, அப்போது அவளுடன் பணிபுரியும் நித்யா வந்தாள். “ஹேய் வசி… உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்டி. எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க இருக்காங்க. அவங்களுக்கு சமையல் செய்ய ஆளு வேணுமாம். எனக்கு அவங்க சொன்னதும் உன்னோட ஞாபகம் தான்டி வந்தது. உன்ன மாதிரி சமையல்ல கலக்க யாரு தான் இருக்க. நல்ல சம்பளம்! நல்ல வேலைடி…” என நித்யா சொல்ல, அவற்றை காதில் போட்டுக்கொண்டு ஹூம் போட்டபடி வசிஷ்டா வேளையில் மூழ்கி இருந்தாள்.

“என்ன நீ! நான் பேசிட்டே இருக்கேன். நீ ஏதும் சொல்லாம வேலைய பார்த்துட்டு இருக்க…” என நித்யா கேட்க, “பகல் வேலையா?” என்று கேட்டாள் வசிஷ்டா. “இல்லடி நைட் டின்னரும், மார்னிங்க் பிரேக் பாஸ்டும் தான். ஆனால், நம்ம காப்பகத்துல இருந்து ரொம்ப தூரம் அவங்க வீடு. ஸோ, நீ ஸ்டே பண்ணி வொர்க் பண்ற மாதிரி தான் இருக்கும். உனக்கு ரூம்லாம் ரெடி பண்ணி தந்துருவாங்க. நீ அங்கேயே தங்கி நைட் & டே சமைச்சு கொடுத்துட்டு மார்னிங்க் இங்க வந்துடலாம்.” என சொல்ல, “எனக்கு இந்த வேலை வேண்டாம் நித்யா…” என சட்டென கூறினாள் வசிஷ்டா.

“ஹேய், என்ன விசுவாசமா? அதெல்லாம் ரொம்ப இருக்கக்கூடாது வசி. அதுவும் நம்மள மாதிரி ஏழைங்களுக்கு கண்டிப்பா இருக்கக்கூடாது. இருந்தா, இந்த மாதிரி சம்பளம் கொடுக்காம வேலை வாங்குறாங்க பாரு. இவங்ககிட்ட கூட காட்டலாம். ஆனால், சம்பளம் கொடுத்து வேலை வாங்குறவங்க உன்ன ஒரு கணக்கு போட்டு வச்சிருப்பாங்க. அந்த கணக்குல பெருக்கல் மட்டும் தான் இருக்கனும். ஒருவேளை, உன்னோட வேலை அவங்களுக்கு பிடிக்கலனா, தூக்கி வீசிட்டு போயிட்டே இருப்பாங்க. என்ன காரணம்? இதெல்லாம் அவங்க கேட்க போறதில்ல.” என நித்யா சொல்லி முடித்தாள்.

“ஹூம் நீ சொல்றது சரி தான் நித்யா. ஆனால், என்னை கசக்கி இந்த உலகமே தூக்கி போட துணிஞ்சப்போ எனக்கு அடைக்கலம் கொடுத்தவங்க அவங்க. என்னால அவ்ளோ ஈஸியா உதறிட்டு வர முடியாது. நான் பரிமாற விதம் வர விருந்தாளி மனச இதுவரைக்கும் முகம் சுளிக்க வச்சது இல்ல. அப்படி இருக்கப்போ நீ சொல்ற மாதிரி நடக்கும்போது பார்த்துக்கலாம். என்னால நைட் வேலை பார்க்க இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க முடியாது…” என சொல்ல, ஹூம் என தலையை ஆட்டி அமைதியாக புறப்பட்டாள் நித்யா.

வசிஷ்டாவோ கண்களின் கண்ணீரை தேக்கி விட்டு மீண்டும் வேளையில் மூழ்க திடீரென அவள் அடி வயிற்றை வலிக்க தொடங்கியது.

ஆம்,

அவளை காண அழையா விருந்தாளி வந்தது. அவளை பெற்றவர்களே இன்று வரை கண்டுக்கொள்ளாமல் இருக்க, மாதந்தோரும் மனதார மூன்று நாள் அவளுடன் பேசி செல்வான் அவன்.

அவன் தான் மாதவிடாய். அவளை நலம் விசாரிக்க வந்தான்.

அது மாத கடைசி என்பதால் வசிஷ்டாவினால் நாப்கின் வாங்க கூட கையில் காசு இல்லை. அதனால் வேறு வழியின்றி காப்பகத்தில் கிடந்த சாம்பலை பயன்படுத்தினாள்.

அவள் பாத்திரம் கிடந்த இடத்திலே வயிற்று வலியுடன் அமர, “என்னாச்சும்மா வசி…” என்றாள் ருக்மணி அம்மாள். வசிஷ்டாவிடம் இருக்கும் பழக்கங்களுள் ஒன்று, தன்னிடம் இருக்கும் வரை எதையும் உதவியென மற்றவரிடம் கேட்க தயங்குபவள். “ஒன்னுமில்லம்மா… நான் கிளம்புறேன். ரொம்ப டையர்டா (Tired) இருக்கு…” என சொல்ல, அன்று அவள் அணிந்து வந்திருந்த வெள்ளை சுடிதார் அவள் வேதனையை ருக்மணி அம்மாளுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட, சிவப்பில் முக்குளித்த அவள் மாதவிடாயை ருக்மணி அம்மாள் கண்டுவிட்டாள்.

உடனே, அவள் இடுப்பில் முடிந்து வைத்திருந்த அந்த சுருக்கு பையிலிருந்து நாப்கின் வாங்க தேவையான சில்லறையை சேர்த்து வசிஷ்டாவிடம் கொடுக்க, அவள் வயிற்றில் கையை வைத்தபடி ருக்மணி அம்மாளை பார்த்தாள். “வாங்கிக்கோமா!இல்லாட்டியும் யாரையாச்சும் அனுப்பி வாங்கிட்டு வர சொல்லவா…” என கேட்க, “வேண்டாம்மா. பஸ் ஸ்டாப் பக்கத்துல தான் மெடிக்கல் ஷாப். நானே வாங்கிக்கிறேன்.” என அவள் புறப்பட, “இந்த வெள்ள சுடிதாரோட போகப்போறியா. இங்க நமக்கு வர இரத்தத்தை பார்த்தா கூட, ஒரு ஆம்பள கண்ணுல தண்ணி வராதும்மா. சுடிதார் வெளியில வர இரத்தத்த உள்ள ருசிக்க நினைக்கிற உலகமிது…” என ருக்மணி அம்மாள் சொல்ல, இன்று இரவு தன் வாழ்க்கையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டாள் வசிஷ்டா.

காரணம்,

இந்த உலகம் மாதவிடாயின் போது ஒரு பெண்ணை வீட்டில் ஒதுக்கி வைக்கும். ஆனால், விலை மாது வாழ்க்கையில் மாதவிடாய் என்பது மற்ற ஆண்கள் அவளை தீண்டுவதை போல் மூன்று நாள் தீண்டி செல்ல, விருப்பமற்ற போதும் அவர்களால் விலக்க முடிவதில்லை.

ஒருவேளை மாதவிடாயின் போது விடுப்பு எடுத்தால், விலை மாதுக்களுக்கு அந்த நாட்களில் சம்பளம் தரப்படுவதில்லை.

அப்போது வந்த நித்யா, அவசரமாக தன் ஆடையை அவிழ்த்து அதை வசிஷ்டாவுக்கு உடுத்தி அழகு பார்த்தாள். ஆம், வசிஷ்டா அணிந்திருந்த வெள்ளை சுடிதாரை அவள் வாங்கி உடுத்திக்கொள்ள, அவளை பஸ் ஸ்டாப் வரை விடவும் நித்யா தயாரானாள்.

ஆனால், வசிஷ்டாவோ… “எத்தனை நாளைக்குடி என் கூட வருவ.. நமக்கு இயல்பா இருக்க இந்த பிரச்சனைய இந்த உலகம் தப்பா பார்த்தா அதுக்கு நாம வெட்கப்பட கூடாதுடி. அவங்க தான் வெட்கப்படனும். நீ வர வேண்டாம். நானே இந்த பிரச்சனைய பேஸ் (Face) பண்ணிக்கிறேன்…” என சொல்ல, ருக்மணி அம்மாள் உடனே, “என்ன நித்யா! இப்படி சொல்லிட்டு போறா?” என்றாள்.

“அம்மா! நல்லவேளை… என்னோட சுடிதார போட்டுட்டு போறதுக்கு ஓகே சொன்னா. அதுக்கும் எதுவும் காரணம் சொல்லாம…” என சலித்துக்கொண்டு போனாள் நித்யா.

வசிஷ்டா வயிற்றில் ஏற்பட்ட வலியுடன் பஸ் ஸ்டாப்பை நெருங்க, மெடிக்கல் அவளுக்கு எதிர்புறத்தில் இருந்தது. அவள் மெல்ல மெடிக்கல் நோக்கி புறப்பட முயல, பேருந்து வரவும் நேரம் சரியாக இருந்தது.

மெடிக்கலில் வாங்கி விட்டு அங்கேயே அருகிலிருக்கும் பொது கழிப்பறையில் அணிந்துக்கொண்டு அவள் புறப்படலாம் என நினைக்க, பேருந்து வருகிறதா என பார்த்தவாறும் சாலையை கடக்க முயன்றாள். ஆனால், அவள் கால்கள் விரைந்து சாலையை கடக்கும் முன்னே, அவள் வேதனையை புரிந்துக்கொண்ட பேருந்து வேகமாக அவளுக்காக வந்தது.

வசிஷ்டாவிற்கு பேருந்து வந்த மகிழ்வு இருந்தாலும், பிறப்புறுப்பிலிருந்து வழிந்த இரத்தம் கண்டு மறைத்தவாறு மெல்ல பேருந்தில் ஏற, “ஹாய்…” என அதிர்ச்சியூட்டும் விதத்தில் ஒரு குரல் மெல்ல ஒலித்தது.

அது வேறு யாருமில்லை. “கருண்” தான்.

“என்னங்க! நாம இதுவரைக்கும் போன் நம்பர் கூட வாங்கல. ஆனால், அடிக்கடி மீட் பண்றோம்.” என சொல்ல, வசிஷ்டா வயிறு வலியை மறைத்துக்கொண்டு அமைதியாக சிரித்து அமர்ந்தாள்.

அவள் ஏதோ ஒரு வலியால் துடிக்கிறாள் என்பதை தெரிந்துக்கொண்ட அவன் அதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்ட போதும் எப்படி கேட்பது என அவனுக்கு தெரியவில்லை.

அவள் செயல்களை உற்றுநோக்க அவளோ நெளிந்துக்கொண்டு இருந்தாள். அவள் கைகள் எப்போதும் கொண்டு வராத பேக்கை இறுக்கி பிடித்தபடி எதையோ தடுத்து நிறுத்தியது.

‘எப்படி கேட்பது?’ என யோசித்த அவன், அவள் கண்களை பார்க்க… அவள் கண்களோ பேருந்தில் இருந்த ஆண் மகன்களை பார்த்த வண்ணம் அங்கும் இங்கும் அலைந்தது. கருண் ஒரு முடிவுக்கு வந்தான். ஆம், அவளுக்கு என்ன ஆகிற்று என்பதை ஓரளவுக்கு யூகித்த அவன், அடுத்த ஸ்டாப்பில் கண்ட கூட்டம் கண்டு அவசரமாக இறங்கி ஓடினான்.

‘எங்கே செல்கிறான் இவன்?’ என அவள் யோசிக்க, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்ததால் அவனை சுற்றும் முற்றும் தேடினாள். அவனோ பேருந்து கிளம்பும் சமயம் பார்த்து ஓடி வந்து ஏறி அவன் ஏற்கனவே அமர்ந்திருந்த பின் இருக்கையில் அமர்ந்தான். அவனுக்கோ மூச்சிறைத்தபடி இருந்தது.

அப்போது,

ஒரு மாத்திரையை முன் அமர்ந்திருந்த வசிஷ்டா நோக்கி நீட்ட, அதை கண்ட அவள் கண்களில் அவளையும் மீறி கண்ணீர் ததும்பியது. அவன் கைகளில் இருந்த மாத்திரையை அவள் வாங்கிக்கொள்ள, அவளுக்காக வாங்கிய தண்ணீர் பாட்டிலையும் அவன் தந்தான்.

அந்த மாத்திரை மாதவிடாயை தற்காலிகமாக தடுக்கும் ஒரு மாத்திரை ஆகும். ஆனால், தனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருப்பதை இவன் எப்படி தெரிந்துக்கொண்டான் என வசிஷ்டா ஏங்க, அவனை பார்த்து மெல்ல சிரித்தபடி அடுத்த ஸ்டாப்பில் அவள் இறங்கினாள். அந்த ஸ்டாப்பில் தான் அவர்கள் இருவரும் ஒருநாள் தன் மனதை பரிமாறிக்கொண்ட பூங்காவும் இருந்தது.

அவள் இறங்க, கருணும் அவளை பார்த்தவாறே பின் இறங்கி செல்ல அன்று அவர்கள் சந்தித்துக்கொண்ட அதே மரத்தின் மறைவில் சென்று அமர்ந்தாள் வசிஷ்டா. கருண் ஏதும் புரியாமல் மெல்ல வந்து அவள் அருகில் அமர, சட்டென “தேங்க்ஸ்…” என்றாள்.

அப்போது தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. அவன் மெல்ல புன்னகை பூத்தான். “எப்படி கண்டுபிடிச்சிங்க?” என அவள் தயக்கத்துடன் கேட்க, “அதுவா… நீங்கள் கொண்டு வந்த பேக். அதை விடாப்பிடியாக இழுத்து பிடித்து ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்புடன் இருந்திங்க.” என அவன் சொல்ல, வசிஷ்டா அப்படியே ஆடிப்போனாள். என் வாழ்வில் இவனை நான் ஏன் முதலில் சந்திக்காமல் சென்றேன் எனும் ஏக்கம் அவள் மனதை சூறையாடியது.

அவன் தொடர்ந்தான்.

“உங்களோட கண்கள பார்த்தேன். அதுல அப்படி ஒரு தேடல் தெரிஞ்சுதுங்க…” என சொல்ல, “என்ன?” என பயந்துக்கொண்டே அவள் கேட்டாள்.

“பஸ்ல இருந்த ஆண்கள் எல்லோர் மேலயும் உங்கள் பார்வை சென்றது. அந்த பார்வையில் ஒரு எதிர்ப்பார்ப்பு. இந்த ஆண்கள் இல்லாமல் நான் (வசிஷ்டா) மட்டும் இந்த பேருந்தில் செல்லக்கூடாதா? எனும் ஏக்கம். அதை வைத்து தான் நான் முடிவு செய்தேன். அப்போதுகூட மாத்திரை வாங்கிவந்து நீங்கள் கோபப்பட்டு அதற்கு வேறு காரணம் கூறிவிட்டால் என்ன செய்வது என நான் தயங்கினேன். ஆனால், நீங்கள் மாத்திரையை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு இப்போது தேங்க்ஸ் சொன்னதும் தான் நிம்மதியாக இருக்கிறது…” என அவன் சொல்ல, ‘இத்தனை நாட்கள் நான் அழையா விருந்தாளிகள் எத்தனையோ பேர் வந்து இடுப்பை கிள்ளி கதை சொன்னதற்கு பதில், இவன் ஒருவனே என்னை எல்லா நாளும் இறுக்கி அணைத்து முத்தம் தந்திருக்க கூடாதா! நானும் இந்நேரம் இவன் மடி சாய்ந்திருப்பேனே…’ என அவள் மனதில் ஏங்கி தவித்தாள்.

மாதம் மாதம் மாதவிடாய் வந்த போதும் முதல் முறையாக அவள் மனதிற்கு நன்றி கூறினாள். இத்தனை நாள் தேடிய ஒருவனை தன் கண் முன்னால் காட்டி அவன் அக்கறையை அழகாக பிரதிபலித்தமைக்காக…

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 08

வசிஷ்டாவின் உலகம் என்பது மிகவும் பெரியது. அந்த உலகத்தில்

ஆசைகள் அதிகம்.

நிரூபிக்கப்படாத ஆண்மையும் அதிகம்.

வலிகள் அதிகம்.

வலிக்கு பின்னால் வழிந்த இரத்தமும் அதிகம்.

கனவுகள் அதிகம்.

கனவுகளை கடந்து கசக்கி எறிந்த ஆணுறையும் அதிகம்.

வந்தவர் அதிகம் போனவர் அதிகம்.

போகும் இடமெல்லாம் அவளை பார்த்து வழிந்தவர் அதிகம்.

இப்படி அவள் உலகத்தில் சந்தோஷத்தை தவிர எல்லாமே நிரம்பி வழிய, அவள் வாழ்வில் வந்த கருண் என்பவனை கடவுள் போல் பார்த்தாள்.

ஆம்,

யார் ஒருவர் நம் வாழ்வில் கேட்காமல், எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நம் ஆசையை புரிந்து ஆரவாரம் நோக்கி அழைத்து செல்கின்றனரோ அவர்களே நம் கண்ட கண்ட தெய்வம் என்றால், அவனை நினைப்பதில் என்ன தவறு என அவள் மனம் ஏங்கியது.

விளைவு,

அவளுக்கு அவனிடம் தான் யாரென சொல்ல மனம் விரும்பியது.

‘நான் ஒரு விபச்சாரி என்பதை எப்படியாவது கருணிடம் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை என்னை அவன் புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப நடந்துக்கொண்டால், அதன்பிறகு என்ன செய்யலாம் என்பதை நாம் யோசித்துக்கொள்வோம்.’ என அவள் ஒருப்புறம் யோசிக்க, மறுப்புறமோ, ‘உண்மையை சொல்லாதே! இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திரு…’ என உள்மனம் உரசிக்கொண்டு காதுகளை மறந்து அவள் இதயத்தில் பதிய வைத்தது.

ஆம்,

எப்போதும் ஒரு பெண் என்பவள் மற்றவர் கண்களுக்கு நல்லவராகவே தெரிய விரும்புவாள். தேர்வில் மதிப்பெண் குறைந்து ஒரு பெண் அழுவாள். ஆனால் ஒரே ஒரு மதிப்பெண்ணை இழந்திருப்பாள். உடனே மற்றவர்கள் அவளை கிண்டல் செய்வார்கள். ஆனால், அந்த நிமிடம் தன்னை நிரூபிக்க முடியவில்லையே எனும் ஆதங்கம் தான் அது என்பது நம்முள் எத்தனை பேருக்கு தெரியும்.

அப்படி இருக்க, ஆடை அவிழ்த்து வாழ்வதை வழக்கமாய் கொண்ட விருப்பமற்ற அவள் வாழ்வில், நல்ல ஆண் மகனை கண்டபின்னர் அவனிடம் தான் ஒரு தரம் கெட்டவள் என உலகம் பேசுவதை உரக்க சொல்லத்தான் முடியுமா என்ன?

அதனால் வசிஷ்டாவின் மனமானது கட்டிலில் கிடத்தி காம பாடம் ஒருவன் நடத்தும் போது தவியாய் தவிக்கும் ஒரு நிலையை அடைய, அவ்வப்போது அவள் மனம் கணவன் நிதுனை நினைத்து கரை சேர்ந்தது.

நிதுன் வசிஷ்டாவை திருமணம் செய்துக்கொண்ட முதல் நாள் மட்டுமே அவள் மூச்சுக்காற்றை தீண்டினான். அதன்பிறகு அவள் மேல் நிதுனின் சுண்டு விரல் கூட பட்டதில்லை. ஆனால், தினமும் வார்த்தையாலே அவளை சுட்டு தீண்டாமலே ஆடையை களைத்தான். அவன் வேறு ஒரு ஆணுடன் அவளை ஒப்பிட்டு பேசுகையில், இவளுக்கு உடம்பெல்லாம் அப்படியே கூசும். அத்துடன் உண்மையாக நம் உடலில் ஆடை இருக்கிறதா என்னும் வெட்கம் அவளை பிடுங்கி திங்க, அவள் கைகள் மார்பை இறுக்கி அணைத்து மனதினால் மானம் காத்தது.

வசிஷ்டா மெல்ல சுய நினைவுக்கு வர, அவள் உடம்பு ஒரு நிமிடம் சிலிர்த்துதான் போனது.  ‘இதையெல்லாம் நான் எப்படி கருணிடம் கூறுவேன்.’ என தெரியாமல் அவள் திண்டாடினாள்.

அன்று இரவு,

வசிஷ்டாவிற்கு மனதில் ஏதோ ஒரு கனம் இருந்தது. அதனால் வழக்கம் போல் தன் முழு உடலை காட்டி வருபவனை கவர்ச்சிகொண்டு விலக்க விரும்பினாள். வனஜாவும் எல்லோரையும் அழைக்க, அனைவரும் வேகமாக ஓடி வந்தனர். ஆனால், வசிஷ்டாவின் வேகம் மெல்ல குறைந்து கதவின் மறைவில் திடீரென நின்றது.

காரணம், வந்தது வேறு யாருமல்ல. கருண் தான்.

ஆம்,

அவளுக்கு அப்படியே தூக்கிவாரி போட, மாதவிடாயை காரணமாய் காட்டி மறுத்துவிட முடிவு செய்து மீண்டும் அறைக்குள் சென்றவள், ‘ஒருவேளை தன் பெயரை வனஜா பயன்படுத்த, இதனால் கருண் சந்தேகப்படுவானோ!’ என சட்டென யோசித்து அங்கே என்ன நடக்கிறது என்பதை மறைமுகமாக நின்று கவனிக்க தொடங்கினாள். அவள் விரும்பிய ஒருவன் விபச்சாரம் நடக்கும் இடத்தை அடைய, அவள் மனதளவில் வெகுண்டெழுந்தும் வெம்பினாள்.

கருண் அங்கே அரைக்குறை நிலையில் தன்னை அலங்கோலப்படுத்திக்கொண்ட பல பெண்ணை கண்டான். வனஜாவோ வசிஷ்டாவை கண்களால் தேடிவிட்டு ‘வசி எங்கே?’ என மற்றவர்களிடம் கேட்க, வசிஷ்டா வேகமாக கருண் கண்களை பார்த்தாள். அந்த வசி எனும் சொல்லை கேட்டவுடன் அவன் விழிகளில் சந்தோஷம் நிரம்ப, சிறிதளவு சந்தேகம் கூட அதில் காணப்படவில்லை.

வனஜா அதிருப்தியுடன் மற்றவர்களில் எவரேனும் ஒருவரை தேர்ந்தெடுக்க சொல்ல, தன்னை நிதானப்படுத்திக்கொண்ட கருண் அங்கிருந்தவர்களை பார்த்து அதில் ஆடையை மறைத்து நின்ற ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தான். அவளோ, “வசி டெக்னிக் எனக்கு இன்னைக்கு பர்ஸ்ட் வொர்க் அவுட் ஆச்சுடி” என மற்றவர்கள் காதில் கிசுகிசுத்து கிளம்ப, வசிஷ்டாவுக்கோ வழக்கத்தை விட மனதில் ஒரு கோபமும், கவலையும் பொங்கி வழிந்தது.

காரணம்,

அவள் விருப்பமான ஒருவனுக்கு வேறு ஒருவள் இன்று இரவு விருந்து படைக்க போகிறாள் என்றவுடன், அவள் மிகவும் வேதனையுற்றாள்.

