6e9cbbae-0add-4f59-8977-e482f97748c8

கருச்சிதைவு போதுமே இறைவா!

—————————————————————-

காட்சிப்படுத்தும் விதம்

கண்களை மறைக்க

காரியம் சாதிக்க

எதையும் செய்வான்

கற்றதனால் ஆனதனை

பறிபோனதோ கற்பதனை

பெற்றதனால் வெம்பி அழ

பிள்ளை என்னடா பாவம் செய்தது!

பிறப்புறுப்புடன் படைப்பது தான்

பிரம்மன் செய்த குற்றமென்றால்

பிறந்தது போதும் மானுடனாக

படைக்க இனியும் ஒன்றுமில்லை

பச்சிளம் குழந்தை பலியுமில்லை

கற்றுக்கொடுக்க கல்வியுமில்லை

கண்ணை மூடி வேண்ட கடவுளுமில்லை

ஆசையில்லை ஆடையில்லை

ஆப்பிள் கீழே விழவும் இல்லை

ஆதாம் ஏவாள் காதல் இல்லை

மீண்டும் பிறக்க மனமும் இல்லை

முன்னோடி வாழ்ந்த இந்தன் மண்ணில்

கடவுளுக்கும் கருணை இல்லை

இருந்திருந்தால் இன்று இறந்திருக்குமா?

கற்கும் கல்வி என்னவென தெரியாமல்

காமுகன் நடத்திய பாடத்திற்கு

கன்னி பெண் இதயம் இரையானதோ!

இறைவா! இது என்ன கொடுமை!

இதற்கு ஏன் சம்மதித்து

பிறப்பு சான்றிதழை நீ தந்தாய்?

இறப்பு சான்றிதழும் உன் கண் முன்னால்

எழுதப்பட்டு போனது ஏனோ?

எடுத்துக்கொள் இனிமேல்

கருச்சிதைவு எனும் கானம் தொடர

கதறி அழுகும் பெண்குரல்

வளர்க்கும் முன்னே

வடுவாய் சேரட்டும்…

எல்லாம் ஒன்றுதானே…

#Justice for Ashifa

– Balakarthik Balasubramanian Novelist

கம்பியில்லா காதல் பயணம்

love_wireless

கண் கண்ட பெண் மனதை

கடைசி வரை புதுப்பிக்க

தொடங்குகிறது

கம்பியில்லா காதல் பயணம்

விழி வழியே ஊடுருவ

வில் ஏந்த மறந்த நீ

என் நெஞ்சையும் தொலைத்தாய்

இணைப்புகள் தொடர்புக்கு அப்பால் செல்ல

அம்பானியின் தந்தனாதன் அவசியம் தானோ!

உன் பார்வையில் நான் விழ

நீ சென்ற பிறகும் எழ மறுக்கிறதே

சேர் இட்டை  (Share it) ஆன் செய்து

மனதை பரிமாறிவிட்டாயோ?

யாரிடம் பேசினாலும்

நீ தான் தெரிகிறாய் என்றால்

டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்து

டிவிட்டரில் என் உலகமாய் நீ தெரிந்தாயோ?

முகப்புத்தகத்தில்  முற்றிலும் தொலைந்துவிட்டால்

நாளை நம் முகமே நமக்கு மறந்துவிட

அகம் மட்டும் அப்புறம் எப்படி நினைவில் இருக்கும்?

வாழ்க்கை என்பது

நவீனத்தை நசுக்கும் என புரிந்தால்

நாளை உன்னிடம்

நான் காணும் வெட்கத்தை

நான் மட்டுமே ரசிப்பேன்!

இன்ஸ்டாகிராம் இனி எதற்கு என தோன்ற

அன்-இன்ஸ்டால் செய்தாலும்

ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

உண்மையான காதலுக்கு

90 நாள் டாக்டைம்மை விட

90 நொடி பிரிதலின் புரிதலே போதுமானது

நவீனத்தின் வளர்ச்சியை கண்டு வியக்கும் முன்

மனதை முழுவதுமாக பரிமாறிக்கொள்ளுங்கள்

மார்க் ஜுக்கர்பெர்க்கும்

மண்டையை பிய்த்து கொள்வான்

உண்மையான மன பரிமாற்றத்தின் முன்னால்

நாம் உருவாக்கிய பொய் முக கணக்கெல்லாம்

தோற்று போகும் என்பதை

தோல் தாங்கி ஏற்றுக்கொள்வான்.