அப்பெண்ணோ தாழ்ப்பாள் போட்டு உள்ளே அவனை சிறைப்பிடிக்க, அப்படியே கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துவிடலாமா? என வசிஷ்டாவின் மனம் மிகவும் ஏங்கியது. என்ன இருந்தாலும் தனக்கு விருப்பமான ஒரு ஆணை வேறு ஒரு பெண் கட்டி அணைக்க நினைத்தால் யாருக்குத்தான் கோபம் வராது. அதில் விபச்சாரி மட்டுமென்ன விதிவிலக்கா…

விளைவு,

‘இந்நேரம் என்னவனை இந்த இராட்சசி என்ன செய்துக்கொண்டிருக்கிறாளோ?’ என அவள் நினைக்க, “வசி!” என பின்னிருந்து வேகமாக ஒரு குரல் கேட்டது.

அவள் சட்டென திரும்பி பார்க்க, அது வனஜா தான். அவள் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு “என்னாச்சு உனக்கு?” என கேட்க, “அம்மா…..” என சொல்லை இழுத்தாள் வசிஷ்டா. பின்னர் மெல்ல, “எனக்கு பீரியட் டைம்மா!” என அவள் சொல்ல, “என்ன பீரியட்? எனக்கு புரியல…” என்றாள் வனஜா.

ஆம், மாதவிடாய்க்கெல்லாம் அவள் ஒருமுறை கூட விடுப்பு எடுத்ததில்லை. விபச்சாரியின் வாழ்க்கையில் மாதவிடாய் என்பது மாதந்தோரும் வந்து போனாலும், அதை யாரும் பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை. அதனால், வனஜாவும் ஒன்றும் புரியாதவள் போல் கேட்க, “மென்சஸ் டைம்மா…” என்றாள்.

வனஜாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே அமைதியாக அவள் சென்றுவிட்டாள். காரணம், வசிஷ்டாவின் மாற்றங்கள் எல்லாம் விட்டு விலகி விரைவில் சென்றுவிடுவாளோ எனும் எண்ணத்தையே வனஜா மனதில் விதைத்தது.

அவள் சென்ற பின்னர் கட்டிலில் சென்று விழுந்த வசிஷ்டா, வலது புறத்திலிருந்து இடதுப்புறம் நோக்கி புரண்டபடி படுத்திருந்தாள். இதற்கு எவனாவது இன்று தன்னை விருந்துண்டு சென்றிருந்தால் பரவாயில்லை என்பது போல் அவளுக்கு தோன்றியது.

‘இந்நேரம் என் மன்னவன் என்ன பாடுப்படுகிறானோ’ என ஒருபக்கம் யோசிக்க, என்னிடம் இல்லாத ஒன்றை நான் எப்படி அவனிடம் மட்டும் எதிர்ப்பார்க்கலாம்?’ எனவும் அவளுக்கு மனதில் சுருக்கென குத்தியது. ஆம், அது தான் கற்பு.

இப்படி சிந்தித்தே அன்றைய இரவை அவள் கழிக்க, எப்போது விடியுமென்றும் இருந்தது.

அதிகாலை 4 மணி,

வசிஷ்டா வழக்கத்தைவிட சீக்கிரம் எழுந்து மற்ற பெண்களுடன் ஐக்கியம் ஆனாள். அன்றைக்கு வனஜா மட்டும் அந்த சபையில் இல்லை. அவரவர்கள் வந்த ஆண்கள் தன்னை கட்டிலில் என்னவெல்லாம் செய்தான் என்று சொல்லி சிரிக்க, எப்போது கருண் பற்றி பேச்சு வரும் எனவும் எதிர்பார்த்து காத்திருந்தாள் வசிஷ்டா.

அப்போது,

“ஹேய்! நேத்து வந்தவன் செம ஸ்மார்ட்டா இருந்தானே.என்ன! நைட்டு செம ட்ரீட்டா?” என கருண் பற்றி பேச்சு தொடங்க, “அடிப்போடி! அவன் சரியான தயிர் சாதம்டி” என சிரித்தாள் அவள். வசிஷ்டாவிற்கு கருண் பற்றி தவறாக இவர்கள் பேசுவதால் கோபப்படுவதா? இல்லை, நேற்று இரவு எதுவும் நடக்காததை நினைத்து சந்தோஷப்படுவதா என தெரியாமல் தவித்தாள்.

அவளோ தொடர்ந்தாள்.

“ஹேய்! என்னடி சொல்லுற? வந்தவன் வேஸ்ட்டா?” என இன்னொருவள் கேட்க, “ஆமாம்டி! எப்படியும் இன்னைக்கு நைட்டு ஒருக்கை பார்த்துடனும்னு குஷியா போனேன். அவன் கட்டிக்க போற பொண்ண தவிர வேற யாரையும் தொட மாட்டானாம்.” என வாய்விட்டு சிரிக்க, வசிஷ்டாவுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“அப்புறம் எதுக்கு வந்தானாம்?” என ஒருத்தி சலித்துக்கொண்டே கேட்க, “சார் ரிசர்ச் பண்ண வந்திருக்காருடி” என்றாள் அவள். வசிஷ்டாவுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. அந்த பெண்ணோ, “ஏதோ பொண்ணுங்களோட மனச பொறுத்து பொறக்க போறது ஆணா? பெண்ணா? தெரிஞ்சுக்கனுமாம். அதுக்கு ஒத்திகை பார்க்க தான் வந்திருக்காரு.” என சொல்லி வாயை மூடியபடி சிரிக்க, வசிஷ்டா நிம்மதியாக வேலைக்கு புறப்பட கிளம்பினாள்.

அப்போது ஒருத்தி,

“என்ன???? ரிசர்ச் பண்ண தான் நைட்டு வந்தானா? நான் ரிசர்ச்சுக்கு ஹெல்ப் பண்ணலாமான்னு நீ கேட்க வேண்டியது தான!” என கைத்தட்டி சிரிக்க, வசிஷ்டா அவர்களை பார்க்காமல் முறைத்துக்கொண்டே கம்பீரமாக நடந்தாள்.

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 09

வசிஷ்டாவின் வாழ்வில் நடந்தவற்றை முதன்முறையாக தன் மனம் கவர்ந்த ஒருவனிடம் சொல்ல அவள் முடிவு செய்தாள்.

ஆம்,

கருணிடம் தான் யார் என்பதையும் தன் வாழ்வில் என்ன நடந்தது எனவும் சொல்ல அவள் நினைத்த படி பேருந்தில் பயணம் செய்ய, அப்போது எதார்த்தமாக கருண் அவள் கண்களில் தென்பட்டான். அவன் முகத்தில் ஏதோ ஒரு மகிழ்ச்சி. ஒரு டீ கடையில் வைக்கப்பட்டிருந்த டிவியை ரசித்து அவன் பார்த்துக்கொண்டிருக்க, அவன் அருகில் ஒரு அழகான பெண்ணும் அமர்ந்திருந்தாள்.

அவனை கண்ட வசிஷ்டா பேருந்தை விட்டு இறங்கி அவனிடம் மனசு விட்டு பேச முடிவு செய்ய, தோனி அடித்த ஒரு ஷாட்டை கண்டு கருண் அருகிலிருந்த பெண்ணை வேகமாக கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, வசிஷ்டாவுக்கு இதயத்துடிப்பே நின்று போனது.

அவன் தான் தன் உலகமென அவள் நினைக்க அந்த சம்பவம் அவனை வேறு ஒரு பெண்ணின் அரவணைப்பு உலகத்தை நோக்கி அறிமுகப்படுத்த, வசிஷ்டா அவன் பார்வையிலிருந்து விலக நினைத்தாள்.

ஆனால், அவள் தன்னை மறைத்துக்கொள்ளும் முன்னே அவள் வேதனையை புரிந்தவனாய் கருண் மெல்ல திரும்ப பேருந்தில் வசிஷ்டா இருப்பதையும் பார்த்துவிட்டான்.

அவன் வேகமாக கிளம்பிய பேருந்தை நிறுத்த, வசிஷ்டாவும் தனக்காக தான் பேருந்து நிற்கிறது என்பதை புரிந்துக்கொண்டு மெல்ல தலைக்குனிந்தபடி இறங்கினாள்.

“என்னங்க! பார்த்துட்டும் பார்க்காத மாதிரி போறீங்க… வாங்க மேட்ச் பார்க்கலாம்” என அழைக்க, “இல்ல கருண்! எனக்கு வேலை இருக்கு.” என்றால் வசிஷ்டா. கருண் மெல்ல அமைதியாக, அவளையும் அவள் கூறிய பொய் தடுத்தது. “கருண்!” என மெல்ல அழைத்தாள் வசிஷ்டா.

“ஹூம் சொல்லுங்க…” என அவன் சிரித்துக்கொண்டே கேட்க, “ஸாரிங்க! எனக்கு கிரிக்கெட் பார்க்குற பழக்கமில்லை. அதான் அப்படி சொன்னேன்.” என சொல்ல, எதிர்பாராதவிதமாக அவள் கையை பிடித்தான் கருண். அப்போது வெட்கம் கொண்டு மண்ணை பார்த்துக்கொண்டிருந்த வசிஷ்டாவின் கண்கள் கருணின் கண்களை பார்த்தது.

“இவ்வளவு தானா! பரவாயில்லை. வாங்க! நான் சொல்லித்தரேன்” என கூறியவன் அவள் கைகளை தரதரவென இழுத்துக்கொண்டு டீக்கடை நோக்கி சென்றான். கருணுடன் இருந்த அந்த பெண் வசிஷ்டாவை பார்த்ததும் லேசாக புன்னகை பூத்தாள். அவளும் வேண்டா வெறுப்போடு சிரிக்க, அவளை அமர வைத்தான் கருண்.

“ரேஷ்மா! இவங்க தான்…நான் சொன்னனே வசிஷ்டா!” என அறிமுகப்படுத்த, “ஹாய்!” என்றால் அப்பெண்.

வசிஷ்டாவின் மனதில் பலவித குழப்பம். ஆம், நமக்கு பிடித்தவர்களிடம் என்றுமே எந்த ஒரு விஷயத்தையும் மறைக்கக்கூடாது. அப்படி இருக்க கருண் என்னை பற்றி இவளிடம் சொல்லி இருக்கிறான் என்றால் இவர்கள் இருவருக்குள் அப்படி என்ன இருக்கிறது என அவள் மனம் யோசித்துக்கொண்டிருந்தது.

ரேஷ்மா என அறிமுகப்படுத்தியவன் அதன்பின்னர் அவளுக்கு கிரிக்கெட் பற்றி அழகாக விளக்கி கூறத்தொடங்க, ரேஷ்மா ஓர ஜாடையில் இருவரையும் பார்த்துக்கொண்டே தன் கரம் தாங்கிய காபியை இழுத்துக்கொண்டிருந்தாள்.

கருண் வசிஷ்டாவின் காதுகளை சொல்லால் தீண்ட, அவள் கண்களோ ரேஷ்மாவை பார்த்த வண்ணம் இருந்தது. ரேஷ்மாவின் கண்களில் அப்படி ஒரு எரிச்சல் தெள்ள தெளிவாக தெரிந்தது. ‘யாருக்கு தான் தனக்கு பிடித்த ஆண், இன்னொரு பெண்ணுடன் பேசுவது பிடிக்கும்!’ என வசிஷ்டா மனதில் நினைத்துக்கொள்ள, அப்போது ரேஷ்மா திடீரென கருண் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தாள்.

வசிஷ்டாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது கருண், “ஹேய் ரேஷு! டோன்ட் திங்க் லைக் தட் ஓகே… வீ ஆர் ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ்….” என்றான்.

வசிஷ்டா முடிவே செய்துவிட்டாள். ‘இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்கிறது. அதுவும் நமக்கு பிடிக்காத ஏதோ ஒன்று இருக்கிறது. இதற்குமேல் நாம் இங்கே இருப்பது நல்லது அல்ல…’ என நினைத்தபடி வேகமாக அவள் கிளம்ப உடனே கருண், “வாட் ஹேப்பன்ஸ் வசிஷ்டா? ஏன் எழுந்திரிச்சிட்டிங்க? கிரிக்கெட் பார்க்க போரா இருக்கா?” என கேட்க,”இல்ல கருண்…நீங்க பாருங்க. டிஸ்டர்ப் பண்ணிட்டனு நினைக்கிறேன்…” என்றாள் வசிஷ்டா.

அவள் அப்படி சொன்னபோது அவளுடைய கண்கள் ரேஷ்மாவை பார்த்ததை கருண் பார்த்துவிட்டான். ரேஷ்மா காதுகளில் கிசுகிசுத்த வார்த்தை ஏதோ தான் அவளை காயப்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்துக்கொண்ட அவன்  மெல்ல சிரித்தான்.

“ஓஹோ! ரேஷ்மா யாருனு தெரியனுமா…” என கேட்க அப்போது கருண் தன் நண்பன் அழைக்க தூரம் சென்றுவிட்டான். இப்போது அந்த டீ கடையில் வசிஷ்டாவும், ரேஷ்மாவும் மட்டும் தான். அவளுக்கோ எந்த பக்கம் பார்ப்பது என்றே தெரியவில்லை. ரேஷ்மா இப்போது தன்னை எப்படி பார்ப்பாள் எனக்கூட தெரியாமல் தவித்தாள் வசிஷ்டா.

அப்போது திடீரென,

“வசி!” என அழைத்தாள் ரேஷ்மா. அவள் திடுக்கென வேகமாக ரேஷ்மா நோக்கி திரும்ப, அவள் வசிஷ்டாவை பார்த்து சிரித்தாள். “ஹாய்! நான் ரேஷ்மா. கருணோட பிரெண்ட்” என்றாள். அவள் கூறியதை கேட்ட வசிஷ்டாவிற்கு என்ன முக பாவனை தருவதென்றே தெரியவில்லை.

“எவ்வளவு நாளா என் கருண உனக்கு தெரியுமென?” கேட்க, அவள் கூறிய “என் கருண்” என்னும் வார்த்தை வசிஷ்டாவை என்னென்னமோ செய்தது. ‘என்னை ஏனடா விட்டு சென்றாய்?’ என அவள் மனம் ஏங்கியது.

ரேஷ்மாவின் கண்களோ வசிஷ்டாவையே பார்த்த வண்ணம் இருக்க, 10 நொடிக்கு பிறகு தன்னை நிதானப்படுத்திக்கொண்ட அவள், “இப்போதான் கொஞ்ச நாளா தெரியும்…” என்றாள்.

“எனக்கு கருண காலேஜ்ல இருந்தே தெரியும்..” என ரேஷ்மா சொல்ல, வசிஷ்டா வேகமாக அவளை பார்த்தாள். ‘ஏன் நாம் இவனை சந்தித்தோம். எப்போதும் போல் வருபவர்களுக்கு உடலை பரிமாறி சென்றிருக்கலாமோ. இவ்வளவு நடந்த பிறகு நமக்கு காதல் ஒரு கேடு தானா!’ என அவள் மனம் ஏங்க, ரேஷ்மா அவளை விடுவதாக தெரியவில்லை.

“கருண உனக்கு பிடிச்சிருக்கா வசிஷ்டா?” என அவள் கேட்க, அந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அவள், “இல்லங்க! அப்படி எல்லாம் இல்லை.” என்றாள்.

ரேஷ்மா சிரித்தாள்.

“நாங்க பிரெண்ட்ஸ் தான் வசிஷ்டா. பட், என்னோட கருண் அப்டினு சொன்னப்போ உன்னோட கண்ண நான் உடனே பார்த்தேன். அதுல காதல் தெரிஞ்சுது. அந்த காதல் ஏற்படுத்திய கோபமும் தெரிஞ்சுது. நீ என்ன செய்றன்னு பார்க்கத்தான் என்னோட கருண் சொன்னேன். உண்மையிலேயே நீ லவ் பண்றீயா வசி…” என கேட்க, அவளுக்குஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை.

ரேஷ்மா தொடர்ந்தாள்.

“கருண் ரொம்ப நல்லவன் வசி. இந்த 5 வருஷத்துல எத்தனையோ தடவ என்ன கட்டிப்பிடிச்சிருக்கான். ஆனால், அதுல ஒரு தடவ கூட நான் காமத்த பார்க்கல.” என சொல்ல, வசிஷ்டா தன்னவனை பற்றி கேட்க ஆர்வத்துடன் அவளை பார்க்க தொடர்ந்தாள்.

“ஒரு பொண்ணு லேசா உரசி பேசுனா எப்போ ரூம் போடலாம்னு கேட்குற உலகமிது. நாங்க எங்களோட ரிசர்ச்சுக்காக எத்தனையோ தவறான போட்டோஸ் எடுத்துருக்கோம். ஆனால், இன்னைக்கு வரைக்கும் என்ன அவன் காட்சி பொருளா பார்த்ததே இல்ல வசிஷ்டா.” என சொல்ல, கருண் மீது ஒருமடங்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் ஆனது அவளுக்கு.

வசிஷ்டா தன் கேள்விகளுக்கான பதிலை தெரிந்துக்கொள்ள விரும்பினாள்.

“கருண்கிட்ட நீங்க ஏதோ காதுல சொன்னிங்களே…” என தயக்கத்துடன் கேட்க, “ஹா! ஹா!” என வாய்விட்டு சிரித்தாள் ரேஷ்மா.

“அது ஒன்னுமில்ல வசி! அவனுக்கு எல்லாமே லைப்ல வித்தியாசமா எதிர்பார்ப்பான். அவனுக்கு ரொம்ப கிரிக்கெட் புடிக்கும். ஆனால், அவனுக்கு வர பொண்ணுக்கு கிரிக்கெட் தெரியாம இருக்கனும்னு அடிக்கடி சொல்வான். ஏண்டானு காரணம் கேட்டா, அப்போதான் அவளுக்கு நான் சொல்லி தர முடியும்னு சொல்வான்…” என சொல்ல, இப்போதுதான் “வீ ஆர் ஜஸ்ட் ப்ரண்ட்ஸ்…” என ரேஷ்மாவிடம் கருண் கூறி சென்றதற்கான காரணம் வசிஷ்டாவுக்கு புரிந்தது.

வசிஷ்டா இப்போது மெல்ல சகஜமாக ரேஷ்மாவிடம் பேச, இருவரும் தோழியாக துளி நிமிடத்தில் மாறினர்.

“கிரிக்கெட் தெரிஞ்ச பொண்ண மேரேஜ் பண்ணுனா லைப் நல்லா இருக்காதா?” என அவள் கேட்க, உடனே ரேஷ்மா., “இதே கேள்வியை அவனிடம் ஒரு நாள் கேட்டேன் நான். அவன் என்ன சொன்னான் தெரியுமா? கிரிக்கெட் தெரிந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டாலும் வாழ்க்கை நல்லா இருக்கும் ரேஷ்மா. ஆனால், தெரியாத ஒரு விஷயத்தை இருவர் தெரிந்துக்கொள்ளும்போது தான் இன்னும் வாழ்வில் சுவாரஸ்யம் அதிகமாகும். கிரிக்கெட் தெரிந்திருந்தால், உனக்கு இந்த டீம் பிடிக்கும். எனக்கு இந்த டீம் பிடிக்குமெனவே நம் வாழ்க்கை தொடங்கும். அதுவே தெரியாமல் இருக்கும்போது அதை நாம் அவளுக்கு சொல்லிக்கொடுக்க, அங்கே காதல் பூக்கும். அதன்பின்னர் பிடித்த டீமை பற்றி பேசி தலையணை சண்டை போட, அது இன்னும் வாழ்க்கையை அழகாக்கும்…” என கூறுவான் என்றால் ரேஷ்மா.

வசிஷ்டாவிற்கு கருண் செயல்கள் மிகவும் வித்தியாசமாக தெரிந்தது. இருப்பினும் அதை முற்றிலும் அவள் ரசித்தாள்.

“இன்னைக்கு வரைக்கும் நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து தான் கிரிக்கெட் பார்ப்போம் வசி. எப்படி வாழனும்னு எனக்கு சொல்லி கொடுத்ததே அவன் தான். ஆனால், எத்தனையோ நாள் பீல் பண்ணிருக்கேன். நாம ஏன்டா கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சோம். ஒருவேளை, எனக்கு இந்நேரம் கிரிக்கெட் தெரியலைன்னா அவனே சொல்லிக்கொடுத்திருப்பானே என நினைச்சிருக்கேன். யூ ஆர் வெரி லக்கி வசிஷ்டா…” என அவள் சொல்ல, வசிஷ்டாவிற்கு முதல் முறை தன்னை பெண் பார்க்க வந்தபோது வராத வெட்கம் கருண் வாழ்வை கேட்டு அவள் மனதில் பற்ற, நெருப்பில் சிக்கிய காகிதமாய் வெட்கத்தில் அவள் முகம் சிவந்து போனது.

அப்போது கருண் தூரத்தில் வர, “இப்போதுகூட நான் கருண் காதில் கிசுகிசுத்ததால் தான் நீ முகம் வாடிப்போய் இருக்கிறாய் என்பதை தெரிந்துக்கொண்டே அவன் பிரெண்ட பார்க்க போற மாதிரி போனான் வசி. நீ என் கூட பேசனும்னு தான் அவன் இப்போ போனான். பட், நான் காதுல என்ன சொன்னேனு மட்டும் தான் உங்கிட்ட சொல்ல சொன்னான். நான் அவன பத்தியும் சேர்த்து உங்கிட்ட சொல்லிட்டேன். அவன் கிட்ட நான் சொன்னத பத்தி வாய திறக்காத வசி…” என கண் சிமிட்டினாள் ரேஷ்மா.

‘கருண் என் மனதில் இருக்கும் அச்சத்தை புரிந்துக்கொண்டு தான் என்னைவிட்டு போனானா?’ என மிகவும் ஆச்சரியத்துடன் தூரத்தில் வந்த அவனை பார்த்தாள் வசிஷ்டா.

அவனோ, வந்தவுடன் எதுவும் தெரியாததுபோல் சாதாரணமாக அவர்கள் இருவரிடமும் பேச, மணியை பார்த்தான். அப்போது மணி மாலை 6 ஆனது.

“வசி! டைம் ஆச்சு.. நீ கிளம்பு நாம இன்னொரு நாள் சந்திக்கலாம்” என கருண் சொல்ல, “ஹூம்” என தலையை ஆட்டினாள். “டேய், நானும் தான் உன்கூட எத்தனையோ தடவ பேசிட்டு நைட்டு 9 மணிக்கு கூட போய் இருக்கேன். என்ன என்னைக்காச்சும் கேட்டியாடா…” என ரேஷ்மா முறைக்க, “இல்ல ரேஷ்மா! உன்ன நான்கூட டிராப் பண்ணிடுவேன். அவள யாரு டிராப் பண்றது. அதுவும் 9-10 மணிக்கு…” என்றான் கருண்.

வசிஷ்டாவை மனதளவில் அவன் தீண்டிக்கொண்டே இருக்க, அவனுடன் பல ஜென்மங்கள் வாழ்ந்த ஒரு உணர்வை அவள் பெற்றாள். “சரி நான் கிளம்புறேன்” என வசிஷ்டா புறப்பட, அவர்கள் இருவரும் தோளில் கையைப்போட்டுக்கொண்டு சிரித்து பேசியபடி பின்புறம் சென்றனர்.

‘உன்னை போல் ஒரு ஆண் மகன் என்னை எத்தனை முறை கட்டிலில் தள்ளி இந்நேரம் பாடம் கற்பித்திருந்தாலும், என் கற்பு என்னிடமே இருந்திருக்குமேடா. என் மனதை மட்டுமே நான் இழந்திருப்பேன்.’ என வசிஷ்டா மனதில் நினைத்துக்கொண்டு மெல்ல பின் திரும்பி பார்க்க, அதே நேரத்தில் ரேஷ்மாவும் கருண் தோளில் கையை போட்டுக்கொண்டு திரும்பி வசிஷ்டாவை பார்த்து கண் அடித்தாள்.

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 10

வசிஷ்டாவுக்கு முட்கள் தன்னை சுற்றி அணைத்திருக்க ஆடையற்ற மேனியின் கூச்சம் கொண்டவளாய் நடக்கையிலே நெளிந்தாள்.

ஆம்,

கருணிடம் தன்னைப்பற்றி கூறலாம் என நினைத்த அவளுக்கு அவன் வாழும் வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஒரு சுயநலம் தொற்றிக்கொள்ள, எங்கே தன் வாழ்க்கையை பற்றி அவள் பேசுவதால் தன்னை விட்டு விலகி சென்றுவிடுவானோ என மிகவும் பயந்தாள்.

மனிதன் உடல் ஆசைகளில் மூழ்கி என் ஆடை அவிழ்க்கும் வாழ்க்கை வாழும் தனக்கு காதல் ஒரு கேடு தானா என நினைத்தாலும், அவனிடம் மறைப்பதை மிகவும் வேதனையாக நினைத்தபடி நடந்தாள் வசிஷ்டா.

விளைவு,

பேருந்தில் ஏறியதும் அயர்ந்து தூங்க தொடங்கினாள்.

அதனால் அவள் வாழ்க்கை மீண்டும் கதவை தட்ட, கதவுக்கு வெளியில் நிதுன் நின்றான்.

வசிஷ்டா அழகிய சேலை உடுத்தி அவன் முன்னே நிற்க, வெட்கம் அவளுக்கு பாதுகாப்பு கவசமாகவும் சூழ்ந்திருந்தது. அவன் தன்னை தான் பார்க்கிறான் என நினைத்த அவள், தலைகுனிந்தபடி நிற்க, கண்களோமெல்ல அருகிலிருந்த அவனையும் தேடியது.

அப்போது திடீரென வசிஷ்டா முகம் வாடிப்போனது.

காரணம்,

நிதுன் கருவிழிகள் அவள் கண்களை கவரவில்லை. மாறாக அவள் இடையை திருமணத்துக்கு முன்பே பார்வையால் பலாத்காரம் செய்துக்கொண்டிருந்தது. வசிஷ்டாவின் கனவுகள் எல்லாம் அவன் கண்களில் தொலைந்து போக, கொஞ்ச நேரத்துக்கு முன்பு தாம்பூலம் மாற்றிக்கொண்டதை நினைவு கூர்ந்தது அவள் மனம்.

30 நிமிடங்களுக்கு முன்…

“ஹேய் வர போறவங்க ரொம்ப பெரிய இடம்டி… இதுக்கு தான் உன்ன நாங்க நல்லா படிக்க வைக்கனும்னு நினைச்சது. அவங்ககிட்ட நல்ல மாதிரியா நீ நடந்துக்கனும். சரியா?” என கேட்க, கீழே குனிந்தபடி வசிஷ்டா தலையை மட்டும் ஆட்டினாள். அப்போது பேருந்தில் போடப்பட்ட சடன் பிரேக்கில் அவள் நினைவு கலைய, சுயநினைவுக்கு வந்தாள்.

“சாவு கிராக்கி! சாக என்னோட வண்டி தான் கிடைச்சுதா…” என டிரைவர் திட்டிக்கொண்டே மீண்டும் வண்டியை  எடுக்க, வசிஷ்டா கன்னத்தில் கைகளை தாங்கிக்கண்டு தான் நினைத்த நினைவை தொடங்க நினைக்க, மணியையும் பார்த்தாள்.

அவள் கைகளில் இருந்த கடிகாரம் வேகமாக நொடியை நகர்த்திக்கொண்டிருக்க, வனஜாவின் முதல் வார்த்தையை தன் அம்மா கூறிய வார்த்தையுடன் ஒப்பிட்டு பார்த்தாள்.

“ஹேய் வர போறவங்க ரொம்ப பெரிய இடம்டி. அவங்ககிட்ட நல்ல மாதிரியா நீ நடந்துக்கனும். சரியா?”

விபச்சார வாழ்க்கையை தேர்ந்தெடுத்த அவளுக்கு அங்கிருந்த மற்ற விபச்சாரிகள் கூறிய முதல் அறிவுரை இதுதான். அதனால், அந்த இரண்டு நிகழ்வை நினைத்த அவளை வெட்கம் பிடுங்கி தின்றது.

ஆம்,

தனக்கு வரப்போகும் ஒருவன் கனவுகளை அவிழ்த்து ஆறுதலாக மனதை அணைப்பான் என நினைக்க, அவனோ கண்களாலே கண்ட தன் வருங்கால மனைவியை கற்பழித்தான்.

அவளை அழகுப்படுத்திய வெட்கம் அரைநொடியில் அலங்கோலப்படுத்த, தான் வீட்டில் தான் இருக்கிறோமா? இல்லை, விபச்சாரத்தில் விழுந்து தவிக்கிறோமா என தெரியாமல் தவித்தாள் அன்று.

வசிஷ்டாவின் இடுப்பை பார்த்து கொண்டிருந்த நிதுனை சிறிய கணைப்பால் சுய நினைவுக்கு அவள் கொண்டு வர, அப்போது தான் நேரெதிரில் நின்ற அவள் கண்களை கண்டான். அப்போதுகூட அவள் உதடுகளை ருசித்து கண்கள் வழியாக தூது அனுப்ப, இரவில் தனியாக நடந்து சென்றுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, தவறாக நினைத்த ஒருவன் “வரீயா” என அழைப்பது போல் அவளுக்கு இருந்தது.

என்ன செய்வது என தெரியாமல் யோசித்து முடிப்பதற்குள் மூன்று முடிச்சை அவள் கழுத்தில் இட்டான் நிதுன் .

அன்று இரவு,

முதலிரவு என்பது என்ன என நன்கறிந்தவள் வசிஷ்டா. அதனால் அவள் முதலிரவு எப்படி நடக்க வேண்டுமென ஒரு பட்டியலே போட்டு வைத்திருந்தாள்.

ஆம்,

அவள் தோழிகள் கண்ட காணொளிகளை எல்லாம் மங்கை அவளுடன் பகிர்ந்துகொள்ள பெண்ணவள் ஒருவித பதட்டத்துடன் இருக்க வேண்டும். காரணம், இன்றைய நாள் இரவு தான் நாங்கள் வாழப்போகும் மற்ற நாளை முடிவு செய்யும் என்பதை வசிஷ்டா நன்கு அறிந்தவள்.

அதனால்,

பால் குவளையுடன் நுழையும் என் பாதங்களை வருங்கால கணவன் தாங்க வேண்டும். என்னை அப்படியே கட்டி அணைத்து தூக்கி சென்று கட்டிலில் கிடத்த, மெல்ல அருகில் அமர்ந்து கைகளை கன்னத்தில் முட்டுக்கொடுக்க வேண்டும். என் அழகை மெல்ல வருணிக்க, அதில் கலந்திருக்கும் ஆபாசம் கண்களுக்கு தெரியவும் கூடாது. மாறாக மனதிலிருக்கும் ஆசைகளை கேட்க, அவன் தோளில் சாய்ந்தபடி ஆசைகளை நான் அவிழ்க்க, ஆடை அவிழ்த்து இருவரின் புரிதலுடன் ஒரு உயிரை உருவாக்க மாட்டானா எனவும் ஏங்க வேண்டும்.

அந்த நிமிடமே நான் அவனை முழுவதுமாக புரிந்துக்கொள்ள, என் வாழ்க்கை இனிமையாக தொடங்க வேண்டும் என அவள் யோசித்து சுய நினைவுக்கு வர, நிதுனோ நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான்.

அவள் உடம்பில் ஒட்டு துணிக்கூட இல்லை.

வசிஷ்டாவின் கண்கள் வெம்ப, அவள் ஆசையை அந்த நொடியே குழித்தோண்டி புதைத்துவிட்டதை போல் உணர்ந்தாள். அவள் அனுமதியை கேட்காமலே அவனால் ஸ்பரிசிக்கப்பட, தான் கற்பழிக்கப்பட்டுவிட்டோமோ என்னும் எண்ணமே அந்த தாலி ஏறிய பெண்ணின் மனதில் தோன்றியது.

மறுநாள் காலை,

வசிஷ்டா மெல்ல எழுந்து வெளியில் செல்ல, அவள் அம்மா ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்தாள். அவளோ ஏதும் பேசாதவளாய் சமையலறைக்குள் நுழைய, பம்மியபடி உள்ளே நுழைந்தாள் பங்கஜம்.

வசிஷ்டா மெல்ல காபி கப்பை கழுவி அடுப்பை பற்ற வைக்க, “வசி!” என அவள் காதில் கிசுகிசுத்தாள் பங்கஜம். என்ன என்பது போல் வேகமாக திரும்பி அவள் பார்க்க, “ராத்திரி எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?” என்றாள்.

அவளை அந்த சொல் வேதனையில் வாட்டி வதைக்க, இந்த உலகத்தை நினைத்து மனதினில் சிரித்தாள்.

ஆம்,

விருப்பமற்ற ஒருவன் அவளை தீண்டினால் தீண்டாமை என தள்ளுகிறது. அதுவே திருமணம் எனும் பேரில் ஆசைதீர ஆடை அவிழ்த்து விளையாடினால் அதை பெற்றோர்களே பூரிப்புடன் கேட்கின்றனர் என நினைத்த அவள் கண்களின் ஒரு துளி நீர் எட்டி பார்க்க, “ஏன்டி அழகுற?” என பங்கஜம் கேட்டாள்.

உடனே வசிஷ்டா, “என்னோட திருமண வாழ்க்கையினால சந்தோசம் வழியனும் ஆசைப்பட்டேன். ஆனால், வழிய வேண்டியது வழிஞ்சுட்டு. சீக்கிரமே உன் கையில பேரப்புள்ளைய தூக்கி கொடுக்குறேன் போதுமா…” என கோபத்துடன் புறப்பட்டாள்.

நிதுன் மெல்ல எழுந்து எவ்ளோ நேரம் காபி போடுவ…என அவள் கையிலிருந்த கப்பை பிடுங்கி ஓரமாக வைத்துவிட்டு பகல் வேட்டைக்கு தயாரானான்.

ஆம்,

அவள் இடுப்பை ஆடையுடன் பிடித்து அவன் அணைக்க, மெல்ல அவன் இதழை வசிஷ்டா நெருங்கினாள். ஆனால், அவள் முகம் வாடியிருக்க நிதுன் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியானது.

அவன் முகம் வாடியது.

வசிஷ்டா மெல்ல எழுந்து, “நான் குளிக்கனும். ஸாரி…” என புறப்பட, “நில்லுடி” என்றான் நிதுன் .

“நாம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட ஆகல. அதுக்குள்ள உன் இஷ்டத்துக்கு நடக்குற. நைட்டு உன்ன தொட்டா, நீ ஏதோ யோசனையில இருக்க. யார நினைச்சிட்டு எங்கூட நேத்து நைட்டு…” என அவன் சொல்லி முடிப்பதற்குள் வசிஷ்டா தன் கையை உயர்த்தி அவன் பாடும் வசையை தடுத்தாள்.

“ஹேய்! என்ன கைய நீட்டுற…” என கன்னத்தில் ஒரு அறை விட, அவள் அழுதுக்கொண்டே, “ஆமாம்! நீ என்ன தொட்டப்போ எவனையோ தான் நினைச்சுட்டு இருந்தேன். அவன் இப்போ உயிரோட இல்ல. என் கூடவே பொறந்தவன். அவன் தான் என் மனசு பூரா இருந்தான். உன்ன எப்போ கல்யாணம் பண்ணிக்கிறன்னு சொன்னனோ அப்போவே செத்துட்டான்.” என அவள் கனவை பற்றி சொல்ல, நிதுன் கோபத்தின் எல்லைக்கு சென்றான்.

“என்னடி! லவ்வா? லவ்வு மட்டும் தானா? இல்ல வேற எதுவுமா?” என கேட்க, வசிஷ்டா வாழ்க்கையின் இரண்டாவது நாளே அவன் பார்வைக்கு விபச்சாரி ஆனாள்.

வசிஷ்டாவை நிதுன் மெல்ல நெருங்க, அப்போது அறைக்கதவை யாரோ தட்டினர்.  அவன் வேகமாக சென்று திறக்க, எல்லோரும் திருமணத்தின் இரண்டாம் நாள் சம்பிரதாயங்களை செய்ய காத்துக்கொண்டிருந்தனர்.

“வீ வில் கம் சூன் மா” என நிதுன் சொல்லி மீண்டும் கதவை சாத்தினான்.

வசிஷ்டா திரும்பி நின்று அழுக, “ஏய்! நடிக்காதடி… நான் ஒன்னும் உன்னோட பாய்பிரண்ட் இல்ல. நான் உன்னோட புருஷன்டி. அழுது ஊர வேணும்னா ஏமாத்து. என்ன ஏமாத்தாத…” என்றான்.

நிதுன் மெல்ல கதவை திறக்க, இருவரும் ஜோடியாக நடந்து வந்தனர். அவள் முகம் அழகாக மலர்ந்து சிவந்து இருந்தது. ஆனால், அங்கிருந்தவர்களுக்கு அது அழுகையினால் சிவந்த முகம் என்பது தெரியாது.

புரிதல் தொடரும்…

ஏக்கம் – 11

நிதுனை விட்டு விலகி இருக்க வசிஷ்டா நினைத்தபோதும் அவன் விடுவதாகயில்லை. அதாவது மாதம் மூன்று நாள் மாதவிடாய் வந்தபோதும் இந்த உலகமே மங்கை அவளை தீண்டாமை எனும் பெயரில் தள்ளி வைக்க, வசிஷ்டா வாழ்க்கையில் மட்டும் மனதை வருட மறந்த நிதுன் கைகள் உடலை வருடி ஆடையை கலைத்தபடி இருக்க களைத்து போனாள்.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்றபோதும் நிதுன் தன் மனைவியான வசிஷ்டாவை ஒரு விபச்சாரியாகவே பார்த்தான். இவை அனைத்திற்கும் முக்கிய காரணம், முதலிரவில் அவள் நடந்துக்கொண்ட விதமே.

யார் மேல் தவறு?

முதலிரவு என்பது ஆடையை மட்டுமே அவிழ்ப்பதல்ல. ஒரு பெண்ணின் ஆசையையும் அவிழ்ப்பது தான் என ஏங்கிய ஏவாளின் மறு உருவ பெண்ணான வசிஷ்டாவின் தவறா.

இல்லை, ஆபாச படங்களை மட்டுமே வாழ்க்கையாக நினைத்து வசிஷ்டாவின் ஏக்கக்குரலில் தத்தளித்து கரை சேர நினைத்த நிதுன் எனும் பாம்பின் குரலா? கடவுளுக்கே அது வெளிச்சம்.

இதயத்தை திறந்து பார்க்க மறுத்த மிருகத்தின் பிடியில் சிக்கிய நிதுனால் அங்குலம் அங்குலமாக ரசிக்கப்பட்டு டிவி மேல் வைக்கப்பட்ட பொம்மையாகவே மாறிப்போனாள் வசிஷ்டா.

அவள் அனுபவித்த அந்த வாழ்க்கை நரகத்தை விட கொடுமையானது என்ற போதிலும், என்ன செய்ய முடியும் அவளால்.

ஒரு கட்டத்தில் காம பாடம் மட்டுமே கற்றவன் வாழ்க்கை அலுப்பின் எல்லைக்கு செல்ல, அதன்பின்னர் சி.ஐ.டி ஆக உருமாறினான் நிதுன். ஆம், வசிஷ்டாவின் கல்லூரி வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை என பாதாளம் வரை பாய்ந்து அவளை பற்றி தெரிந்துக்கொள்ள எண்ணினான். இவை அனைத்திற்கும் காரணம், அவளால் மறுக்கப்பட்ட அந்தரங்க வாழ்க்கை.

விளைவு,

நிதுன் 15 நாட்கள் விடுமுறை எடுத்து நாட் ரீச்சபிள் மொமெண்ட்டிற்கு செல்ல, அவன் அலுவலகத்தில் கூட பொய் காரணம் சொல்லி புறப்பட்டான். ஆம், நிதுன் ஒரு மென் பொறியாளன். விடுப்பு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.அதனால், என் மனைவியுடன் வெளியூர் புறப்படுகிறேன் என கூறி 15 நாள் விடுப்பு வாங்கினான். அவனும் ஏதோ தேனிலவுக்கு தான் திட்டமிட்டிருப்பதாக நினைத்து அலுவலகத்திலும் ஓகே என தலை ஆட்டினர். ‘எனக்கு என் பொண்டாட்டி மேல் சந்தேகம் இருக்கிறது. அதனால் அவள் கடந்த வாழ்க்கையை தேடி போகிறேன்…’ என சொன்னால் நன்றாக இருக்காதல்லவா. அதனால் தான் இந்த பொய் பரப்புரை.

ஒரு நாள் இரவு 9 மணி,

வசிஷ்டாவுக்கு என்னவென்றே புரியவில்லை. எங்கே அவன் சென்றிருக்கிறான்? என்ன செய்து கொண்டிருக்கிறான்? என எதுவும் தெரியாமலிருக்க, தன் போனை எடுத்து நிதுன் எண்ணை முதன்முறையாக தொடர்பு கொண்டாள்.

எதிர்முனையில்…

நிதுன் அழைப்பை ஏற்று அமைதியாக இருக்க, “ஹலோ! நிதுன்! எங்க இருக்கிங்க? ஹலோ! ஹலோ!” என அவள் அலற, எதிர்முனையில் எந்த சத்தமும் வரவில்லை.

ஆனால்,

திடீரென…

“சார்! சீக்கிரம் சொல்லுங்க… இதுல யாரு உங்களுக்கு வேணும்?” என ஒரு பெண் குரல் கேட்க, வசிஷ்டாவுக்கோ ஒன்றுமே புரியவில்லை. “ஒன் மினிட் மேடம்…” என அழைப்பை துண்டித்தான் நிதுன்.

வசிஷ்டா குழப்பத்துடனே தொலைக்காட்சியின் முன்னால் அமர, அப்போது அவள் கேட்ட அதே வசனம் மீண்டும் அவள் காதுகளில் ஒலித்தது.

ஆம்,

“தம்பி! இதுல யாரு வேணும் உனக்கு?” என குரல் கேட்க, சுயநினைவுக்கு வந்தவள் தொலைக்காட்சியை வேகமாக பார்த்தாள். அங்கே ஒரு 5 பெண்கள் அரைக்குறையாக ஆடை அணிந்து ஒரு ஆண் மகன் முன்னால் நிற்க, அதில் ஒரு பெண்ணை அவன் தேர்வு செய்து கையோடு அழைத்து சென்றான்.

வசிஷ்டாவுக்கு வார்த்தையே வரவில்லை.

‘அப்படி என்றால் நிதுனும் விபச்சாரி வீட்டு கதவை தட்ட தான் சென்றிருக்கிறானா?’ என எண்ணியவள் வந்த அழுகையை மறைத்துக்கொண்டு அறையினுள் நுழைந்தாள்.

அவள் மெல்ல அறையினுள் நுழைந்து கதவை சாத்த, இதேபோல் என் கணவனும் தெரியாத ஒரு பெண்ணை தள்ளி தாளிட்டிருப்பானோ எனும் எண்ணமே எல்லையில்லா சோகத்தை அவள் மனதில் தந்தது.

அவள் சென்று கட்டிலில் விழ, அவள் தன்னை ஒரு விபச்சாரியாகவே எண்ணி வெட்கம் கொண்டாள். அவளுக்கு ஆத்திரம் மனதில் பொங்க, அணிந்திருந்த ஆடைகளை அவ்வளவு வேகமாக உருவி எறிந்து அழ தொடங்கினாள்.

அவள் ஆசைத்தீர அந்த அறையில் கேள்விகளை முன் வைத்தாள்.

“எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? கடவுளே! என்ன ஏன் இப்படி சோதிக்கிற…” என அறையிலிருந்த பொருளை எல்லாம் உடைத்து அலங்கோலப்படுத்தினாள். பின்னர், கண்ணாடியின் அருகில் சென்று அதை உடைக்க நினைத்தவளை, ஆடையற்ற அவள் மேனி ஏதோ பல கதைகளை பேச அழைத்தது.

வசிஷ்டாவின் இதழில் லேசான புன்னகை பூக்க, முதன்முறை பருவம் எய்திய ஒரு உணர்வையும் அது அவளுக்கு தந்தது.

அவள் கைகளில் ஒரு காகிதத்தை எடுத்து கண்ணாடியை பார்த்து தன் உருவத்தையே வரையவும் தொடங்கினாள்.

வசிஷ்டா ஓவியத்தை வரைவதில் கற்று தேர்ந்தவள் என்பதால் சில நிமிடங்களில் ஒட்டுமொத்த தன்னுடைய நிர்வாண உருவத்தை வரைந்து முடிக்க, அந்த நிர்வாண புகைப்படத்தில் அவள் கண்ணீர் பட்டு ஆடையாக மாறி அழகாக காட்சியளித்தது.

மறுநாள் காலை,

ஆபீசுக்கு சென்று களைத்து வந்தவனாக நிதுன் வர, அதற்கு முன்பே எழுந்த வசிஷ்டா அறைக்கதவை திறந்து வைத்து மீண்டும் தூங்கினாள்.

நிதுன் ஒரு வித ஜாடை பார்வை வீசி கழுத்திலிருந்த டையை வேகமாக கழற்ற, வசிஷ்டா விழித்துக்கொண்டாலும் அவன் முகம் பார்க்க முடியாதவளாய் அப்படியே படுத்திருந்தாள்.

வசிஷ்டா என்ன செய்வதென அறியாது அப்படியே கட்டிலில் காலத்தால் கிடத்தப்பட்டிருந்ததால் அவளுக்கு அருகில் போர்வை உப்பிய நிலையில் இருந்தது.

அதை கண்ட நிதுன் எனும் சந்தேக பேரொளி, வேகமாக அவள் அருகில் வந்து போர்வையை இழுத்து பார்த்தான். வசிஷ்டாவுக்கோ., அந்த சம்பவம் கற்பழித்த ஒரு பெண்ணை உயிருடன் புதைத்தது போல் இருந்தது.

ஆம்,

அவள் அருகில் யாரோ இருக்கிறார்கள் என நினைத்தே இவ்வளவு அசிங்கமான மனநிலையுடன் அவன் நடந்து கொண்டான் என்பதை புரிந்துக்கொண்டு, அவள் மிகவும் வேதனையுற்றாள்.

வசிஷ்டாவின் நிர்வாண கோலத்தை கண்டவனுக்கு இன்னும் புத்தி பேதலித்து போக, அந்த அறை முழுவதும் சுற்றி நோட்டம் விட்டான். யாரேனும், தனக்கு தெரியாமல் ஒளிந்திருக்கக்கூடுமோ எனும் அற்ப புத்தி தான் நிதுனுக்கு.

யாருமில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டவன், உடைந்து கிடந்த பொருட்களையும் வெறிக்க பார்த்தபடி அவசரமாக வெளியில் கிளம்பி கதவை பூட்டி ஜன்னல் அருகில் வந்தான்.

வசிஷ்டாவுக்கோ ஒன்றுமே புரியவில்லை. “ஹேய்! நான் வெளில கிளம்பறேன். நீ எதுவும் ட்ரை பண்ண மாட்டியே…” என கேட்க, வசிஷ்டாவின் கோபம் எல்லை மீறி காணப்படுவதை கண்களால் உணர்ந்தான்.

அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்க்க, பத்து நிமிடம் கழித்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

வசிஷ்டா தற்கொலை செய்துக்கொள்ளலாம் என நினைத்தாலும், தவறு செய்யாத நான் ஏன் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும். என் வாழ்க்கை ஒரு நாள் மாறும் என முற்றிலும் நம்பினாள்.