தொடரட்டும் காதல் பயணம்

மனிதன் கண்டுபிடித்த மனம் எனும்

முதல் தொலை தொடர்பு தகவல் மூலம்

அனைவரது வாழ்விலும்…

–   பாலகார்த்திக் பாலசுப்பிரமணியன்

அன்னையர் தின சிறப்பு கவிதை

mothers_day_special
யார் இவள்?
கள்ளி பாலை கொடுத்து
கொள்ளி வைக்க துணிந்த உலகில்
கொள்ளை இன்பம் கொண்டு
தீமையை கொன்று தின்றவள்.
யார் இவள்?
மாதவிடாய் மாதந்தோரும் வந்தபோதும்
மானுடனை கடந்து மறுவாழ்வு அடைந்து
காகிதம் மறந்து கண்ணீரால் மனதை துடைத்தவள்.
யார் சொன்னது?
பெண்ணின் உடம்பில் அழுக்கு சேர
அவளை இந்த உலகம் தீண்டாமை பேரில்
மாதம் மூன்று நாள் ஒதுக்க வேண்டுமென…
ஒதுக்க வேண்டியது
பெண்ணை அல்ல மானுடா
உனக்குள் தோன்றிய தவறான உணர்வால்
உற்று பார்க்கும் உன்னை தான்…
கனவுகளுக்கு போடப்பட்ட வேலியை மறந்து
வெளி உலகிற்கு வேடிக்கையாக வாழ்ந்தால்
வேசி என பார்ப்பவன் பச்சை குத்துவான்.
விளைவு,
படைத்த பிரம்மனையும் குத்தம் சொல்கிறாள்
குத்த வைத்து கண்ணாடி முன்பு தன் அழகை கண்டதால்…
கனவுலகில் வாழ்ந்த அவளை
கனவு நாயகன் கைப்பிடிக்க
காம பார்வையில் கலைந்து போவது
கன்னி பெண்ணவள் ஆடை மட்டும் தானா?
அவள் கனவும் தானே!
அதற்கு ஆறுதல் பரிசாக
அவள் வயிற்றில் ஒரு உயிரை சுமக்க,
அவனாவது தன் ஆசையை நிறைவேற்றுவான் என
ஏங்குகிறாள் தாயவள்.
அறுசுவை உணவுடன் அவள் அன்பை பரிமாற
அவனோ வலியோர் செய்த சதியால்
முதியோர் இல்லத்தில் அவளை சேர்த்து சேர்க்கிறான்.
அவளின் காலமது அறியா முகத்தின் அன்பில் பிணைய
ஒரு வாய் சாதத்தை வாயில் வைத்து திணிக்கும்போது
தண்ணீருக்கு பதிலாக கண்ணீரால் தாகம் தீர்க்கிறாள்.
ஒன்றை அறிவாயா பிள்ளை பெற்றவனே!
அவளை நீ அனாதையாக விட்டதனால்
கண்களில் நீர் சுரக்கவில்லை.
நீ உண்டாயோ எனும் நினைப்பில்
புத்தி பேதலித்து பித்துப்பிடித்து அவள் அலைய
கல்லறை காணும் முன்பு
காதலை நீ ஏற்றுக்கொள்ள மாட்டாயா எனவும் ஏங்குகிறாள்.
ஏற்றுக்கொண்டால் அவள் அன்புக்கு ஏங்கிய ஒருவனை
அவள் கண்கள் வழியாக கண்டிப்பாய் காண்பாய்
அவன் வேறு யாருமல்ல!
அவளுடன் முதியோர் இல்லத்தில் நாளை கழித்து
அறுபதாம் கல்யாணத்தில் அவளை அணைக்கும்
உன் தந்தை தான்…
பெண்ணாக உருவெடுத்து
பூப்பெய்தலால் ஆசைகளை பூட்டிவைத்து
காட்சி பொருளாய் பார்க்கும் உலகில்
நிமிர்ந்த நடையால் நாணத்தை நசுக்கி
நானும் உன் அன்னை போன்றவள் தான்
என்னையும் அப்படி பாரடா என ஏங்கி
கடைசி வரை கல்லறையில் வாழ
வலியால் மகிழ்ச்சியை வென்று
வாழும் ஒவ்வொரு அன்னைக்கும்
என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்…
Balakarthik Balasubramanian Novelist