அவள் கடவுளை அத்துணை முறை வேண்டியும் கருணை காட்டவில்லை. அவளுடைய அப்பா, அம்மாவை கடவுளாக நம்பியும், அவர்களோ மாற்றான் வீட்டு பிள்ளையாக பார்க்க, மணம் வீசாமல் போனது உறவு.

அதனால் ஒரு முடிவுக்கு வந்தாள் வசிஷ்டா.

அது தான் தன் தந்தைக்கு எழுத நினைத்த கடிதம் அது.

அவள் மேனியை போல் வெற்று காகிதம் ஒன்று எடுத்து கண்ணீரால் பேனாவிற்கு மை நிரப்பி எழுத தொடங்கினாள் வசிஷ்டா.

“என் அப்பாவிற்கு” என அவள் அக்கடிதத்தை ஆரம்பிக்க, கண்டக்டர் கொடுத்த குரலில் மெல்ல அவள் விழிகள் சுய நினைவிற்கு வர, அவள் உலகத்தில் நுழைந்தாள்.

அவள் அழகாக உடை அணிந்திருந்த போதும் அந்த நினைவுகளை விட்டு மீளாத அவள் மனம் ஆடையற்ற மேனியுடன் அந்த சாலையில் நடப்பது போல் இருக்க, அவள் கைகளில் வைத்திருந்த நோட்டை கொண்டு மார்பை மறைத்தபடி நடந்தாள்.

வனஜா, அங்கிருந்தவர்கள் என அனைவரும் அவளை மறைத்து கேள்வி கேட்டபடி இருக்க, எதையும் கண்டுக்கொள்ளாதவளாய் அறையினுள் நுழைந்தாள் வசிஷ்டா.

அந்த அறையின் நட்ட நடுவே கட்டிலில் போர்வை விரிக்கப்பட்டிருக்க, ஒரு ஓரத்தில் இரும்பு பெட்டி ஒன்று காணப்பட்டது. அந்த பெட்டியின் அருகில் வசிஷ்டா சென்றாள்.

அவள் அந்த துருப்பிடித்த பெட்டியை மெல்ல திறக்க உள்ளே ஒரு நோட்டின் நடுப்புறத்தில் காகிதம் ஒன்று நீட்டிக்கொண்டிருந்தது. அந்த காகிதம் இருந்த பக்கத்திற்கு அவள் கைகள் மெல்ல செல்ல, அதில் “என் அப்பாவிற்கு…” என ஆரம்பித்த அவள் கைப்பட எழுதிய கடிதம் கண்டு மீண்டும் கண்ணீரை பரிசாக தந்தாள்.

அப்படி என்ன தான் அக்கடிதத்தில் எழுதி இருந்தது.

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 12

‘என் அப்பாவிற்கு,

மரியாதைமிக்க வாழ்வை தந்தமைக்கு நன்றி கூறி மகள் எழுதும் அன்பு கடிதமிது.

‘வாழ்ந்தாலும் ஏசும்!

தாழ்ந்தாலும் ஏசும்!

வாழ தெரியாமல் வாழ்ந்தால்

உடம்பெல்லாம் கூசும்…’

இதற்கான அர்த்தத்தை தெரிந்துக்கொள்ள நினைத்த எனக்கு இப்படி ஒரு அனுபவ பாடம் தேவைதானா? அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த என் வாழ்க்கை வலியில் தொடங்கி விவா(க)தத்தில் முடிய, இன்று நான் வழி தவறி எங்கோ நிற்கிறேன்.

காரணம்,

மணம் முடித்து வைக்கிறேன் எனும் பெயரில் எவனோ ஒருவனை வைத்து என்னை கட்டிலில் நீங்கள் கிடத்த, அவனால் போடப்பட்ட மரப்பூசி, என் உடம்பை மறத்து போக செய்து மனதில் தே(தூ)ங்கிய ஆசைகளையும் குழித்தோண்டி புதைத்து கொண்டிருக்கிறது.

என்னை மணக்க போகும் ஒருவன் எங்கே இருக்கிறான்? எவ்வளவு சம்பாதிக்கிறான்? என விசாரித்த நீங்கள், அவன் குணத்தை பற்றி கேட்க மறந்தது ஏனோ?

விளைவு,

வலுக்கட்டாயமாக என் ஆடையை இழுக்கிறான். என் மனம் அனுமதிக்க மறுத்தால் எவனுடன் கனவில் படுத்தாய் என்கிறான். என்னை நிர்வாணப்படுத்தியவன்., இன்று என் கனவையும் கதி கலங்க செய்து கட்டி வைத்து ஆடையவிழ்த்து சித்ரவதை செய்கிறான்.

என் கனவுலகில் நான் ஒரு பிரபல ஓவியராக வலம் வர, அதே சமயத்தில் என்னை தீண்டி என் உணர்வை தூண்டி வேறு பாதையில் அழைத்து செல்ல ஆசைக்கொள்கிறான்.

பிறப்புறுப்பு தான் பெண்ணுக்கு வாழ்க்கை என்றால், பிறவாமல் இருப்பது எவ்வளவ்வோ மேல் என ஒவ்வொருவரின் பார்வையும் பல ஆயிரம் பதில்களை தவறான கோணத்தில் தினந்தினம் தந்து கொண்டிருக்கிறது.

பாலியல் கல்வி அவசியமெனில் அதை கற்றுத்தர ஆண் மகன் எதற்கு?

பருவம் எய்திய பெண்ணை ஸ்பரிசித்து செல்லும் மாதவிடாய் கூட, மாதத்தில் 3 நாட்கள் இரத்த கண்ணீர் வடித்து மீதமுள்ள நாட்களை வாழ வழி விடுகிறது. ஆனால், எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? மணம் என்ற பெயரில் மாதம் முழுவதும் மாதவிடாய் வலியை தினந்தினம் அனுபவிக்கிறேன்.

என் வாழ்க்கை இன்று வெற்று மேனியுடன் நிற்கும் பெண் மேல் வைக்கப்படும் பல கைகளை போல் ஆகிவிட்டது.

அந்த பல கைகளுக்கு சொந்தக்காரன் நீங்கள் பார்த்துவைத்த ஒரு ஆண் மகன் தான் என்பதை அனுதினமும் மறவாதீர்.’

என அவள் அன்று எழுதிய வார்த்தையை படித்துக்கொண்டிருக்க அப்போது அவள் இருந்த அறையின் கதவுகள் திறக்கப்பட்டது.

வசிஷ்டா மெல்ல பார்க்க, வெளியில் நிதுன் நின்றான்.

அவளுக்கோ அதிர்ச்சி அலைகள் சத்தமின்றி மனதை உலுக்க,

(அன்று நடந்த சம்பவம், இப்போது வசிஷ்டாவின் மனக்கண்கள் வழியாக)

அவள் ஆடையற்ற மேனியை இரசித்தவன் கண்கள் மெல்ல அவள் மூச்சு காற்றை கடன் வாங்கி சுகமான உணர்வை மனதில் பெற, அவள் கைகளில் இருந்த காகிதத்தை மெல்ல மறைத்தாள்.

நிதுன் அனல் கக்கும் பார்வையை அவள் மேல் வீச, “அவ்வளவு தான்… உன் நடிப்பு இன்றோடு முடிந்துவிட்டது…” என்பது போல் இருந்தது அந்த பார்வை.

அவன் தன் சட்டை பையிலிருந்து ஒரு போட்டோவை தூக்கி அவள் முகத்தில் எறிய, கசக்கப்பட்ட அந்த போட்டோவில் இருந்த நபரின் முகம் முதலில் வசிஷ்டாவுக்கு தெரியவில்லை. ஆனால், அந்த கசக்கப்பட்ட போட்டோவிலிருந்த ஆணின் வாய் லேசாக வாதம் வந்து இழுத்தது போலிருக்க, வசிஷ்டா கீழே குனிந்து அந்த போட்டோவை நன்றாக கவனித்து பார்த்து அகன்ற கண்களால் அந்த புகைப்படத்திற்கு பதிலளிக்க நிதுன் பார்வையும் வசிஷ்டாவின் கண்களை கண்டவாறு இருந்தது.

ஆம்,

அந்த போட்டோவில் இருந்தது வேறு யாருமல்ல…

அவன் பெயர் வினையன். வசிஷ்டாவின் கல்லூரியில் தான் அவனும் படித்தான். அவன் ஒரு மன நோயாளி. ஆனால், படிப்பு என வந்துவிட்டால் அவனை போல் ஒரு தெளிவான பார்வையை யாராலும் புத்தகத்தின் மேல் வீச இயலாது.

அன்று ஒரு  நாள்,

அதாவது வசிஷ்டாவின் கல்லூரியின் முதல் நாள்…

அவள் ஆடை வழியாக ஒரு ஆண்  மகன் பார்வை தவறான கோணத்தில் சென்ற அந்த நாள்…

வசிஷ்டாவை வெட்கம் பிடுங்கி தின்றதால் வகுப்பை விட்டு அவள் வெளியில் செல்ல, அப்போது தான் வினையன் அவளை நோக்கி விகாரமான பார்வையுடன் வேகமாக ஓடி வந்தான்.

அவன் அவ்வாறு ஓடி வர, வசிஷ்டாவுக்கோ ஒன்றுமே புரியவில்லை. காரணம், வினையன் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட மாணவன் என்பதால் தான்.

அவன் ஓடிவந்து வசிஷ்டாவின் மேல் விழ, அவளுக்கோ கண பொழுதில் இதயமே நின்று போனதை போல் உணர்ந்தாள்.

ஆம்,

தெரியாத ஒருவன் திடீரென ஒரு பெண் மேல் மோதினால் யாருக்கு தான் வெறுப்பு வராது.

“ஹேய்! என்னடா பண்ணுற?” என அவள் பதட்டத்துடன் கேட்க, வினையன் கைகள் வசிஷ்டாவின் பின்முதுகின் மேல் பகுதியை நோக்கி அங்கும் இங்கும் அலைபாய்ந்துக்கொண்டிருந்தது.

அவள் பயமானது பல மடங்கு அதிகமானது.

காரணம்,

வகுப்பறையில் தவறான பார்வையை ஒருவன் வீசியதால் தான் அவள் இப்போது விடுதி நோக்கி புறப்பட்டாள். ஆனால், இப்போது இன்னொருவன் என்ன செய்கிறான் என அவள் யோசிப்பதற்குள் ஒட்டு மொத்த கூட்டமும் அங்கே கூட, அனைவரின் பார்வையும் வசிஷ்டாவையும், வினையனையும் வெறிக்க பார்த்தபடி இருந்தது.

என்ன செய்வதென புரியாது நின்ற வசிஷ்டா, வினையனை விலக்கி கன்னத்தில் பளார் என ஒரு அறை விட, சற்று நகர்ந்து நின்ற அவன் பயத்துடன் வசிஷ்டாவை நோக்கினான். அவள் அறைந்ததும் அவ்விடத்தில் ஓர் நிசப்தமானது நிலவ, அவளை தவறாக வகுப்பறையில் பார்த்த ஒருவனும் அவள் அறைந்ததை கண்டு கன்னத்தில் கையை வைத்தான்.

ஆம்,

வினையனுக்கு விட்ட அறை, அவனுக்கே (தவறாக பார்த்த ஒருவன்) கொடுத்தது போல் இருந்தது.

அப்போது,

வினையன் கைகள் மெல்ல பேண்ட் பாக்கெட்டை நோக்கி செல்ல, அவன் ஒரு கைக்குட்டையை எடுத்து வசிஷ்டாவிடம் நீட்டினான்.

அவள் ஆடை கிழிந்திருப்பதை கண்டு பரிதாபத்துடனே வினையன் நடந்துக்கொண்டான் என்பதை அதன்பிறகே வசிஷ்டா உணர்ந்தாள்.

அவள் நெஞ்சம் குற்ற உணர்ச்சியுடன் குறுகுறுத்து போனது.

தெளிவான மனநிலை கொண்ட ஒருவன் தன்னிடம் தவறான பார்வை வீசியதால் வினையனையும் அவ்வாறு நினைத்துவிட்டதை எண்ணி வேதனையுடன் வசிஷ்டா விடுதியை நோக்கி புறப்பட்டாள்.

அப்போது,

வசிஷ்டா சுய நினைவுக்கு வர காரணமாய் அமைந்தது அவள் கைப்பேசி.

அதனால்,

அவள் அழைப்பை ஏற்று, “என்ன?” என கேட்க, எதிர்முனையில் ஒரு பெண் குரல்.

“அம்மா! சீக்கிரம் நீங்க வாங்கம்மா!

உங்க பையன் வினையனுக்கு பிட்ஸ் வந்துட்டு!

உடனே நீங்க கிளம்பி ஹாஸ்ப்பிட்டல் வாங்க..”

என சொல்ல, பதறிய வசிஷ்டா தன் மகனை தேடி மருத்துவமனைக்கு ஓடினாள்.

அங்கே அவனுக்கு அளித்த சிகிச்சையை வெளியிலிருந்து பார்த்த அவள், வேதனையுடன் அவன் அருகில் செல்ல, வசிஷ்டாவின் கண்களில் நீர் வெள்ளம் கரைப்புரண்டோடியது.

அவள் கண்களில் இருந்து வந்த நீரை கண்ட அவள் மகன் வினையன், தன் கால்ச்சட்டை பையிலிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்து தன் தாய் வசிஷ்டாவிடம் நீட்டினான்.

அந்த சம்பவம் அவளை சற்று பின்னோக்கி அழைத்து செல்ல தன் மகன் கண்கள் முலமாக அவளுடைய முன்னால் அன்பன் கல்லூரியில் படித்த வினையனை அவள் கண்டாள்.

ஆம்,

வினையன் என்றால் அவ்வளவு பிரியம் வசிஷ்டாவிற்கு. அதுவும் கல்லூரியில் அவனை அத்துணை பேர் மத்தியில் தவறுதலாக நினைத்து கை நீட்டி அடித்த அன்று இரவு அவள் தூங்கவேயில்லை.

அவளிடம் யாரும் காட்டாத பாசத்தை அன்று அவன் கைக்குட்டையில் மடித்து கல்லூரியில் தந்திட, அதுவே அவர்கள் நட்புக்கொள்ள காரணமாக அமைந்தது.

முதல் அன்பை என்றுமே மறக்க முடியாது. அப்படி இருக்க வினையன் பெயரை மனதில் பச்சைக்குத்த மறந்த அவள், மாறாக தன் மகனுக்கும் அதே பெயரை வைத்து நினைவுகளை தன் மனதில் சுமந்து அழகு பார்க்க தொடங்கினாள்.

விதியின் போக்கு வினையனை மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனாக உருமாற்ற, நிதுன் சந்தேகம் பல மடங்கு அதிகமாகி அவள் வாழ்வில் விபச்சாரி எனும் ஒளியேற்றி இருளை சுமந்த வாழ்வை வசிஷ்டாவுக்கு தந்தது.

இன்று வரை இறுகிய உடலுடன் இரவில் வாழ, உருகிய மனதுடன் தன் மகன் வினையனுக்காகவும் அவள் வாழ்வை கழித்து வருகிறாள் வசிஷ்டா.

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 13

நிதுன் மிருக குணம் கொஞ்சம் கொஞ்சமாக வசிஷ்டாவை கொன்று கொண்டிருந்தது. அவள் அந்த வீட்டில் நிதுனால் சிறைப்பிடிக்கப்பட்டு இறகுகள் வெட்டப்பட்ட பறவை போல் அனுதினமும் துடித்து வாழ்ந்து வந்தாள்.

அவள் சிரித்தாலும் தவறு தான் என்றவன், சந்தேகத்துடன் வசிஷ்டாவின் சிரிப்புக்கு யார் காரணம் என்பதை அவள் இதழ் வழியாக புகுந்து உடலை உரசி உணர்ச்சியால் மட்டுமே வாழ அனுமதியும் தந்திருந்தான்.

இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தபோதும் இரவு மட்டுமே வாழ்க்கை என்பது போல் பகலில் ஒளிப்படர விடாமல் பார்த்துக்கொண்டான் அவன்.

அன்று ஒரு நாள் காலை,

கட்டிலை விட்டு எழுந்து செல்ல நினைத்தவளை நிதுன் தடுக்க மெல்ல முறைத்தாள். இருப்பினும், இது தான் அவள் வாழ்க்கை என முடிவு செய்யப்பட்டதன் விளைவால் அமைதியாக இருக்க. நிதுன் ஒரு டைரியை அன்பளிப்பாக வழங்கினான்.

வசிஷ்டாவுக்கோ ஒன்றுமே புரியவில்லை. அவன் முகத்தில் மெல்லியதாக ஒரு புன்னகை வேறு காணப்பட்டது. அவளும் மெல்ல சிரிக்க முயல, “ஹேய்! வெய்ட் வெய்ட்…” என்றவன், “உன் சிரிப்பை எல்லாம் எங்கிட்ட காட்டி மயக்க பார்க்காத…” என்றான் மூஞ்சில் அடித்தாற்போல்.

வசிஷ்டாவுக்கு வந்த சிரிப்பை எப்படி அடக்குவது என்றே தெரியவில்லை. ஒருவேளை சிரித்தால் யாருக்கெல்லாம் முந்தானை விரித்ததனால் இப்போது சிரிக்கிறாய் என அவன் கேட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லையே.

அதனால் வேறு வழியின்றி பொய்யாக அழ தொடங்க, கண்ணீரோ எப்போது பெருக்கெடுத்து சேலையோடு சேர்த்து அவள் மார்பை நனைப்பேன் என்பது போல் கண்களின் ஓரத்தில் தேங்கி நின்றுக்கொண்டிருந்தது.

“உன் காலேஜ் லைப்ல என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியனும். அதுக்கு தான் இந்த டைரி. ஹேய்! வினையன நீ லவ் பண்ணியா! பைத்தியக்காரன் கூட ரொமான்ஸ் எப்படி இருந்துச்சுன்னு எனக்கு சொல்லேன். கேட்க ரொம்ப ஆசையா இருக்கு. இங்க தொட்டானா? அங்க தொட்டானா?” என அவன் வசிஷ்டாவின் மார்பு பகுதியில் கைகளை வைக்க முயல, அவன் அவளை தொடுவதற்கு முன்பே தன்னை அனுபவிக்க காத்துக்கொண்டிருந்த கண்ணீருக்கு கட்டளையிட்டாள். அதனால் கண நேரத்தில் மார்பை நனைத்து முந்திக்கொண்டு வழிந்தது அவள் கண்ணீரது.

அவள் அழுவதை ரசித்துக்கொண்டிருந்த அவன், “ஹேய்! ஒன்னும் அவசரமில்ல. இந்த டைரிய பொறுமையா பில் பண்ணு. உன்னோட பாஸ்ட நான் தெரிஞ்சுக்கனும். அவ்வளவு தான்…ஹும்…?” என அவள் முகத்தை பார்க்க எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

அவள் அருகில் மெல்ல வந்து பின் முதுகுப்பகுதியை தடவி, “ஹேய் வசி! என்மேல என்ன கோபமா. நான் ஒன்னும் அவ்வளவு மோசமானவன் கிடையாது. உன்ன பொண்ணு பார்க்க வந்தப்போ இத எல்லாம் எங்கிட்ட நீ சொல்லியிருந்தா இவ்வளவு நான் கவலைப்பட்டுருக்க மாட்டேன்… நடந்தது நடந்ததாவே இருக்கட்டும். நாம ரெண்டு பேரும் இனிமேல் லைஃப்ல ரொம்ப ஹேப்பியா இருக்கனும். ஓகே! நான் வெளில போறேன். இந்த டைரிய நீ பொறுமையா எழுது…” என இதழோடு இதழ் வைத்து சிரித்துக்கொண்டே சென்றான்.

வசிஷ்டாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்களை கட்டி நிர்வாணமாக காட்டில் விட்ட ஒரு பெண் மேல் காகிதம் பட்டு கீழே விழுந்தால் எவ்வாறு கூசுமோ அப்படி இருந்தது.

இருப்பினும், இத்தனை நாளாக இப்படி ஒரு கரிசன பேச்சை அவனிடம் காணாத காரணத்தால் வேறு வழியின்றி வெற்று காகிதத்தில் வினையனின் வண்ணத்தை தீட்ட தொடங்கினாள் வசிஷ்டா.

டைரியில் எழுதிய வார்த்தைகள்,

வினையன்,

வசந்தமில்லாத வனமென நினைத்து பலரும் ஒதுங்கி சென்ற போதும் ஒற்றை அறையில் என் மனதில் பூத்தவன்.

நான் அவனை பலர் மத்தியில் அறைந்தபோது அவன் கொடுத்த கைக்குட்டையில் பயத்துடன் படிந்த வியர்வையை வேதனையுடன் பார்த்தேன். காரணம், அது அவன் கண்களில் வழிந்த கண்ணீராக ஏனோ எனக்குள் தோன்றியது.

அன்று இரவு நான் தூங்கவில்லை.

வானத்தின் நிலா என் அழகை ரசித்தபோதும் நான் ஏனோ அதை கண்டும் காணாதது போல் இருந்தேன். எப்போது மீண்டும் அவனை பார்ப்பேன் என அன்று இரவு முழுவதும் ஏங்கி தான் தவித்தேன்.

இறுதியில் ஏக்கத்தில் சொக்கி நின்று தூக்கத்தை என் உடலுக்கு பரிசாய் தந்தேன். ஆனால் மனதுக்கு அல்ல.

மறுநாள் காலை,

அவனை கல்லூரி வளாகம் முழுவதும் தேடியும் என்னால் காண இயலவில்லை. ‘என்ன ஆகிற்று அவனுக்கு? நான் நேற்று நடந்துக்கொண்ட விதத்தால் இன்று வராமல் சென்று விட்டானோ…’ என எனக்குள்ளே கேள்விகளை எழுப்பிக்கொண்டு நான் நிற்க, அப்போது தூரத்திலிருந்து நான் நின்ற திசையை நோக்கி அந்த அழகிய பெயரை யாரோ ஒருவர் உச்சரித்தபடி ஓடி வந்தனர். அந்த குரல் அனுப்பப்பட்ட திசை நோக்கி நான் பார்த்தேன்.

ஆம்,

வினையன் என ஒரு குரல் வர., குரல் வந்த திசை நோக்கி நான் திரும்பி பார்த்தேன்.

வினையன்,

ஒரு சுவர் ஓரத்தில் முகத்தை புதைத்துக்கொண்டு என்னை நோக்கி பார்த்தவாறு பயத்துடன் நின்றான்.

இவ்வளவு நேரம் என் கண்களில் கண்ட சுறுசுறுப்பு குறைந்து போக அதற்கு ஓய்வளித்த நான், அவன் கண்களை பார்த்தவாறு என் பார்வையை நிறுத்தினேன்.

வினையனின் நண்பன் அவனிடம் ஏதோ கூறி தோள்களில் கையை போட்டுக்கொண்டு என்னை நோக்கி வர, என் கால்களும் எரிபொருள் அற்ற ஏவுகணையாய் செயலிழந்து நின்றது.

அவன் என்னை பார்த்தவாறே பயத்துடன் வர, நான் அவன் முகம் பார்க்க அறுகதையற்ற ஒருவளாய் மெல்ல ஜாடை பார்வை மட்டுமே அவ்வப்போது வீசினேன்.

என்னால் அவ்விடத்தை விட்டு நகரவும் முடியவில்லை.

கால்களுக்கும் வெட்கம் உண்டு என்பதை வினையனை பார்த்து செயலிழந்த என் உணர்வுகள் மூலம் நான் நன்றாகவே தெரிந்துக்கொண்டேன்.

அன்று மதியம்,

கல்லூரியில் எங்களுக்கு வழங்கப்பட்ட உணவை உண்டு கை கழுவும் வேளையில் யாரோ என் மூச்சு காற்றை சுவாசித்துக்கொண்டு அருகில் நிற்பது போல் எனக்குள் தோன்றியது.

நான் மெல்ல திரும்பி பார்க்க, அது வினையன் தான். என் முகத்தை பார்க்க பயந்துக்கொண்டு என் அருகில் அவன் நின்றுக்கொண்டிருந்தான்.

அவனை அவ்வப்போது மெல்ல திரும்பி பார்த்து என் கைகளை நான் கழுவிக்கொண்டிருக்க, என் கைகளில் இருந்து வழிந்து ஊற்றிய நீர் வாயில் வரவும் முயல்கிறதோ என நினைத்த என் மனம், கைக்குட்டையால் என் இதழை துடைக்கவும் துடித்தது.

இதுவரை யாரிடமும் இவ்வளவு அன்பை வெளிப்படுத்த நான் முயலவில்லை. ஒரு ஆண் மகன் மீது அதீத அன்பு முதன்முதலில் பிறக்குமென்றால் அது அப்பெண்ணுடைய தந்தையிடமாக தான் இருக்க வேண்டும்.

ஏனோ தெரியவில்லை வினையனை கண்ட நான் அவனை என் வாழ்வின் மொத்த உருவமாக பார்த்தேன்.

நேற்று நிலை மறந்து நான் தவிக்க, நிர்வாணமாக நடப்பது போன்ற உணர்வை சூழ்நிலை எனக்கு தர., கைக்குட்டை கொடுத்த கண நேரத்தில் நான் பாராத என் தந்தையை அவன் உருவத்தில் நான் கண்டேன்.

இரவில் தூக்கமின்றி தவித்த வேளையில் நாளை என் உலகம் அவனாக இருந்திடக்கூடுமோ எனும் ஏக்கமதனில் என் வருங்கால வாழ்க்கையாக நான் அவனை பார்த்தேன்.

இப்போது கூட என்னை கண்டவுடன் பயத்துடன் கூனி குறுகி அருகில்  நிற்க, அவன் இதழ்களிலிருந்து வழியும் உணவை பார்க்கும் போது இதுவரை நான் பெற்றிடாத என் பிள்ளையை போல அவனை நான் காண்கிறேன்.

இது தவறா!

எனக்கு தெரியவில்லை…’ என அவள் எழுதிக்கொண்டிருக்க, அப்போது திடீரென யாரோ அந்த டைரியை வெடுக்கென பிடுங்க, வசிஷ்டா சற்று பயத்துடன் பின் வாங்கினாள்.

அது நிதுன் தான்.

வசிஷ்டா ஏதும் பேசாமல் அமைதியாய் நிற்க, அவள் எழுதிய வரிகளை படித்த அவன் கண்கள் ஒரு வித வெறுப்புடன் இருந்தது.

“முன்னால் காதலன பத்தி எழுத இவ்வளவு ஆர்வமா உனக்கு. என்ன வரிகள்! உனக்குள்ள இவ்வளவு திறமை இருக்கா?” என அவள் அருகில் வர, வசிஷ்டாவுக்கு இவன் என்ன செய்கிறான் என்பதை புரிந்துக்கொள்ளவே சற்று நேரம் தேவைப்பட்டது.

நிதுன் தொடர்ந்தான்.

“ஹேய்! அன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் கைக்கழுவும் போது அவன் உன் கைய பிடிச்சிட்டான்ல. உடனே நீக்கூட வெட்கத்துல நெளிஞ்சியே…” என கேட்க, வசிஷ்டாவுக்கு தூக்கி வாரி போட்டது.

நிதுனோ வில்லத்தனமாக வாய்விட்டு சிரிக்க, அவன் கண்களில் ஆத்திரம் ஆனந்த தாண்டவமாட தடுமாறி போனாள் வசிஷ்டா.

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 14

நிதுன் சொல்வது ஒருவிதத்தில் உண்மை தான்.

ஆம்,

வசிஷ்டாவின் கைகளை வினையன் அன்று திடீரென பற்றினான். ஆனால், அது எப்படி நிதுனுக்கு தெரியும் என அவள் குழப்பத்துடன் இருக்க, நிதுன் சிரித்துக்கொண்டே அவள் அருகில் வந்தான்.

“நீ எழுதப்போற ஒவ்வொரு சம்பவமும் எனக்கு நல்லாவே தெரியும். எதாச்சும் நடக்காத சம்பவத்த எழுதி நல்ல பேரு வாங்கனும்னு நினைச்ச நான் மனுசனாவே இருக்க மாட்டேன்…” என அவன் சொல்ல, வசிஷ்டா அவன் கண்களை வேகமாக அன்னாந்து பார்த்தாள்.

அதுவோ, ‘நீ எப்போது மனிதனாக என்னிடம் நடந்து கொண்டாய்…’ என்பது போல் இருந்தது.

நிதுன் சென்றுவிட,அன்று நடந்த சம்பவத்தை வசிஷ்டா மீண்டும் நினைக்க தொடங்கினாள்.

‘அவன் கைக்கழுவும் இடத்தில் என்னையே பார்த்துக்கொண்டிருக்க பக்கத்தில் நின்றவன் திடீரென காணாமல் போனான். வினையன் எங்கே சென்றான் என யோசித்துவிட்டு மெல்ல நான் திரும்ப என் முன்புறம் முகத்தின் அருகாமையில் அவன் நிற்க, அதனை சற்றும் எதிர்பாராத நான் சாய்ந்து குழாயின் புறம் விழ என் தலையை தாக்க தயாராக காத்துக்கொண்டிருந்தது அதன் கூர்முனையது.

என்ன நினைத்தானோ வினையன்., சட்டென என் கைகளை இறுக்கி பிடித்து என்னை காப்பாற்ற மயிரிழையில் நான் அவன் மனதில் உயிர்வாழ தொடங்கினேன்.

எல்லோரும் எங்களையே பார்க்க, ஒரு சிலர் வாயில் கையை வைத்துக்கொண்டு சிரிக்கவும் செய்தனர்.

மெண்டல் மனதில் மங்கையவள் என்பது போல் அவர்களுடைய சிரிப்பு இருக்க, நான் வழுக்கி கீழே விழவில்லை என்றாலும்,  அவன் இதயத்தில் சறுக்கி அன்பில் விழுந்தேன்.

காதல் வந்தால் கிறுக்குத்தனமாக எதையும் செய்ய தோன்றுமாம்.

ஆனால், அவன் கிறுக்குனத்தனத்தை ரசித்த நான் கிறங்கி அவன் கனவு மடியில் தலை சாய்ந்து நான் காணாத என் தந்தையின் சாயலையும் அவனிடம் கண்டேன்.

எங்கள் கல்லூரியின் பின்புறம் தான் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி. அதன் அருகாமையிலேயே அழகான ஒரு மைதானமும் அமைந்திருக்க, அங்கே கிரிக்கெட் போட்டிகளும் அடிக்கடி நடக்கும்.

கிரிக்கெட் மட்டையை தூக்கிக்கொண்டு நாலாப்புறமும் பந்துகளை சீனியர்கள் சிதறடிக்க ஒவ்வொரு அடியின் பின்னாலும் பலவித கனவு கன்னிகள் இருந்தனர். ஆம், அவர்களை ஈர்க்கவே இத்தகைய அக்கப்போரு. அதற்கு ஏனடா என்னை பலி ஆடாய் மாற்றுகிறீர் என பந்துகள் பல ஏங்க, பலியானது பந்துகள் மட்டுமல்ல.

வினையனும் தான்…

அவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் என்பதால் பந்துகளை பொறுக்கி போட அவனை பயன்படுத்த அதனை நான் மிகவும் வேதனையுடன் பார்த்தேன்.

“ஹேய்! அங்கப்பாருடி உன் ஆளு சிக்ஸர் அடிக்கிறான்…” என அவரவர் அங்கே கிரிக்கெட்டை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த பெண்களை வெட்க துளியில் மூழ்க செய்ய, என்னை மட்டும் அவமான அலையில் தள்ளி வேடிக்கை பார்க்க ஆசைப்பட்டனர்.

ஆம்,

“ஹேய்! நாம எப்போயாச்சும் தான் நம்ம ஆளு சிக்ஸர் அடிக்கிறத பார்க்கலாம். ஆனால் இவ கொடுத்து வச்சவடி. யாரு சிக்ஸர் அடிச்சாலும் இவளொட ஆளு பந்து பொறுக்குறத பார்த்துட்டே இருக்கலாம்…” என சொல்லி சிரிக்க, என் கண்களிலிருந்து வழிந்த நீர் எல்லைக்கோட்டில் சிதறியது.

அப்போது திடீரென என் கால்களை நோக்கி பந்து வந்து விழ, வினையன் அதனை எடுக்கும் முன்பே நான் தூக்கி வீசி அவனுக்கு உதவி செய்தேன்.

இதேபோல் வினையன் பந்தை எடுக்கும் முன்பே நான் விழுந்தடித்து ஓடி சென்று பந்தை எடுத்து அவர்களிடம் வீசிட ஒருக்கட்டத்தில் வெறுப்படைந்த அவர்கள் என்னை தடுத்து நிறுத்தினார்கள்.

“ஹேய்! மேட்ச் பார்க்க வந்தா மேட்ச மட்டும் பார்க்கனும். அத அவன் செய்வான். நீ ஓரமா நின்னு கைத்தட்டிட்டு சைட் அடிச்சிட்டு போயிட்டே இருக்கனும்…” என சொல்ல, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

நான் அமைதியாக… வினையன் அங்கும் இங்கும் ஓடி சென்று பந்தை பொறுக்கி போட்டபடி நிற்க, எனக்கு அழுகையும் ஆத்திரமுமாய் வந்தது. அதனால் விடுதி நோக்கி வேகமாக புறப்பட்டேன்.

அப்போது திடீரென பந்து என் கால்களின் முன்னே வந்து விழுந்தது.

அதை எடுக்கலாமா? வேண்டாமா? என நான் யோசிக்க., அடித்தவன் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம். ஒரு திமிரான பார்வையை என் கருவிழிகளில் பதிய செய்ய, வேண்டுமென்றே என்னை நோக்கி அவன் அடித்தது போல் அது இருந்தது.

வினையன் வேகமாக ஓடிவந்தான்.

அவன் ஓடிவந்து என் கால்களை தீண்டி பந்தை எடுக்க., மெல்ல குனிந்த என் கண்களிலிருந்து வடிந்த நீர் அவன் கைகளில் சிதறி தெறித்து வழிந்தது.

அதனை கண்ட அவன் மெல்ல நிமிர்ந்து பார்க்க என் பார்வையோ மைதானம் நோக்கி பாய்ந்தது. என் கண்களில் தெரிந்த ஏக்கம் வன்மமாக மாறுவதை பார்த்த வினையன், என்ன நினைத்தானோ! இல்லை, என்னை தான் நினைத்தானோ! திடீரென பந்தை தூக்கி வேகமாக திசை தெரியாது எறிந்தான்.

ஆம்,

மைதானத்தில் நின்றவர்கள் எல்லாம் பந்தை பார்த்தபடி நிற்க அவர்களை எல்லாம் கடந்து மதில்சுவரை தாண்டி சென்று விழுந்தது.

வினையன் கைத்தட்டி சிரிக்க தொடங்கினான்.

மைதானத்தில் இருந்தவர்கள் எல்லாம் முறைத்துக்கொண்டே கையில் மட்டையுடன் அவனை நோக்கி வர, எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ‘என் வினையன் செய்த செயலுக்கு இவர்கள் என்ன செய்ய போகிறார்களோ?’ என தெரியாமல் குழம்பி தவிக்க, கூட்டமாக என்னையும் அவனையும் சூழ்ந்தது இருள்.

ஆனால் வினையன் சிரிப்பதை நிறுத்தவே இல்லை.

அப்போது ஒருவன்.,

திடீரென கைகளை ஓங்கி பளார் என ஒரு அறைவிட குறுக்கே புகுந்த என் கன்னத்தை அவன் கைகள் பழுக்க செய்தது. வினையன் சிரிப்பை மறந்து அமைதியாக, நான் செய்த செயல் அவர்களை மேலும் எரிச்சலடைய செய்தது.

இப்போது தெரிந்தே அவர்கள் என் கன்னத்தில் கையை வைக்க, நான் சுருண்டு கீழே விழுந்தேன். என் கண்கள் மெல்ல மூட முயன்ற போதும் வலுக்கட்டாயமாக திறந்தபடி இருக்க நானோ நிலைத்தடுமாறி கீழே கிடந்தேன்.

அவர்கள் மெல்ல வினையனை நெருங்க, அவன் பார்வையோ என்னை பார்த்தவாறே இருந்தது.

“இப்ப அவனை அடிடா! எப்படி அவ காப்பாத்துறானு பார்க்கலாம்…” என ஒருவன் சொல்ல இன்னொருவன் வினையனை நோக்கி வேகமாக கைகளை ஓங்க, பளார் என சத்தம் மட்டுமே கேட்டது.

உணர்வு என்பது சுத்தமாக அவனிடம் காணப்படவே இல்லை.

ஆனால், ஒரு அடி பின் வாங்கி நின்றிருந்தான் வினையன். அவன் கண்களில் இருந்து நீர் வழிந்தபோதும், அது எந்தன் பெயரை மட்டுமே உரக்க உரைத்துக்கொண்டிருந்தது.

இறுதியில் என் கண்கள் மெல்ல மூட திறந்து பார்த்தபோது நான் விடுதியில் இருந்தேன்.

என்னை சுற்றி நலம் விசாரிக்க வந்தது போல் பலரும் சூழ்ந்திருக்க, எல்லோருடைய முகத்திலும் ஒருவித பயம் தெரிந்தது.

காரணம்,

நான் மயங்கிய பின்னர்…

வினையன் தனை மறந்து பித்துப்பிடித்த ஒருவனாய் அங்கும் இங்கும் அலைந்தான்.

அப்போது,

அவன் கையில் கிரிக்கெட் மட்டையை எடுத்து என்னை அறைந்தவனை நொடிப்பொழுதில் அடிக்க அவன் சுருண்டு விழுந்தான்.

இதனை சற்றும் எதிர்ப்பாராத அவன் நண்பர்கள் வினையனை நோக்கி ஆத்திரமாக பார்க்க, பார்வை அவன் கண்களில் பதியும்முன்னே நின்ற பத்து பேரை பந்தாட தொடங்க, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பக்கம் சிதறி அடித்து ஓடினான்.

இதுவரை அவனை மனநலம் பாதிக்கப்பட்டவனாக பார்த்தவரெல்லாம் பரிதாபத்துடன் பார்த்தனர்.

வினையனை அல்ல…

அவனிடம் அடி வாங்கியவர்களையும், அவர்களால் பாதிக்கப்பட்ட என்னையும் (வசிஷ்டா) தான் அனைவரும் பார்த்தனர்.

அவர்களை அடித்து கீழே தள்ளிவிட்டு என்னிடம் வந்தவன் அழுதுக்கொண்டே அங்கிருந்தவர்களை வேகமாக திரும்பி பார்த்து முறைக்க, “சீக்கிரம் தூக்குடி!” என அங்கிருந்த பெண்கள் வினையன் மீதிருந்த பயத்தால் என்னை விடுதிக்கு அழைத்து சென்று முதலுதவியை வழங்கினர்.

இங்கே., வினையன் கையிலிருந்த கிரிக்கெட் மட்டையை பின்னிருந்து ஒருவன் பிடுங்க, அவன் கைகள் இருபுறமும் சிறைப்பிடிக்கப்பட்டு போனது. அதனால் அவனால் பாதிக்கப்பட்ட பத்து பேரும் அவனை சூழ்ந்து மீண்டும் நின்றுக்கொள்ள, வினையனை ஒருவன் கிரிக்கெட் மட்டையால் அடிக்க வேகமாக ஓங்கினான்.

அப்போது,

வினையன், வலதுப்புறம் நின்றவனின் இரு கால்களுக்கு நடுவில் ஓங்கி ஒரு உதைவிட அவன் சுருண்டு விழுந்தான்.

ஆனாலும் ஓங்கிய மட்டை என்னவன் மண்டையில் வேகமாக பட, சுருண்டு விழுந்த ஒருவன் ஏற்கனவே ஏற்படுத்தி தந்த பாதை இடைவெளி வழியாக அங்கிருந்த மெஸ்ஸுக்குள் (Mess) நுழைந்தான் என்னவன்.

“ஹேய்! இன்னைக்கு அந்த மெண்டல் பயலுக்கு சமாதி கட்டிடனும்…” என நினைத்து ஆக்ரோஷமாக அனைவரும் உள்ளே நுழைய, அதில் முதலில் நுழைந்தவனுக்கு சுட சுட சாம்பார் அபிஷேகம் செய்தான் வினையன்.

அவன் மேல் பட்டவுடன் துடித்து கீழே விழ, வினையனை அனைவரும் காளனின் மறு உருவமாக பார்த்து பயந்து போய் நிற்க, சமையல் செய்பவர்களால் இப்போது வினையன் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருப்பதையும் நான் என்னுடைய சக தோழிகளின் மூலம் தெரிந்துக்கொண்டு வேகமாக புறப்பட்டேன்.

கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கிரிக்கெட் வீரர்களும் வினையனும் இருக்க, மற்றவர்கள் எல்லாம் சிரித்து பேசிக்கொண்டு ஜாலியாக நின்றனர்.

வினையன் மட்டும் வேதனை என்பது கூட என்னவென தெரியாத நிலையில் பைத்தியக்காரனுக்கு தரப்படும் அனைத்து சலுகைகளுடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான்.

கல்லூரியின் தலைமை அதிகாரி யாரிடமோ போனில் பேசிக்கொண்டே வர, “இன்னைக்கு பத்து பேரு மண்டைய உடைச்சவன், நாளைக்கு க்ளாஸ் நடத்துற ஸ்டாப்ஸக்கூட (Staffs) எதுவும் செய்யமாட்டான்னு என்ன நிச்சயம்…தயவுசெஞ்சு உங்க பையன அழைச்சிட்டு போயிடுங்க…” என சொல்ல, வசிஷ்டா அமைதியாகவே நின்றாள்.

எப்படியும் வினையன் தந்தை இப்போது இங்கே வருவார். அவரிடம் நடந்தவற்றை சொல்லலாம். இப்போது கல்லூரி நிர்வாகத்திடம் இதை கூறினால் அந்த பத்து பேருக்கு தான் ஆதரவு தருவார்கள் என நினைத்த நான் அமைதியாக இருந்தேன்.

அதேபோல் வினையன் தந்தை வர, நடந்தவற்றை அவரிடம் கூறினேன். ஆனாலும் எனக்கு யாரும் ஆதரவாக பேச தயாராக இல்லை. அந்த பத்து பேருக்கே ஆதரவு கிடைத்தது.

எனக்கு பணிவிடைகள் செய்தவர்கள் கூட அந்த பத்து பேருக்கே ஆதரவாக இப்போது பேச, பயத்தாலே எனக்கு முதலுதவி வழங்கிய அவர்கள் முகத்திரை கிழிந்து காற்றில் ஆடியது. அதனால் கீழே அவர்கள் குனிந்துக்கொண்டனர்.

நான் வினையனை போல் தனிமைப்படுத்தப்பட்டேன்.

என் சக தோழிகள் சொன்னதையும் யாரும் கேட்க தயாராகவில்லை.

காரணம்,

நானும் வினையனும் காதலிக்கிறோம். அதனால் தான் அவனை காப்பாற்ற நான் முயல்கிறேன் என பலரும் வினையனின் தந்தையிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் புரளி பேச ஆரம்பித்தனர்.

அப்போது என்னை காப்பாற்றியது வினையன் பந்துகளை பொறுக்கி மைதானத்தில் வீசும் காணொளி பதிவு.

அது மற்றவர்களுக்கு வேண்டுமானால் அருவருப்பாக  தெரியலாம்.

ஆனால்,

என்னவனை ரசிக்க நான் எடுத்த காணொளி. அது எனக்கு நினைவில் வர, அதனை ஆதாரமாக சமர்ப்பித்தேன்.

இதனை சற்றும் எதிர்பாராத எல்லோருடைய முகமும் சுருங்கி போக, வினையன் தந்தையோ வெகுண்டெழுந்து நிர்வாகத்தின் மீது கோபம் கொண்டார்.

“என்ன சார் இது? என் பையன இவங்க எப்படி நடத்தி இருக்காங்க பாருங்க. ஒரு மிருகம் மாதிரி வேல வாங்கியிருக்காங்க. இது சரின்னு இப்போவும் சொல்ல போறீங்களா? இதுக்குமேல என் மகன நான் இங்க படிக்க வைக்க விரும்பல சார்…” என சொல்ல வினையன் தந்தையிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் முதல்வர்.

“ஸாரி சார்! இனிமேல் இந்த மாதிரி தப்பு நடக்காம நான் பார்த்துக்கிறேன்.” என்று வேண்டி விரும்பியவர், வினையனின் கால்களை தொட்டு அந்த கிரிக்கெட் வீரர்களை மன்னிப்பும் கேட்க சொன்னார்.

வினையன் சுய நினைவற்று இருக்க, ஒவ்வொருவராக அவனை கட்டப்பட்ட சங்கிலி அருகில் வந்து அவன் கால்களை தொட்டு மன்னிப்பு கேட்டு சென்றனர்.

அதன்பின்னர் கூட்டம் மெல்ல கலைந்தது.

வினையன் தந்தை ராஜசேகர் மெல்ல என்னிடம் வந்து, “ரொம்ப நன்றிம்மா! நீ இந்நேரம் இந்த வீடியோவ காட்டலைன்னா என் பையன் காதல் அப்டிங்கிற பேர்ல உன்ன ரொம்ப டார்ச்சர் பண்ணுறான்னு சொல்லி காலேஜ் விட்டே துரத்தி இருப்பாங்க. இன்னைக்கு நிறையா காலேஜ் பேரு கேட்டுப்போயிடக்கூடாதுனு இத தான் செய்றாங்க. என் பையன் மனநலம் சரி இல்லாதவன் தான். ஆனால், அன்பா ஒருத்தங்க பேசுனா அவங்களுக்காக எதையும் செய்வான்…” என அவர் சொல்ல, “எனக்கு தெரியும் சார் வினையன பத்தி. இந்த காலேஜ்ல எனக்கு கிடைச்ச நல்ல பிரெண்டும் இவன் தான்…”  என நான் கூறினேன்.

“காபி சாப்பிடலாமா?” என என்னை அழைத்துக்கொண்டு அவர் செல்ல, அவருக்கு முன்பே முந்திக்கொண்டு சங்கிலியில் பிணைக்கப்பட்ட என்னவனை அவிழ்த்து அவனுக்கு விடுதலை தந்தேன்.

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 15

கல்லூரியின் நாட்கள் என்னவன் பார்வையுடன் இனிதே என்னை கடத்தி செல்ல, ஒரு நாள் நாங்கள் எதிர்பாராத ஒரு சம்பவம் எங்கள் வாழ்வையே திசை திருப்பியது.

ஆம்,

அன்று எங்கள் கல்லூரியில் விழா ஒன்று நடத்த ஏற்பாடு செய்ய, அந்த விழா எங்கள் இருவர் வாழ்விலும் ஒளியுடன் சேர்ந்த இருளை ஏற்றியது என கூறலாம்.

நானும், வினையனும் பேசிக்கொண்டதில்லை. மனதில் இருந்த காதலையும் கூற முரண்டுபிடித்து காத்திருந்த வேளையில் அந்த விழாவானது என் காதலை அவனிடம் சொல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.

ஆனாலும், நான் காதலை கூற அவன் அதனை எப்படி எடுத்துக்கொள்வான்? எங்கள் இருவருடைய காதல் பரிமாறலின்போது கல்லூரி அதனை எப்படி பார்க்கும் போன்ற ஏக்கங்கள் என்னை சுற்றி அலைந்துக்கொண்டிருக்க, நானோ அவன் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தேன்.