 

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

IMG_20171217_101259_HDR 1

தும்பிக்கை வச்சவன
கும்பிட்டு பாருங்க
தொல்லைகள் ஓடி போகும்
தூரம் தானுங்க!
 
நம்பிக்கை வச்சிவன
கும்பிட்டு பாருங்க
நல்லதே நடந்தாலும்
ஆச்சரியம் ஏனுங்க!
 
கொழுக்கட்டை புடிச்சிவன
கும்பிட்டு பாருங்க
கொடுமைகள் பயந்தோட
கொடுக்கும் வாழ்வுங்க!
 
தோப்புக்கரணம் போட்டிவன
கும்பிட்டு பாருங்க
துக்கத்த துரத்தி துரத்தி
தோலுரிப்பான்ங்க!
 
தொப்பை வச்ச எங்க அண்ணன
கும்பிட்டு பாருங்க
தொட்டதெல்லாம் பொன்னாக
வாழ்வில் மாறுங்க!
 
ஆனை முகத்தோன
கும்பிட்டு பாருங்க
அரக்கன் பிடி பறக்குமடி
தூசி போலுங்க!
 
பிள்ளையார்பட்டி போய் இவன
கும்பிட்டு பாருங்க
பிடிச்ச பித்து எல்லாமே
நொடிச்சு போகும்ங்க!
 
உச்சி மலை ஏறி இவன
கும்பிட்டு பாருங்க
உள்ளம் சிலிர்க்க திரும்பிவர
இறங்கும் பாதம்ங்க!
 
ஈசனடி சேர்ந்தவன
கும்பிட்டு பாருங்க
இனிமேலும் காலம் பொறக்கும்
காத்திருப்போம்ங்க!
 
பார்வதி பையனவன
கும்பிட்டு பாருங்க
பார்த்த பாரமெல்லாமே
பாதையாகும்ங்க!
 
வெற்றி பொங்கி வாழ்வில் வழிய
கும்பிட்டு பாருங்க
தோல்விய தான் தாங்கும் சக்தி
தந்திடுவான்ங்க!
 
தலை மேல கைய வச்சு
கும்பிட்டு பாருங்க
தலைக்கனம் எல்லாமே
தவழ்ந்து போகும்ங்க!
 
தலையில தான் குட்டிக்கிட்டு
கும்பிட்டு பாருங்க
துணையாக உடன் இருந்து
தோல் கொடுப்பான்ங்க!
 
மூஞ்சூறில் வந்தவர
கும்பிட்டு பாருங்க
முடியாத காரியமும்
முடிஞ்சு போகும்ங்க!
 
இலை ஏறி வந்தவர
கும்பிட்டு பாருங்க
இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளி
ஏற்றும் தானுங்க!
 
வெள்ளிக்கிழமை விளக்கு ஏத்தி
கும்பிட்டு பாருங்க
வெட்டவெளி பார்த்த கஷ்டம்
வெடிச்சு வீழும்ங்க!
 
சன்னதிய சுத்தி வந்து
கும்பிட்டு பாருங்க
சங்கடமும் சறுக்கி ஏறும்
சந்தோசம் தானுங்க!
 
குழந்தை மனசு கொண்டவன
கும்பிட்டு பாருங்க
குறை எல்லாம் தீர்த்து வைக்க
குரல் கொடுப்பான்ங்க!
 
குட்ட குட்ட குனிஞ்சு இவன
கும்பிட்டு பாருங்க
பட்ட கஷ்டமெல்லாமே
பறந்து ஓடும்ங்க!
 
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் (13/09/2018)
 
Balakarthik Balasubramanian Novelist

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.