அப்போது வினையனை கெமிஸ்ட்ரி லேப் உதவியாளர் அழைப்பதாக ஒருவன் கூற, வினையன் அவன் சொல்லை கண்டுக்கொள்ளாத ஒருவனாய் காதில் போட்டுக்கொண்டு மெல்ல அவனுடன் சேர்ந்து நடந்தான்.

இது தான் வினையனை நான் தனியாக சந்திக்க சரியான நேரமென  எதிர்பார்த்திருந்த ஒரு தருணம் போல் என் பாதங்கள் அவன் சென்ற பாதையை பின்தொடர, அவனை அழைத்துக்கொண்டு சென்றவன் வினையனை கெமிஸ்ட்ரி லேப்பில் விட்டு சட்டென கிளம்பினான்.

கெமிஸ்ட்ரி லேப் உள்ளே…

வினையன் அங்கு அடிக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஜாடிகள் வழியாக பார்த்த வண்ணமிருக்க, அதன் இன்னொரு புறம் நின்ற என் பார்வை அந்த பாதரச குவளையை துளைத்துக்கொண்டு என்னவனுக்கு தூது அனுப்பியது.

விளைவு,

அவன் வாழ்ந்த உலகம்விட்டு மெல்ல சுயநினைவுக்கு திரும்பியவன் என் கண்களை பார்த்தவுடன் அருகிலிருந்த கண்ணாடி குவளையை தள்ள, அது விழுந்து நொறுங்கி சுக்குநூறாக தெறித்தது.

அதனால், தெரிந்தோ தெரியாமலோ அவன் கைகளை நான் இறுகப்பற்றிக்கொள்ள, எனக்குள்ளே ஏதேதோ வேதியியல் மாற்றம் நிகழ்ந்த போதும், அதில் சிறிதும் தவறான எண்ணமது எங்கள் இருவருக்குள்ளும் தோன்றவில்லை.

அப்போது,

யாரோ ஒருவர் நாங்கள் உள்ளிருப்பது தெரியாமல் கதவை பூட்டி விடைப்பெற்று செல்ல, விழித்துக்கொண்ட நான் கதவை நோக்கி கத்திக்கொண்டு ஓடினேன். ஆனாலும், அந்த நிழல் மட்டுமே என் அறைக்கூவலை காண பூட்டியவன் புதிர் போட்டு மறைந்தான்.

இப்போது அந்த கெமிஸ்ட்ரி லேப்புக்குள் இருப்பது நானும் வினையனும் தான்.

என் போனை பார்க்க மணியோ இரவு 8 ஆனது…

யாரை நான் உதவிக்கு அழைத்து வெளியில் செல்வேன். என்னுடன் வினையன் இருப்பது தெரிந்தாலே நாலு பேர் நாலு விதமாக பேச தொடங்கிவிடுவார்கள். என் தோழிகளிடம் கூட உதவி கேட்க யோசித்த என் மனம், அங்கேயே அடைப்பட்டு போக, அவனும் நானும் மட்டுமே இருளில் ஏற்றப்பட்ட விளக்குபோல் பிரகாசமாக தெரிந்தோம்.

காதலை சொல்ல இது தான் தருணம் என தனிமையை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த என் மனதில் ஏனோ ஒரு வித  ஏக்கம் எட்டிப்பார்க்க, எப்படி வெளியில் செல்வது என்பதை தவிர, வேறு எதையும் நான் சிந்திக்கவில்லை.

அப்போது அவன் கைகள் மெல்ல என் மார்பை நோக்கி நீள, ஒரு நிமிடம் எனக்கு தூக்கு வாரி போட்டது. அவன் கைகள் என்னை நோக்கியும் அவன் இதழை நோக்கியும் சென்ற வண்ணம் இருக்க, அப்போதுதான் அவன் செய்கைக்கான அர்த்தமதனை நான் புரிந்துக்கொண்டேன்.

ஆம்,

அப்போது இரவு 10 மணி ஆக, பிள்ளைக்கு (அவனுக்கு) பசிக்கிறது என்பதை நான் புரிந்துக்கொண்டேன். ஆம், என்னவன் வினையனுக்கு பசி எடுக்க என் காலேஜ் பேக்கை திறந்து அதில் ஏற்கனவே நான் வாங்கி வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து அவனிடம் நீட்ட, அதனை தட்டிவிட்டான் வினையன்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவன் அவ்வாறு நடந்துக்கொள்ள எனக்கு துளி அளவும் கோபம் வரவில்லை. ஆனாலும், அவன் பசிக்கு என்ன செய்ய போகிறேன் என யோசித்த நான் முதலில் ஒரு பிஸ்கட்டை வாயில் வைத்து கடித்து பின்னர் அவன் இதழ் அருகாமையில் மற்றுமோர் பிஸ்கட்டை கொண்டு செல்ல, மெல்ல என் கண்களை பார்த்தவன் வேகமாக என் கையிலிருந்த பிஸ்கட்டை வாயால் கவ்வி இழுத்தான்.

அவன் சாப்பிடும் அழகை ரசித்துக்கொண்டே குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவது போல் ஜன்னல் வழியாக தெரிந்த நிலவை காண்பித்து பிஸ்கட்டை தர, அடம்பிடித்த மனம் குழந்தையாக மாறி அதனை மெல்ல ஏற்றுக்கொள்ள தொடங்கியது.

மழை வருவது போன்ற காலநிலையை கொண்டு வெளிப்புறம் காணப்படுவதை அவ்வப்போது நிலவினை மறைத்த மேகத்தின் மூலம் நான் தெரிந்துக்கொள்ள நிலவவள் மறைவது என்னவன் அழகை ரசித்து வெட்கத்தினாலோ…அல்லது என்னவனுடன் நான் இருப்பதால் ஏற்பட்ட பொறாமையினாலோ என எனக்குள் தோன்ற, ஒருவழியாக அவன் பசியை போக்கி முடித்தேன்.

இரவு 11 மணி,

நான் கெமிஸ்ட்ரி லேப் சுவற்றில் தலையை சாய்த்துக்கொண்டு லேசாக கண் அசர, அப்போது யாரோ என் மடியில் தலை சாய்ந்து தூங்குவதை போல் நான் உணர்ந்தேன்.

அது வினையன் தான்…

குழந்தையை போல் மடியில் தலை வைத்துக்கொண்டு அவன் என்னை நிமிர்ந்து பார்க்க, அந்த பார்வையில் சிறுதுளி தவறு கூட தெரியவில்லை.

எப்போது ஒரு பெண் இருளில் தனித்து இருப்பாள். என்னவெல்லாம் அவளை செய்யலாம் என நினைக்கும் பலர் மத்தியில் வினையனை எனது பாதுகாப்பாகவே நான் பார்த்தேன்.

ஒரு தாயும், மகனும் தனித்திருப்பது போன்ற எண்ணத்தையே என் மனதில் அச்சம்பவம் தந்தது என சொல்லலாம்.

காத்திருப்பது நல்வினையை விதைக்க என்பதை மறந்து… காத்திருந்து காது கேளாத பெண்ணை கூட கற்பென்பது என்னவென அவள் அறியா பருவத்தில் கற்பழிக்கும் பலர் மத்தியில் வினையனை என் காவலனாகவே நான் பார்த்தேன்.

இப்போது எனக்கு மாதவிடாய் வலி வந்தாலும், அவன் மடியில் சாய்ந்து ஆறுதல் தேடிடுவேன் எனும் நம்பிக்கையை என் மனம் எனக்கு அளித்தது.

இன்னும் சொல்லப்போனால், அன்று மட்டும் என் காலேஜ் பேக்கில் ஒரு தாலி இருந்திருக்க வேண்டும்., சின்னத்தம்பி குஷ்பு போல் அவன் கையாலே அந்த தாலியை கட்டிக்கொண்டு கெமிஸ்ட்ரி லேப்பை மூன்று முறை சுற்றிக்கூட நான் ஓடி வந்திருப்பேன்.

இப்போது நினைத்தாலும் அந்த ஒரு நாள் இரவு என் வாழ்வில் மீண்டும் எட்டிப்பார்க்காதா என எத்தனையோ நாட்கள் ஏங்கி தவித்ததுமுண்டு.

அப்படியே அந்த நாளின் இரவு இதுவரை நான் கண்டிராத இரவாக இனிதே அமைய, பொழுது விடிந்து யாரோ கதவை திறக்கும் சத்தமது என் செவியை கிழித்தது.

அன்று என பார்த்து எங்களுக்கு காலைவேளையில் கெமிஸ்ட்ரி லேப் என்பதால், எங்கள் இருவரையும் பார்த்த என் சக வகுப்பு மாணவ/ மாணவிகள் அதிர்ச்சி எல்லையில் பயணித்தார் போல் உணர்வை வெளிப்படுத்தி எங்கள் இருவருக்குள்ளும் இரவில் என்னவெல்லாம் நடந்திருக்குமென அவர்களுக்குள் பேசிக்கொள்ளவும் தொடங்கினர்.

அதிலும் அவர்களால் பார்க்கப்பட்ட உடைந்துக்கிடந்த கண்ணாடி குவளையும், அதிலிருந்து வெளிவந்த திரவமும் தவறான பார்வையாலே எங்கள் இருவரையும் சித்தரிக்க காரணமாக அமைய, காரி துப்பாத குறையாக வார்த்தைகள் எங்களை நோக்கி விழுந்த வண்ணம் இருந்தது.

எனக்கு நன்றாக தெரிந்துவிட்டது.

இன்னும் சில நாட்களில் எனக்கு சாதாரண பசி மயக்கம் வந்தாலும், அப்போது என் மீது அனுதாபம் யாருக்கும் பிறக்காது. மாறாக, என் வயிற்றில் வளர்வது வினையனின் குழந்தை தான் என இந்த ஊரே பேசும் என நினைத்துக்கொண்டே எங்களை நோக்கி வீசப்பட்ட சொற்களை மெல்ல கடந்து போனேன்.

அதிலும் அன்று வினையனை நான் காப்பாற்ற., அவர் தந்தையிடம் காணொளி காட்டியதால் மன்னிப்பு கேட்டுக்கொண்ட நல்லுள்ளங்கள் எங்கள் இருவரையும் ஏளனமாய் பார்த்து சிரித்து, இது தான் சந்தர்ப்பம் என எங்கள் இருவரை பற்றிய தவறான பரப்புரையை பரப்பிக் கொண்டிருந்தது.

அப்போது அவர்கள் சிரிப்பதை பார்த்த எனக்கு, இவர்கள் தான் எங்கள் இருவரையும் நேற்று இரவு கெமிஸ்ட்ரி லேப்பிற்குள் வைத்து பூட்டி பழிவாங்கியதோ என கூட தோன்றியது.

இவ்வாறு வசிஷ்டா டைரியில் எழுதுக்கொண்டிருக்க, அப்போது கதவை திறந்துக்கொண்டு நிதுன் உள்ளே நுழைந்தான்.

“எந்த சீன் வந்துருக்கு? காட்டு…காட்டு…” என அவளிடமிருந்து வெடுக்கென டைரியை பிடுங்கி படித்தவன், “ஓஹோ! இவ்வளவு சீன் வந்துடுச்சா! இத தான்டி நான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். எங்க இதையெல்லாம் மறைச்சு நான் நல்லவன்னு நடிக்க போறீயோ நெனைச்சேன். பரவாயில்லையே! தைரியமா எழுதி இருக்க…” என சொல்ல வசிஷ்டா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் அருகில் வந்தவன், “உங்க ரெண்டு பேருக்குள்ள அன்னைக்கு நைட்டு எதுவுமே நடக்கலையா? பொய் சொல்லாத…” என சொல்ல, வசிஷ்டா வார்த்தையின்றி அமைதியாக இருந்தாள்.

“என்ன பார்க்குற வசிஷ்டா…” என்றவன்., “உன் காலேஜ் லைஃப்ல என்ன நடந்துச்சு? எல்லாமே எனக்கு தெரியும். அதுக்காக தான் லீவு போட்டு உன் காலேஜ்ல போயி விசாரிச்சேன். உன் பிரெண்ட்ஸ்… உன்ன பிடிக்காதவங்க எல்லாருக்கிட்டயும் எப்படியோ பேசி எல்லா உண்மைய நான் தெரிஞ்சுகிட்டேன். அன்னைக்கு நீ போன் பண்ணும்போது நான் அமைதியா இருந்தனே…அப்போ கூட உன்ன பத்தி தெரிஞ்சிக்க தான் போயி இருந்தேன்…” என நிதுன் சொல்ல, வசிஷ்டாவுக்கு சந்தோஷப்படுவதா? இல்லை, கவலைப்படுவதா என்றே தெரியவில்லை.

ஆம்,

அவன் தன்னிடம் வாழ்ந்த வாழ்க்கை சலித்துப்போக அதனால் விலை மாதுவை தேடித்தான் சென்றதாக நினைத்த அவளுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை தெரிந்துக்கொண்டதால் சந்தோசம் என்றாலும், இப்படி ஒரு கணவன் தனக்கு கிடைத்ததை எண்ணி மிகவும் கவலைக்கொண்டாள் வசிஷ்டா.

அப்போது நிதுன் திடீரென…

“ஹேய்! அன்னைக்கு கெமிஸ்ட்ரி லேப் திறக்கும்போது உன் ட்ரெஸ்லாம் கலைஞ்சு இருந்துச்சாமே. அதப்பத்தி நீ எதுவும் எழுதல… சொல்லுடி..” என வசிஷ்டாவின் பிடரி மயிர் பிடித்து அவன் இழுக்க, அவனை பார்த்து விழித்தவாறே அவள் மெல்ல மயங்கி கீழே விழுந்தாள்.

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 16

வசிஷ்டா மயங்கி விழ நிதுன் ஒரு வித வெறுப்புடன் அவளை கட்டிலில் தள்ளி கோபத்துடன் நின்றான். பைத்தியம் பிடித்தவனாக அந்த அறையில் அலைந்தவன் வசிஷ்டா எழுதி கொண்டிருந்த டைரியை தூக்கி எறிந்துவிட்டு அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.

வசிஷ்டாவை பரிசோதித்த அந்த பெண் மருத்துவர் அவள் கர்ப்பமாக இருப்பதாக கூற, அரை மயக்க நிலையிலிருந்த வசிஷ்டாவின் இதழ்கள் மெல்ல புன்னகைத்தது.

ஆனால் நிதுனுக்கு அவள் வயிற்றில் வளரும் குழந்தை யாருடையது எனும் குழப்பம் ஏற்பட, அதற்கு காரணம் தன் இதழில் வழிந்த மெல்லிய புன்னகை தான் என்பதை வசிஷ்டாவும் நன்றாகவே புரிந்துக்கொண்டாள்.

இருப்பினும், தனக்காக ஏங்க துடிக்கும் ஒரு கருவின் இதயம் உருவாக போவதை எண்ணி மிகவும் மனதில் மகிழ்ச்சி கொண்டு வெளிப்படையாகவே அதனை காண்பித்து நிதுனை வெறுப்படைய செய்தாள் அவள்.

இதன் விளைவு…

வசிஷ்டா வழக்கம்போல் வீட்டில் பணி பெண்ணாகவே பார்க்கப்பட, நிதுன் அந்த நாட்களில் அவளிடம் பேசுவதை குறைத்தும் கொண்டான். ‘என்ன ஆகிற்று இவனுக்கு? என்னை இப்போதெல்லாம் திட்ட மறுத்து அமைதியாக இருப்பது ஏன்…’ என வசிஷ்டா குழப்பத்துடன் இருந்த போதிலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனக்காக வரப்போகவிருக்கும் உயிரை வரவேற்க காத்திருந்தாள்.

அவளுடைய தேவைகள் அனைத்தும் வெளி உலகை சார்ந்திருக்க வேறு வழியின்றி நிதுனிடம் சென்ற அவள், “என்னங்க! வரும்போது ஆப்பிள் பழம் வாங்கிட்டு வறீங்களா…?” என கேட்டாள். நியூஸ் பேப்பரை படித்துக்கொண்டிருந்த அவன் வேகமாக அவளை திரும்பி முறைத்த போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவன்.

ஒரு மாதம் கழித்து அப்படி இப்படி என ஆசை வார்த்தையை அவன் மேனியில் தடவி மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள் வசிஷ்டா.

ஆம்,

கர்ப்பிணி பெண்ணின் மனதை யாரும் காயப்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் நிதுன்., வசிஷ்டா ஒரு கர்ப்பிணி பெண் என கூட பாராமல் அவள் மனதை நோகடிக்க மறந்து இரவு பொழுதில் உடலை வாட்டி வதக்கினான்.

அதனால் அவள் மிகவும் சோர்வுடன் காணப்பட, என்ன தான் செய்ய முடியும். அவன் ஆசைக்கு அவளுடைய ஆடைகள் விலக மறுத்தால் யார் நினைவில் என்னை அணைத்தாய் என மீண்டும் கேள்வி எழும். அப்போது உடலுடன் சேர உள்ளமும் வாடிவிடும் என நினைத்து தன் மகனுக்காக அவன் அளிக்கும் சுக வேதனையை ஏற்றுக்கொண்டாள் வசிஷ்டா.

மருத்துவமனையில்…

வசிஷ்டாவின் உடலை பரிசோதித்த  பெண் மருத்துவர் அவளை வெளியில் அமர சொல்லிவிட்டு நிதுனுடன் மட்டும் வெகு நேரத்திற்கு பேசினார்.

வசிஷ்டாவின் மனமோ, அவர்கள் இருவரும் அப்படி என்ன தான் பேசிக்கொள்கின்றனர் எனும் நினைவலையில் இருக்க , அங்கே மருத்துவமனையில் அம்மாக்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பழங்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டும் அமர்ந்திருந்தாள் அவள்.

அரை மணி நேரம் கழித்து மருத்துவமனை விட்டு வெளியில் வந்த நிதுன் அவள் அருகில் வந்து நின்று, “போகலாமா வசிஷ்டா..” என கேட்க, அவன் கேள்வியில் அவ்வளவு அக்கறை தெரிந்தது.

ஆனாலும் நிதுன் அவள் முகத்தை பார்க்க தகுதி அற்றவனாய் தலை குனிந்து நின்றான்.

‘கணவன் – மனைவிக்குள் ஏற்படும் சன்டைகள் யாவும் குழந்தை பிறந்த பின்னர் குறைந்து புரிதல் உண்டாகும் என்பார்கள். அது இது தானோ! நிதுனிடம் திடீரென இத்தகைய முதல் மாற்றம்! என்னால் இதனை நம்பவே முடியவில்லை…’ என அவள் நினைத்துக்கொண்டிருக்க அவளை கைத்தாங்கலாக  அழைத்து சென்ற அவன், காரில் மெல்ல அமர வைத்து மிருதுவாக வாகனத்தை சாலையில் செலுத்தினான்.

‘வசிஷ்டாவின் மனதில் பலவித  குழப்பம்…

‘நிதுன் திடீர் அக்கறையை நான் எப்படி தான் எடுத்துக் கொள்வது. இதனை நம்பி இவனிடம் நாம் எதையும் விரும்பி கேட்கலாமா…’ என யோசித்து கொண்டே அவள் செல்ல, நிதுன் திடீரென கார் பிரேக்கை அழுத்தி அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தான்.

அவன் வேகமாக அவளை பார்த்துவிட்டு கதவை திறந்துக்கொண்டு அருகில் சென்றான். சுமார் 15 நிமிடங்கள் கழித்து வந்தவன் ஒரு அட்டை பெட்டி நிறைய பழங்களுடன் வந்தான்.

தான் காண்பது நிஜம் தானா என யோசித்துக்கொண்டே அகன்ற கண்களால் ஆச்சரியம் ததும்பும் பார்வையை அவள் நிதுனுக்கு பரிசளிக்க, அவனும் அவளை பார்த்து மெல்ல புன்முறுவல் பூத்து அமைதியாக காரில் ஏறினான்.

அவளை கண்ணாடியின் வழியாக அவன் பார்த்தபோதும் அதில் சற்றும் காமம் ஊடுருவவில்லை. அதற்கு மாறாக ஏதோ ஒரு அக்கறை மட்டுமே ஊடுருவி அவள் உள்ளத்தை தொலைத்தது.

அவ்விடத்தில் மௌனம் மட்டுமே அத்தருணத்தை அழகாக்க, அதற்கு அழகு சேர்க்கும் விதமாக அவள் பெயரை மெல்ல உச்சரித்தவன், சாலையை பார்க்க மறந்து வசிஷ்டாவை நோக்கி திரும்பினான்.

“இந்த ப்ரூட்ஸ்லாம் (Fruits) உனக்கு தான்… நல்லா சாப்பிடனும். நாளைக்கு நமக்கு பொறக்க போற குழந்தைய நம்ம ரெண்டு பேரும் தான பார்த்துக்கனும். என்ன நான் சொல்றது சரி தான…” என கேட்டுக்கொண்டே சாலையை பார்த்தவன் சட்டென நிறுத்த, வசிஷ்டா முன் சீட்டில் வந்து மோதினாள். அவளுக்கு லேசாக வலிக்க, வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு பின் சீட்டுக்கு வந்தவன், “ஹேய்! என்னாச்சு? ஒன்னும் ஆகலைல…” என கேட்க, இல்லை என்பது போல் வசிஷ்டா தலையை ஆட்டினாள்.

நிதுன் மீண்டும் வண்டியை வீட்டுக்கு மெல்ல திருப்பினான்.

வசிஷ்டா மனதில்…

‘நானாக தான் இடித்துக்கொண்டேன் நிதுன். நீ இப்போது பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எப்போதும் எனக்கு கிடைத்திடாதா எனும் ஏக்கத்தில் என் மனம் குழப்பத்துடன் தவித்தது. அதனால், நான் காண்பது நிஜம் தானா? இல்லை, கனவா என்பதை உறுதி செய்துக்கொள்ளவே உன் சீட்டில் மோதி கொண்டேன். ஆனால் எனக்கு வலித்தது. இது கனவல்ல. நிஜம் தான். நான் இன்று சந்தோஷமாக இருக்கிறேன்…’ என நினைத்துக்கொண்டே மெல்ல உறங்கினாள்.

அவள் மீண்டும் விழித்த போது வீட்டில் இருந்தாள்.

வசிஷ்டா நேரத்தை பார்த்துவிட்டு மெல்ல சமையலறைக்குள் நுழைய, அங்கே நிதுன் சமையல் குறிப்பை பார்த்து ஏதோ மும்முரமாக சமைத்துக்கொண்டிருக்க, “என்னங்க! போங்க… நான் செய்றேன்…” என்றாள் வசிஷ்டா.

“இல்லை வசி…. நீ போய் தூங்கு! நான் பார்த்துக்குறேன். இது நீ ரெஸ்ட் எடுக்க வேண்டிய நேரம் சரியா…” என அவள் இடுப்பை அணைத்துக்கொண்டு மெல்ல நடக்க, அவள் இடையை தாங்கிய அவன் கைகள் ஏதோ ஏக்கத்தில் இருந்தது.

ஆம்,

இதுவரை அவளை ஒரு காட்சி பொருளாக பார்த்தவன் கண்ட நேரத்தில் கைகளால் அவளை தாங்கி பொம்மையை போல் வைத்து அவள் உடலை விளையாடினான்.

ஆனால், இப்போது அன்பால் அவன் கைகள் முதன்முறையாக அவளை அணைக்க, அதனால் நடுங்கியது.

அவளை தூங்க வைத்துவிட்டு மீண்டும் சமையலறைக்கு அவன் வர, ‘இறைவா! இந்த வாழ்வை எனக்கு எப்போதும் நீ தர மாட்டாயா…’ என வேண்டி ஏக்கத்தை கடவுளிடம் காணிக்கையாக்கினாள் வசிஷ்டா.

அப்போது,

“ஹேய்! தூங்கிடாத…” என ஓடி வந்தவன் ஆகாரத்திற்கு முன்னர் அளிக்க வேண்டிய மாத்திரையை கொடுத்து அவள் தலையை வருடினான். அவளும் நிதுன் முகத்தை பார்க்க, அவள் மார்பை ஈரமாக்க இந்த முறையும் கண்களில் இருந்து நீர் பொங்கி வந்தது.

ஆனால் இம்முறை அது அவள் மார்பில் மூழ்கும் முன்னே தன் இருகைக்களால் தடுத்து கண்ணீரை துடைத்தான் நிதுன்.

“இப்போ எதுக்கு அழுகை. நான் இருக்கவரைக்கும் நீ அழக்கூடாது. அது உன்னோட வயித்துல வளர குழந்தைக்கு நல்லது இல்ல…” என சொல்லி அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு தூங்க செய்தான்.

சமையல் வேலையை முடித்து அவன் வருவதற்குள் வசிஷ்டா நன்றாக தூங்கி எழுந்தாள்.

அவள் எழுந்தவுடன் சமையலறைக்கு செல்ல, அப்போது தான் நிதுன் எல்லா சமையலையும் ஹால் நோக்கி எடுத்துக்கொண்டு வந்தான். “பசி எடுத்துட்டாம்மா… அவ்வளவு தான் சமையல் ரெடி! நீ போய் ஹால்ல உட்காரு. நான் உனக்கு பிளேட் எடுத்துட்டு வரேன்…” என போனவன் நன்றாக பிளேட்டை சோப் போட்டு கழுவி அந்த சோப் வாடையினால் கூட அவளுக்கு குமட்டல் எடுத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தான்.

அவள் மிகவும் சிரமத்துடன் சாப்பிட, அவ்வப்போது சின்ன குழந்தைகளுக்கு ஊட்டி விடுவது போல் ஊட்டியும் விட்டவன் இதுவரை யாரும் கண்டிராத பாசத்தை அவனுள்ளே கண்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

மருத்துவ பரிசோதனை, அவளுக்கு தேவையான பணிவிடைகளை உடனிருந்து செய்வது என மிகவும் அக்கறையுடன் அந்த பத்து மாதத்தில் இருந்து வந்தான்.

வசிஷ்டாவின் வயிற்றில் வளரும் குழந்தையும் எப்போது தன் தாய் தந்தை முகத்தை காண்போம் என்பது போல் லேசாக எட்டி உதைத்து எதிர்ப்பார்த்து காத்திருக்க, அந்த நாளும் வந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத அந்த சோகம் அவள் வாழ்வில் ஏற்படும் என யாரும் கனவில் கூட நினைக்கவில்லை.

அது தான் வினையனின் மனநலம் குன்றிய பிறப்பு.

அப்படி குறையை கொண்டு ஒரு குழந்தை பிறக்க நிதுன் மீண்டும் முன்பு மாதிரி மாற தொடங்கினான்.

அது அவன் குழந்தை தானா என்பது போன்ற ஒரு முக பாவனையுடன் அவன் இருப்பதை வசிஷ்டாவும் புரிந்துக்கொண்டாள். ‘இறைவா! என் சந்தோசம் நிலைப்பது உனக்கு கூட பிடிக்கவில்லையா. அதனால் தான் காலத்துக்கும் என் கண்ணீரை துடைக்க மட்டும் ஒரு மகனை பரிசாய் தந்தாயோ…’ என ஏக்கத்துடன் அவள் இருக்க, நிதுன் பார்வையோ மீண்டும் வசிஷ்டாவை தான் விரித்த வலையில் விழ வைக்க காத்துக்கொண்டிருந்தது போல் பார்வையால் பாரபட்சமின்றி பிரசவித்த நேரத்திலே அவள் உடலை தீண்டி கூச செய்தது.

அவன் கண்களில் தெரிந்த ஒரு உணர்வானது, ‘அடுத்து பிறக்க போகும் குழந்தையாவது என்னுடையதாக இருக்க வேண்டும் என்பது போல் ஒரு எதிர்பார்ப்பின் விளிம்பாய் அமைய, அவளுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை.

அந்த பிறந்த குழந்தை மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை என்பதால் அது அவளுக்கும் கல்லூரி காதலன் வினையனுக்கும் பிறந்த குழந்தையாகவே அவன் பார்வைக்கு தெரிகிறது என்பதை உணர்ந்து வெட்கம் கொண்டாள் வசிஷ்டா.

செய்யாத தவறுக்கு சேலை அவிழ்த்து சிலையாக மாற்றிவிடும் உலகில் என்னை ஏன் படைத்தாய் இறைவா எனும் ஏக்கத்தில் அவள் இருக்க, ருக்மணி அம்மாள் அவளை அழைத்தார்.

“வசிஷ்டா, உன்னோட மகன் கூட நீ இப்போ இருக்கது தான் சரி. நீ கொஞ்ச நாள் லீவு சொல்லிட்டு இங்கேயே இரும்மா… அவனுக்கு அப்போ தான் சீக்கிரம் குணம் ஆகும்…” என்றாள்.

வசிஷ்டாவும் வேறு வழியில்லாமல் விடாது அடம்பிடித்து விடுப்பு கேட்டுக்கொண்டு  வினையன் அருகில் தஞ்சம் புகுந்தாள்.

வசிஷ்டாவின் வாழ்வில் அடுத்து என்ன ஆனது?

பொறுத்திருந்து பார்ப்போம்…

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 17

குமிழி காப்பகத்தில் தங்கியவள், தன் வாழ்வின் மற்ற பக்கங்களை மன கைகளால் புரட்டி நடந்தவற்றை மீண்டும் அவ்வப்போது யோசிக்க தொடங்கினாள்.

ஆம்,

நிதுன் எண்ண அலைகள் எரிமலையாய் எழுந்து எரிகின்ற நெருப்பில் நீரை ஊற்ற மறந்து அனுதினமும் அவளை தொடர்ந்து சித்ரவதை செய்ய தொடங்கியது.

கருவிலிருந்தபோதே அக்குழந்தையை கலைத்து இருந்திருக்கலாமோ எனும் எண்ணமே வசிஷ்டாவின் மனதில் தோன்றியது. அந்த அளவுக்கு வேதனையை அனுபவித்த அவள் எல்லையில்லா துன்பத்தை அடைந்து ஒரு நாள் அந்த மருத்துவரிடமே சென்றாள்.

மருத்துவமனையில்…

“என்னால நிம்மதியா இருக்க முடியல டாக்டர்! இப்படி ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை தான் நான் பெற்று எடுக்க போகிறேன் என முன்பே நீங்கள் சொல்லியிருக்கலாமே. எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் சூழ வாழ்க்கையை அமைக்க ஆணையிடுகிறான் அந்த இறைவன். தனித்தீவில் வாழ்வது போல் அல்லவா எனக்கு இருக்கிறது.” என சொல்ல “இப்போது என்ன நடந்தது வசிஷ்டா? எதற்காக நீ இவ்வளவு விரக்தியில் பேசுகிறாய்!” என அந்த பெண் மருத்துவர் அவளிடம் கேட்டார்.

“ஒன்னும் இல்லை டாக்டர். என் மனதில் உதித்த எண்ணங்களோடு சேர்த்து என்றோ வாழ்வையும் புதைத்துவிட்டேன். என் வாழ்வில் நான் காண துன்பங்கள்  இனிமேல் என்ன தான் மீதி இருக்கிறது!” என அவள் வேகமாக புறப்பட, “ஒரு நிமிடம் வசிஷ்டா! என்ன நடந்தது என விவரமாக என்னிடம் கூறு. டாக்டரிடம் எப்போதும் எதையுமே மறைப்பது தவறு…” என அந்த பெண் மருத்துவர் மிகவும் வற்புறுத்தி வசிஷ்டாவின் வாழ்வில் நடந்தவற்றை கேட்டார்.

வேறு வழியில்லாமல் இதுவரை நடந்தவற்றை ஒன்று விடாமல் வசிஷ்டாவும் கூறினாள்.

அந்த பெண் மருத்துவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் சொல்லும்போதெல்லாம் ஏதோ ஒரு வார்த்தையை சொல்ல வந்து அதனை விழுங்கி கொண்டே இருக்க காலேஜில் வினையனை கண்டது முதல் இன்றைய நாளில் அவள் எழுதிய டைரி வரை என ஒன்றுவிடாமல் கூறி முடித்தாள் வசிஷ்டா.

இப்படியும் ஒருவனா என வாயடைத்து போய் நின்றார் அந்த பெண் மருத்துவர்.

“விடுங்க டாக்டர்! இதெல்லாம் என் வாழ்வில் சகஜம் தான். ஆனால் இன்று ஏனோ இனம் புரியாத ஒரு உணர்வு. உங்களிடம் என் மனதில் இருப்பதை பகிர்ந்துக்கொண்டதால் மிகவும் மகிழ்ச்சியாக எனக்கு இருக்கிறது.” என சொல்லி அவள் மெல்ல எழுந்து செல்ல, “ஒரு நிமிடம் வசிஷ்டா…” என அந்த பெண் மருத்துவர் அவளை தடுத்தார்.

“வசிஷ்டா! நான் சொல்வதனை நீ எவ்வாறு எடுத்துக்கொள்ள போகிறாய் என எனக்கு தெரியாது. ஆனாலும் இவ்வளவு நடந்த பிறகு இதனை மறைப்பது எனக்கு சரியாக படவில்லை. குழந்தை மன நலம் குன்றி பிறந்ததற்கு காரணம் நீ அல்ல!” என சொல்ல வசிஷ்டா சட்டென அந்த பெண் மருத்துவர் முகத்தை அன்னாந்து பார்த்தாள்.

“ஆமாம் வசிஷ்டா! உன் குழந்தை அப்படி பிறக்க காரணம் உன் கணவன் நிதுன் தான்.” என சொல்ல அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

“என்ன சொல்றீங்க டாக்டர்” என அவள் அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“உன் உடலில் தங்கிய நிதுன் உயிரணுக்கள் சக்தி இழந்து காணப்பட்டது. இது நிதுனுக்கும் தெரியும். அதனால் தான் அன்று நான் அவனிடம் வெகுநேரம் பேசினேன். உன்னை முறையாக கவனித்து கொண்டால் ஒருவேளை குழந்தை ஆரோக்கியமாக பிறக்கலாம் என அவனிடம் கூறினேன். ஆனால், இப்படி நடக்கும் என தெரிந்திருந்தால் உன்னிடம் தான் இதனை முதலில் கூறி இருப்பேன். என்னை மன்னித்துவிடு வசிஷ்டா. உன் வாழ்க்கையில் மீண்டும் ஒரு வேதனை அரங்கேற நானே காரணமாகிவிட்டேன்.” என சொல்ல அவளுக்கு, ‘தான் தப்பானவள் அல்ல என்பதை தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பதா! இல்லை, நிதுனின் செயலால் தலை குனிவதா’ என தெரியாமல் குழம்பி தவித்தாள்.

மருத்துவர் தொடர்ந்தார்.

“எப்போது ஒரு ஆண் மிகவும் குழப்பத்துடன் ஒரு பெண்ணிடம் நெருங்கி ஊடல் கொள்கிறானோ., அப்போது தான் இது போன்ற சிக்கல்கள் பிரசவத்தில் ஏற்படும். நீ அப்படி ஏதும் அனுபவித்தாயா?” என அந்த பெண் மருத்துவர் கேட்க, வசிஷ்டா சிரித்துக்கொண்டே கூறினாள்.

“மேடம், நான் அனுபவித்த வலிக்கு இனிமேல் எத்தனை குழந்தை பிறந்தாலும் அது என் கல்லூரி தோழன் வினையன் போலவே தான் பிறக்கும். என் இறப்பு வரை ஒரு தாசியாக தான் என்னவன் மனதில் நான் வாழ வேண்டும். என்னை மன்னித்துவிடுங்கள்.” என கூறி வேகமாக அவள் எழுந்து செல்ல, “எங்கே செல்கிறாய்?” என பதட்டத்துடன் கேட்டார் அந்த பெண் மருத்துவர்.

“நான் கண்டிப்பாக என் உயிரை மாய்த்துக்கொள்ள மாட்டேன். பயப்புடாதீர்கள்.” என கூறி சாலையில் நடந்தவாறு வேதனையுடன் இருக்க, அனைவரது பார்வையும் அவள் ஆடை மேல் தான் இருந்தது.

அவள் எண்ணம் எல்லாம் அடுத்து என்ன தான் செய்ய போகிறோம் என இருக்க, நிதுன் கூறிய வார்த்தைகள் எல்லாம் அவள் மனதில் துளிர்விட்டு வளர தொடங்கி அதன் பக்கத்தில் அதற்கு ஆதரவான எண்ண விதைகளை விதைக்க தயாரானது.

அவளுடன் ஒருவன் சேர்ந்து வருவதை  கூட அறியாது அவள் நடந்து செல்ல,  அவனோ அவளிடம் பேரம் பேசிக்கொண்டே நடந்தான்.

ஆம்,

அவள் ஒரு விலை மாது என நினைத்து அவள் உடலுக்கு விலைபேசி உரச ஏங்கி அவளுடன் நடந்தான்.

அவள் எண்ணமோ நிதுன் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை மீதே இருந்தது.

ஆம்,

ஒரு நாள்…

வசிஷ்டா டைரியை எழுதிக்கொண்டிருக்கும் போது அவன் கூறிய அந்த வார்த்தை.,

“எழுது! எழுது! நீ எழுதி முடிச்சதும் உங்க அப்பாவுக்கு இத அனுப்பி உங்க மகளோட இலட்சணத்த பாருங்க என காட்டனும்” என சொல்லி சிரிக்க, வசிஷ்டாவுக்கு வார்த்தையே வரவில்லை. அதற்கு மாறாக ஆத்திரம் பொங்க அழுகையே வர, அதை எல்லாம் நினைத்துக்கொண்டே ஏக்கத்துடன் நடந்தாள் வசிஷ்டா.

அவள் உடன் நடந்த ஒருவனோ 2000 ரூபாயில் பேரம் பேசி 5000 ஆயிரம் ரூபாய் வரை செல்ல, அவள் கையை வெடுக்கென பிடித்து, “உன் ரேட்டு எவ்வளவு தான்?” என்றான்.

அப்போது தான் அவள் சுயநினைவுக்கு வந்து தன் ஆடையை சரி செய்துக்கொண்டு அவனை விட்டு விலகி அவசர அவசரமாக கண்ட பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரத்தில் ஏக்கத்துடன் சாய்ந்தாள்.

எண்ணங்கள் அவள் உடலை நாலா பக்கமும் பிடித்து இழுத்து பிய்த்து தின்றது.

விளைவு,

வினையனுக்காக ஒரு முடிவுக்கு வந்த அவள் ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினாள். ஆனால், அந்த இறுதி நிமிடம் வரை அவளை நிதுன் நிதானமற்று நிர்வாணமாகவே மன கண்களால் கண்டான்.

எங்கே செல்வது என தெரியாமல் தவித்த அவளுக்கு வனஜா அறிமுகமாக அதனை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டாள் வசிஷ்டா.

எத்தனை பேர் அவள் உடலை உரசி காமம் கலந்த பாடத்தை நடத்தினாலும் அத்தனையும் நிதுனுக்கு முன்னால் தோற்று போக அந்த வாழ்வை உடலாற அனுதினமும் அனுபவித்தாள் வசிஷ்டா.

வினையனுக்கு இருக்கும் மனநல பிரச்சனையை குணப்படுத்த எவ்வளவோ முயன்றும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. ஆனாலும் வினையனை நாங்கள் குணப்படுத்துகிறோம் என கூறி அவ்வப்போது ஆசை வார்த்தை உதிர்த்து அதற்கு தொகையாக வசிஷ்டாவையே ஒரு சிலர் விலை பேசி அனுபவித்தனர்.

அவர்களுடன் அவள் இருக்கும் அந்த ஒரு இரவில் என்ன நடக்கிறது என கூட அவளுக்கு தெரியாது.

அவளுடைய மகன் ஆசையாக ‘அம்மா’ என கத்திக்கொண்டு ஓடி வருவது போல் மட்டுமே அவள் மன உலகில் தோன்ற நிஜ உலகில் தான் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதை கூட மறந்து அந்த இரவில்  மனமற்ற இன்பத்தை தருவாள்.

இப்படியே நாட்கள் நகர்ந்தது.

இன்று தன் மகனுக்காக குமிழி காப்பகத்தில் தங்கி அவனை நன்றாகவே கவனித்து கொண்டாள்.

இந்த நாட்களில் அவள் இரவு வாழ்வில் அவளற்று என்ன நடந்தது என கூட வசிஷ்டாவுக்கு தெரியாது.

விளைவு,

வினையனுக்கு குணமானதும் மீண்டும் அவள் விபச்சாரியாக உருவெடுத்தாள்.

அங்கே அவள் அறைக்குள் செல்ல எல்லா பொருட்களும் கலைந்து கிடந்தது.

அப்போது தான் அவளுக்கு அந்த டைரி நினைவுக்கு வர அவளுடைய பெட்டியை திறந்து அவசர அவசரமாக தேடினாள். ஆனால், அந்த டைரியை அங்கே காணவில்லை.

வசிஷ்டாவுக்கு அதிர்ச்சி அலைகள் ஆழ்மனதில் ஆழி பேரலையாய் மாறி நொடிக்கு நொடி கொன்று கொண்டிருந்தது.

‘யாராக இருக்கும்?’ என யோசித்த அவள் வேறு வழியின்றி வனஜாவிடம் சென்று, “என் அறைக்குள் வந்தது யார்?” என கேட்க, வனஜா பேச்சில் சற்று மரியாதை குறைந்தே காணப்பட்டது.

ஆம்,

இத்தனை நாட்கள் எடுத்த விடுப்புக்கு வசிஷ்டாவை வார்த்தையால் பழி தீர்த்து கொண்ட வனஜா, “எனக்கு என்ன தெரியும். நீ இஷ்டத்துக்கு வருவ! போவ! அதுவரைக்கு ரூம சும்மா பூட்டியே வச்சு இருப்பாங்களா?” என கேட்க, அவளுடைய வார்த்தை இன்னும் மிகவும் வேதனையை தந்தது.

ஒருவேளையாக அவள் ரூமில் உடலை பரிமாறிய ஒருத்தியின் மூலம் அவள் அறைக்குள் நுழைந்தது எந்த தேதி என்பதை வசிஷ்டா தெரிந்துக்கொண்டாள்.

ஆம்,

ஒரு அடையாளத்துக்கு வருபவர்களிடம் எல்லாம் பெயர் மற்றும் முகவரி வாங்கி கொள்வது வனஜாவின் வழக்கம். ஆனால் என்ன தான் இப்படி ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை அவள் எடுத்தாலும் வரும் யாரும் அவர்களுடைய அசல் பெயர் மற்றும் முகவரியை தருவதே இல்லை.

ஆனாலும், மன ஆறுதலுக்காக அந்த நோட்டை நோட்டமிட்ட வசிஷ்டாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த டைரியில் உள்ள பெயர்களை எல்லாம் அவள் படித்து கொண்டே வர, அதில் ‘நிதுன்’ என எழுதப்பட்ட பெயர் முன்னால் அவள் பார்வை அப்படியே நின்றது.

அந்த பெயரை அவள் வெறிக்க வெறிக்க பார்க்க, அந்த பெயரோ அவளை பார்த்து வில்லத்தனமாக சிரித்து கொன்றது.

அடுத்து என்ன ஆனது…

பொறுத்திருந்து பார்க்கலாம்

ஏக்கம் தொடரும்…

ஏக்கம் – 18

வசிஷ்டாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நிதுன் தான் வந்தான் எனில் அவளுடைய டைரி விரைவில் தன் தந்தையை சென்று சேரும் என நினைத்தவள் கண் கலங்க நின்றாள்.

காரணம்,

நிதுனை நிராகரித்து விட்டு வீட்டிலிருந்து குழந்தையுடன் வெளியேறிய  வசிஷ்டா வாழ அருகதை அற்றவள் எனும் பட்டத்தை எல்லோரிடமும் பெற, ஏற்கனவே அவள் பெற்றோர் அவளை பிள்ளையாய் பெற்றதை நினைத்து மிகவும் அவமானம் கொண்ட முகத்துடன் வாழ தெரியாது வாழ்ந்து வந்தனர்.

அவள் இருக்கும்போது தான் இன்னல்களை சந்தித்தோம் எனில் இன்னொரு வீட்டுக்கு சென்றும் இப்படி செய்துவிட்டாளே பாவி மகள் என நடந்தது எது என தெரியாமலே தூற்றி பேசி தினமும் வாழ, அதில் அந்த ஊரே குளிர் காய்ந்தும் வந்தது.

இப்போது, தான் மற்றவர் தேவைக்கு அடி பணிந்து வாழும் ஒரு பெண் என தெரிந்தால் என்ன நடக்குமோ என்னும் குழப்பத்துடன் அவள் இருக்க, குமிழி காப்பகத்துக்கும் விரைந்து சென்றாள்.

ஆம்,

இதற்கு மேல் இவ்விடத்தில் இருப்பது சரி இல்லை என முடிவு செய்த வசிஷ்டா தன் வாழ்வை இங்கே முடித்துக்கொண்டு விதி விட்ட பாதையில் பயணிக்க தயாரானாள்.

அவளுக்கு இரவு பகல் பாராது 24 மணி நேரமும் வாழ்க்கையை அளித்த ருக்மணி அம்மாளுக்கும், வனஜாவுக்கும் மனதில் நன்றியை கூறி மாயமாக புறப்பட்டாள்.

அப்படி இப்படி என ருக்மணி அம்மாளை சமாதானப்படுத்தி வேறு ஒரு காரணத்தையும் முன் வைத்தாள் வசிஷ்டா.

அது என்னவென்றால்,

வினையனுக்கு அறுவை சிகிச்சை செய்வதன் மூலமாக அவன் உடல் நலம் பெற்று சக மனிதர்களை போல் வாழ இருக்கிறான் என்பது தான். ஆனாலும் அப்பொய்யில் மனம் குளிர்ந்த ருக்மணி அம்மாள் மகிழ்ச்சியுடன் வசிஷ்டாவை வழி அனுப்பி வைத்தார்.

அன்றைய இரவுடன் அவள் வாழ்ந்த வாழ்க்கைக்கு நன்றி கூறி விடைபெற, போகும் இடத்தில் அடுத்து என்ன செய்ய போகிறோம் என எந்த யோசனையும் அற்று அவள் புறப்பட காத்திருந்தாள்.

அன்று இரவு,

அவள் எதிர்பாரா அச்சம்பவம் அவள் வாழ்வையே புரட்டி போட்டது.

அவள் வினையனுடன் ரயிலில் ஏறி இருக்கையை தேடி செல்ல, அங்கே அவளுக்கு முன்பே அவளுக்காக ஒருவன் காத்திருந்தான். அவனை கண்டதுமே அதிர்ச்சியில் உறைந்து போனாள் வசிஷ்டா.

ஆம்,

அது வேறு யாருமல்ல…

கருண் தான்

அவனை அவ்விடத்தில் சற்றும் எதிர்ப்பார்க்காத வசிஷ்டா என்ன சொல்வதென தெரியாமல் திணறினாள்.

“என்ன வசிஷ்டா? எப்படி இருக்கீங்க? எவ்வளவு நாள் ஆச்சு உங்கள பார்த்து…” என அவளை விசாரித்து வினையன் யார் என தெரிந்ததும் அவன் தலையை தடவிக்கொடுத்தான் கருண்.

“இந்த நேரத்துல எங்கங்க போறீங்க? அதுவும் தனியா?” என அவன் கேட்க, “வினையனுக்கு இன்னும் இரண்டு நாளில் ஆபரேஷன்., அதான் மும்பைக்கு போயிட்டு இருக்கோம்.” என்றாள் வசிஷ்டா.

“அட நானும் ஒரு முக்கியமான விஷயமா மும்பைக்கு தாங்க போறேன். இவ்வளவு நாள் பேசாம என்ன வெயிட் பண்ண வச்சிங்கல்ல…அதான் கடவுளே நம்ம ரெண்டு பேரையும் ஒரே கம்பார்ட்மெண்ட்ல ஏற வச்சிருக்கான் பாருங்க.” என சொல்ல மெல்லிய புன்னகையை பரிசாய் தந்து கருணை எப்படி எதிர்கொள்வது என தெரியாமலும் மனதில் புலம்பி தவித்தாள்.

அவள் மனதில்,

‘இவனை கண்டது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனாலும் என்ன சொல்வேன்? எப்படி சொல்வேன்? நான் எதற்காக இந்த ஊரை விட்டு வெளியேறுகிறேன் என தெரிந்தால் அதனை இவன் எப்படி எடுத்துக்கொள்வான்?’ என மனதில் ஆயிரமாயிரம் குழப்பத்துடன் அமர்ந்திருக்க, அவன் இறங்கி சென்றதை கூட அறியாத ஒருவளாய் இருந்தாள்.

அப்போது தான் சுயநினைவுக்கு வந்து அருகில் பார்க்க அங்கே கருணை காணவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து,

கருண் இரண்டு பொட்டலம் சாப்பாட்டுடன் வந்து அவள் அருகில் அமர்ந்து அவளை வற்புறுத்தி அதனையும் கொடுத்தான்.

கருண் ஆறுதலாக இருந்தாலும் அவனை ஏமாற்ற தகுதி அற்ற ஒருவளாய் விலகி செல்லவே விரும்பினாள்.

ஆனாலும்,

விதி வேறு மாதிரி விளையாட வேறு வழியின்றி மும்பையை நோக்கிய பயணத்தை அவனுடன் தொடர்ந்தாள்.

அந்த இரவு பயணத்தில் அவள் உடை விலகிய இடை கண்டு அவள் அருகில் இருந்தவர்கள் பார்வை எல்லாம் தவறான கோணத்தில் செல்ல, அவளோ நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்.

இதனை கவனித்த கருண் அவள் மீது ஒரு பெட் ஷீட்டை போர்த்திவிட இதுவரை இது போன்ற இரவு நேரத்தில் எத்தனையோ ஆண் மகன் அவளை இறுக்கி அணைத்ததை மறந்து அவன் அரணில் நிம்மதியாக தூங்கினாள்.

விபச்சாரியின் வாழ்வில் இரவு என்பது எப்போதும் சுகத்தை நோக்கி செல்லக்கூடிய ஒரு வேளை என்பதால் அவள் அவ்வப்போது நெளிந்து அவள் ஒரு விபச்சாரி என்பதை அங்கிருந்தவர்களுக்கு அவளை அறியாமல் தெரியப்படுத்த நினைத்தாலும், கருணின் கைகள் அவள் மனதை தீண்டி அந்த ஏக்கத்தை விட்டு வெளிவர பெரிதும் உதவியது.

அன்றைய இரவில் அவனுக்கு வந்த தூக்கத்தையும் மறந்து அவர்கள் இருவருக்கும் பாதுகாப்பாய் கருண் இருக்க இறுதியில் சென்று சேர வேண்டிய இடமும் வந்தது.

மும்பையில்,

“ஏங்க! மும்பையில எங்க நீங்க போகனும்? எந்த ஹாஸ்பிட்டல்?” என அவன் கேட்க, வசிஷ்டாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவள் சொல்லை இழுத்து மென்று விழுங்க, ஒரு மருத்துவமனை பெயரை சொல்லி அதுவா என கருண் கேட்டான்.

அவளும் ஆமாம் என தலையை ஆட்டினாள்.

“சரி வாங்க! நாம சாப்பிட்டு போகலாம்” என வினையனை அவன் தூக்கிக்கொள்ள முயல, “நீங்க எங்க வரீங்க? நாங்க போய் கொள்கிறோம். உங்களுக்கு சிரமம் வேண்டாம்.” என்றாள் வசிஷ்டா.

“இல்லைங்க! நான் அந்த ஹாஸ்பிட்டல் வழியா தான் போறேன். நான் உங்கள அப்படியே ஹாஸ்பிட்டல்ல விட்டு போறேன். அதுக்கப்புறம் ட்ரீட்மெண்ட் வரைக்கும் அடிக்கடி வந்து பார்க்குறேன்.” என சொல்ல, அவனை எப்படி தவிர்ப்பது என யோசித்தாள் வசிஷ்டா.

“இல்லை கருண்! நீங்க கிளம்புங்க. எங்களுக்கு இன்னும் 2 நாள் கழிச்சு தான் அப்பாயின்மென்ட். அதுவரைக்கும் ஏதாவது ஹோட்டல்ல தான் நாங்க தங்கனும்.” என சொல்ல, கருண் யோசித்தான்.

அவன் அமைதியாக இருக்க, “என்னாச்சு கருண்?” என்றாள் வசிஷ்டா.

“இல்லைங்க! நான் ஃபிரெண்ட தான் வீடு பார்க்க சொன்னேன். நான் இப்போ தனியா தான் தங்க போறேன். உங்களுக்கு சிரமம் இல்லைன்னா என் கூட நீங்க தங்கலாமே” என வார்த்தையை விழுங்கி மெல்ல கேட்டான்.

அவளும் முதலில் முடியாது என கூறினாலும் மும்பை அவளுக்கு புது இடம் என்பதால் கருணுடன் சேர்ந்து தங்க ஒப்புக்கொண்டாள்.

ஒரு புது ஆணுடன் அவள் தங்க சம்மதித்தாலும் மனதில் சிறிய சலனம்.

காரணம்,

எங்கே தன்னால் அவன் வாழ்வு பாதிக்கப்பட்டுவிடுமோ என மிகவும் பயந்தாள்.

கருண் போன் பேசிக்கொண்டே முன்னால் செல்ல அவளும் அவனை பின் தொடர்ந்தாள். வினையன் நன்றாக தூங்கி கொண்டிருக்க அவனை தோளில் போட்டு கொண்டு தூங்க வைத்தபடி நடந்தாள்.

கருண் நண்பன் இருவர் அவர்களுடைய பைக்கில் வர அவனை கண்டதும் கைகளை தூக்கினர். அவனும் பதிலுக்கு கையை அசைக்க, வசிஷ்டா அவனுடன் சேர்ந்து நடக்க தொடங்கினாள்.

அவர்கள் இருவரையும் கண்டதும் அவன் அரவணைப்பில் அவள் ஒளிந்து கொண்டாள்.

“மாப்ள! எப்படி இருக்க?” என விசாரித்தபடி வசிஷ்டாவை  இருவரும் பார்த்து, “நீ சொன்னது இவங்க தானா?” என்றனர்.

“ஆமாம் மாப்ள! நீங்க ரெண்டு பேரும் பைக்ல முன்னாடி போங்க. நான் உங்கள ஃபாலோ பண்ணி வரேன்.” என கூறி அவர்களிடமிருந்து ஒரு பைக்கின் சாவியையும் கருண் வாங்கி கொண்டான்.

அவர்கள் இருவரும் முன்னே செல்ல, பைக்கை ஸ்டார்ட் பண்ணிய கருண் மெல்ல அவளை திரும்பி பார்க்க வினையனை கைகளில் தாங்கியபடி அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்.

கருண் மெல்ல சென்றாலும் அவ்வழி குண்டும் குழியுமாக இருக்க, அந்த பள்ளங்களில் தூக்கி போட, அவளையும் மீறி அவளது கைகள் கருண் தோலை பிடித்தது. ஆனாலும், அதனை கண்டு கொள்ளாதவாறே கருண் சென்றான்.

அவர்கள் இருவரும் ஒரு அழகிய வீட்டின் முன்பு சென்று பைக்கை நிறுத்த, அதனை பின் தொடர்ந்து வந்த கருணும் பைக்கை மெல்ல நிறுத்தி மேலோட்டமாக அந்த வீட்டை பார்த்தான்.

“வசிஷ்டா! உள்ள போய் பாரு. பொண்ணுங்களுக்கு தான் வீட்ட பத்தி நல்லா தெரியும். வீடு பிடிச்சிருக்கானு பாரு!” என கருண் சொல்ல, அவளும் மகிழ்வுடன் தலையை ஆட்டிக்கொண்டு உள்ளே சென்றாள். அவன் அவளுக்காக கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை எண்ணி மனம் குளிர்ந்தாள். வினையன் அப்போதும் நன்றாக தூங்கி கொண்டிருந்தான்.

அந்த வீடு நல்ல விசாலமான காற்றோட்ட வசதியுடன் காணப்பட அவளை வசீகரித்தது.

அப்படியே வீட்டின் மாடிக்கு சென்றவள் அங்கிருந்து கருண்-ஐ பார்க்க, அவனோ ஏதோ ஒரு பார்சலை தன் நண்பர்களிடம் கொடுத்து பேசி கொண்டிருந்தான்.

அதன்பிறகு அவள் கீழ் இறங்கி வர, “என்ன வசிஷ்டா? வீடு பிடிச்சிருக்கா?” என கேட்க, “ரொம்ப  நல்லா இருக்கு” என்றாள் அவள்.

“அப்புறம் என்னடா! நீ இவங்கள பார்த்துக்க. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு இவங்க போனதும் நாங்க உன் கூட வந்துடுறோம்.” என சொல்ல, வசிஷ்டாவிற்கு வார்த்தையே வரவில்லை.

ஆம்,

அவள் இதுவரை சொன்ன அனைத்துமே பொய் என்பது அவனுக்கு தெரியாதல்லவா. இந்த இரண்டு நாட்கள் கழித்து எங்கே செல்வது என தெரியாமல் குழம்பி தவித்தாலும், அந்த இரண்டு நாளை அவளுக்கு பிடித்தார் போல் வாழ ஆசைப்பட்டாள் அவள்.

இரண்டு நாட்கள் நிறைவடைந்தது…

அந்த இரு நாட்கள் அவளுக்கும் வினையனுக்கும் புது வாழ்க்கை எனவே சொல்ல வேண்டும்.

இதுவரை அரணாக கருண் இருக்க, இனிமேல் தனக்கு யார் தான் இருக்க என அவள் எண்ணம் அலை பாய தொடங்கியது.

கருண் அவளையும், வினையனையும் அழைத்துக்கொண்டு அந்த மருத்துவமனைக்கு செல்ல, அங்கேயோ அப்படி ஒரு பேரில் இதுவரை எந்த குழந்தைக்கும் அட்மிசன் போடப்படவில்லை என கூறினர்.

“இல்லைங்க! நல்லா பாருங்க ப்ளீஸ்.” என இடப்பட்டியலில் இல்லாத ஒரு பெயரை தேட வற்புறுத்தினாள் வசிஷ்டா.

இறுதியில் தனியாக சென்றவள் அந்த நர்ஸிடம் பேசுவது போல் பாசாங்கு காட்டி விட்டு வர, கருண் அவளை பார்த்தபடியே நின்றான்.

“ஒன்னுமில்ல கருண். வினையனோட செல்ல பெயர்ல பதிவு செஞ்சிருக்காங்க. அதனால தான் யாருக்கும் தெரியல. என்னோட ஃபிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி தான் அட்மிசன் போட சொன்னேன். அதான் இப்படி பண்ணிட்டாங்க..” என சமாளிக்க, ஒரு பெருமூச்சு விட்டவன், “இப்போ ஓகே தான…” என்றான்.

“ஹூம் ஓகே தான். ஆனால் இன்னைக்கு இல்ல. நாளைக்கு” என பொய் சொல்லியபடி வழிய, “சரி! வா! சாப்டு நாம வீட்டுக்கு போகலாம்.” என அவளை அழைத்து சென்றான்.

அடுத்த நாள் காலை,

அவ்வீட்டை விட்டு செல்ல மனமற்றவளாய் மெல்ல உடை மாற்றிக்கொண்டு கிளம்பினாள்.

“கருண் நான் ரெடி போகலாமா?” என கேட்க, அவனை வீட்டின் உள்ளே எங்கே தேடியும் காணவில்லை. வினையனை தூக்கி கொண்டு அவள் மெல்ல வெளியில் வர கருண் ஒரு பையுடன் வெளிக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

“கருண்! நான் ரெடி! போகலாமா?” என கேட்க, மௌனமாக இருந்தவன் “ஹூம்” என்று கூறி உள்ளே செல்ல முற்பட்டான்.

அவன் முகம் வழக்கத்திற்கு மாறாக வாடி காணப்பட்டது.

வசிஷ்டா கதவுக்கு வெளியில் வர முயல, கருண் அந்த பையை வைக்க உள்ளே செல்ல இருந்தான்.

இருவரும் சந்தித்துக்கொண்ட அந்த புள்ளியில் அவனை மீறி அவளுடைய கையை திடீரென பிடித்தான் கருண்.

வசிஷ்டாவுக்கோ வார்த்தையே வரவில்லை.

அவன் கண்களை மெல்ல உற்று பார்க்க, அவள் தோளில் வினையனும் கிடந்தான்.

சட்டென,

“எதுக்கு வசிஷ்டா என்ன ஏமாத்துற?” என அவன் கேட்க, அவளுக்கு தூக்கிவாரி போட்டது. வினையனை தூங்க வைத்துவிட்டு மெல்ல வந்து, “என்ன சொல்றீங்க கருண்? எனக்கு ஒன்னும் புரியல” என்றாள் வசிஷ்டா.

அப்போது,

அவன் கையில் இருந்த பையை பிரித்து அந்த டைரியை அவளிடம் கொடுக்க அதனை கண்ட அவளுக்கு பெரும் அதிர்ச்சியாகவே அந்த தருணம் அமைந்தது.

“இ………” என சொல்லை இழுத்து, “இந்த டைரி உங்களுக்கு எப்படி கிடைச்சுது?” என அவள் தயங்கியபடி கேட்டாள்.

உடனே கருண், “சொல்றேன்! அதுக்கு முன்னாடி உனக்கு என்ன பிடிச்சிருக்கா?” என கேட்க, அவள் அமைதியாகவே இருந்தாள்.

இப்போது கருண் இதற்கு முன் நடந்தவற்றை அவளிடம் கூற தொடங்கினான்.

ஒரு நாள்,

என் நண்பன் கையில் ஒரு கைக்குட்டை இருந்தது. அதில் விவி (வசிஷ்டா வினையன்) என எழுதி இருந்தது. இதற்கு முன்பு இதை எங்கேயோ பார்த்து இருக்கிறோமே என நான் யோசிக்க அப்போது தான் அது உன்னிடம் என்பதை நான் தெரிந்துக்கொண்டேன்.

கருண்: டேய்! இந்த கர்சீஃப் எப்படி உன் கைக்கு வந்துச்சு?

உடனே அவன் நண்பன், “அத ஏன்டா கேட்குற! நேத்து நைட்டு ரெட்லைட் ஏரியாவுக்கு போனேன். திடீர்னு போலீஸ் வந்துட்டாங்க. அவங்க துரத்தும் போது முகம் தெரியாம இருக்க இந்த கர்சீஃப்ப கட்டி  மறைச்சிட்டு தான்டா ஓடி வந்தேன்.” என்றான்.

இதனை கேட்ட நான் அப்படியே வார்த்தையே வராது நின்றேன். என்ன! வசிஷ்டா ஒரு விபச்சாரியா? என குழப்பத்துடன் ஒரு நாள் நீ வாழ்ந்து வந்த அந்த விபச்சார இடத்திற்கு சென்றேன். பொய்யான பெயரை பதிவு செய்தேன். என் நண்பனிடம் எந்த அறை என கேட்டு தெரிந்துக்கொண்ட நான் அந்த அறையின் உள்ளே நன்றாக தேடி பார்த்தேன். அங்கிருந்து இந்த டைரியை தெரியாமல் எடுத்து வந்தேன்.

வீட்டில் சென்று இந்த டைரியை படிக்க அப்போது தான் உன் வாழ்க்கையில் இதுவரை என்ன நடந்தது என எல்லாமே எனக்கு தெரிந்தது. நிதுனால் நீ இழந்த வாழ்க்கையை நான் தர ஆசைக்கொண்டேன்.

அதற்கு இந்த இடத்தை விட்டு உன்னை எப்படியாவது அப்புறப்படுத்த நினைத்த நான் அந்த விவர அட்டையில் விபச்சார விடுதியில் நிதுன் பெயரை எழுதினேன்.

ஆம்,

அவன் பெயர் (நிதுன்) எழுதினால் தான் அந்த விபச்சார வாழ்வை விட்டு நீ வெளிவருவாய் என நான் நினைத்தேன். நான் நினைத்தது போலவே நீ மும்பைக்கு செல்ல திட்டமிட்டிருப்பதையும் நான் தெரிந்துகொண்டேன்.

உனக்கு அருகில் இருக்கும் சீட்டை நான் புக் செய்தேன். பயணத்தில் உன்னிடம் உண்மையை சொல்லவே நான் நினைத்தேன். ஆனால் வினையன் வாழ்வுக்காக மருத்துவமனையை தேடி நீ செல்கிறாய் என சொன்னதும் உண்மையை சொல்ல இது சரியான சமயம் அல்ல என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

அதன்பிறகு நாம் மூவரும் தங்க என் நண்பர்களை வீடு ஏற்பாடு செய்ய சொன்னேன். அவர்கள் எனக்கு உதவியாக இருக்க நீ எப்போது உண்மையை என்னிடம் சொல்ல போகிறாய் எனவும் நான் காத்திருந்தேன். மருத்துவமனைக்கு நாம் செல்ல அங்கே அப்படி ஒரு பெயரே பதிவு செய்யப்படவில்லை என தெரிந்ததும் தான் நீ வினையனுக்காக வந்ததாக சொன்னது பொய் என புரிந்தது.

போதும் வசிஷ்டா! உன் வாழ்வில் நீ இழந்தது எல்லாம் போதும்! என்னோடு வாழ நீ தயாரா?”

என அவன் கேட்க, வசிஷ்டாவுக்கு அழுகை தான் முதலில் வந்தது.

சட்டென, அவனை இறுக்கி பிடித்து கதறி அழ, அவன் கன்னத்தில் முத்த மழையும் பொழிந்தாள்.

ஆனாலும், அவளுடைய மனசாட்சி உறுத்தியது.

அதனால், சட்டென விலகி., “இல்ல கருண்! இது செட் ஆகாது. எத்தனையோ பேர் என் கூட வாழ்ந்து இருக்காங்க. அப்படி இருக்கும்போது எப்படி உன்ன நான் ஏத்துக்க முடியும். உனக்கு நல்ல வாழ்க்கையா அமையும் கருண். நான் உனக்கு வேண்டாம். நான் அசிங்கம். என் கூட சேர்ந்து உன்னால எப்போதும் சந்தோஷமா வாழவே முடியாது கருண்.” என அவனை பார்க்க மனமில்லாமல் கீழே குனிந்தபடியே கூறினாள்.

“எல்லாமே தெரிஞ்சு தான் நான் இப்படி சொல்றேன் வசிஷ்டா. செக்ஸ்க்காக மட்டும் நான் உன்ன விரும்பல. ஒருவேள நான் உன்ன தொடுறதுனால நீ முகம் சுளிப்பன்னா கண்டிப்பா நான் உன்னோட அனுமதி இல்லாம உன்ன தொடவே மாட்டேன். நீ இழந்த வாழ்க்கைய நான் உனக்கு தரேன் வசிஷ்டா. உனக்கு சம்மதமா?” என கேட்க, அவள் வேகமாக அவன் கண்களை பார்த்தாள்.

அதில் கொஞ்சம் கூட பொய் தெரியவில்லை.

“உன்ன நான் ஏன் முன்னாடியே பார்க்காம போனேன். நிதுன நான் பார்க்கிறதுக்கு முன்னாடி உன்ன முதல்ல பார்த்து இருந்தா எப்படி இருந்திருக்கும்!” என அவள் கேட்க, உடனே அவன்., “இனிமேல் நாம எப்படி வாழ போறோமோ அப்படி இருந்திருக்கும்.” என்றான்.

இந்த வார்த்தையை அவள் கேட்டவுடன் தெரிந்தே வேகமாக இந்த முறை கட்டிப்பிடிக்க அவனும் விடாமல் இறுக்கி அணைத்து முத்தம் தந்தான். “உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. ஆனால் என்னோட வாழ்க்கைய நினைச்சு தான் உன்ன விட்டு விலகி போனேன்.” என சொல்ல, “உன் தலைமுடி வெள்ளை ஆனாலும் உன்ன கேட்காம என் கை இதுக்கப்புறம் உன்ன தீண்டாது.” என்றான் அவன்.

அவள் மெல்ல நிமிர்ந்து அவன் மார்பில் செல்லமாக அடித்து சிரிக்க, அவனும் இறுக்கி அணைத்தபடி சிரித்தான்.

“இனிமேல் நான் தான் உனக்கு அம்மா, அப்பா, ஆசான், காதலன், நண்பன்… எல்லாமே என அவன் சொல்ல” அவள் கண்களில் மெல்ல நீர் துளிர்விட்டது.

“அப்படி என்றால்…” என அவள் கேட்க, “நீ தான் என் உலகமடி! இந்த டைரியை உன் அப்பாவுக்கு அனுப்ப தான நிதுன் முயற்சித்தான். நான் தான் உனக்கு தந்தை என்றால் நான் படித்ததில் தவறு இல்லை தானே…” என அவள் முகம் பார்த்து சிரித்தான்.

அவள் அந்த டைரியின் இறுதி பக்கத்தில், “ஃபைனலி, டைரி சக்ஸஸ்ஃபுல்லி ரீச்டு டூ மை ஃபாதர் வித் மை கம்ப்ளீட் லைஃப் (FINALLY DIARY SUCCESSFULLY REACHED TO MY FATHER WITH MY COMPLETE LIFE) என எழுதி அதனை கருணிடம் காட்ட காற்று புகாத அளவுக்கு அவளை அணைத்து அன்பை வெளிப்படுத்தினான்.

அதன்பின்னர்,

வசிஷ்டாவின் ஓவிய கனவை அவன் நிறைவேற்ற, அவன் இலட்சியத்தின் முதல் ரசிகையாய் வசிஷ்டாவும் வலம் வர, நாம் இருவர் நமக்கு ஒருவர் என வினையனுடன் வாழ்வை அழகாக வாழ்ந்தனர். செக்ஸ் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் உலகில் கருண் வெள்ளை நிற தலைமுடி கொண்டு நிதானமாய் அவளுடன் வாழ்ந்தான்.

பிறப்புறுப்பு என்பது தான் வாழ்க்கை எனில், வாழும் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும்…

ஒரு பெண்ணை உடலாற நேசிப்பதை மறந்து மனதார நேசியுங்கள். அவள் இதயம் மட்டுமல்ல… உங்கள் இதயமும் கூட எட்டி பார்த்து ஏங்கும். ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் நீங்கள் இருவரும் இப்படி ஒரு அழகிய ஜோடியாகவே சேர வேண்டுமென ஏங்கும். சந்தேகம் வாழ்வை சிதைத்துவிடும்.

ஆதரவு தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

முற்றும்!!!

அன்புள்ள

பாலகார்த்திக் பாலசுப்பிரமணியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.